பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (ஆங்கில மொழி: Popular Front of India, PFI) என்பது இந்தியாவில் செயல்படும் ஒரு இஸ்லாமிய அமைப்பாகும்.[3][4][5][6][7]பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக இந்திய அரசு அறிவித்ததுடன், உபா சட்டத்தின் கீழ் 28 செப்டம்பர் 2022 அன்று, இவ்வமைப்பின் செயல்பாடுகளை 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
சுருக்கம்PFI
முன்னோர்நேசனல் டெவலப்மெண்ட் பிரண்ட்
உருவாக்கம்22 நவம்பர் 2006; 18 ஆண்டுகள் முன்னர் (2006-11-22)
ஒன்றிணைந்ததுகர்நாடக கண்ணிய மன்றம், மனித நீதிப் பாசறை
வகைஇஸ்லாமிய ஆர்வலர் அமைப்பு[1][2]
தலைமையகம்G-66, இரண்டாம் தளம், ஷாஹின் பாக், கலிண்டிகுஞ்ச், நொய்டா சாலை, புதுதில்லி
சேவை பகுதி
இந்தியா
தலைவர்
ஓஎம்ஏ அப்துல் சலாம்
துணை தலைவர்
இ.எம் அப்துல் ரகிமான்
பொதுச்செயலாளர்
அனிசு அகமது
வலைத்தளம்www.popularfrontindia.org
கருத்துகள்செப்டம்பர் 28, 2022 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தடைசெய்யப்பட்டது

இயக்க பின்னணி

2006 இல் நேசனல் டெவலப்மெண்ட் பிரண்ட் என்ற அமைப்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பாக மாறியது. பின்னர் தமிழகத்தில் மனித நீதிப் பாசறை, கர்நாடகத்தில் கர்நாடக கண்ணிய மன்றம், கோவாவில் குடிமக்கள் மன்றம், ராஜாஸ்தானில் கல்வி மற்றும் சமுதாயச் சமூகம், மேற்கு வங்கத்தில் நகரிக் அதிகர் சுரக்‌ஷா சமீதி, மணிப்பூரில் லிலிங் சமூகக் மன்றம், ஆந்திரப் பிரதேசத்தில் சமூக நீதிக் கழகம் போன்ற அமைப்புகள் இதனுடன் இணைந்தன.

செயல்பாடுகள்

இந்த அமைப்பு இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு, இஸ்லாமியத் தனிநபர் சட்ட நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் முஸ்லீம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றில் செயல்பட்டு வருகிறது.[8][9][10] இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009 ஆண்டு தொடங்கப்பட்டது.[11][12]

தேசிய மனித உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து மனித உரிமை மீரல்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது.[13][14] மிஸ்ரா ஆணையத்தில் (சமய சிறுபான்மையோருக்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம்) இஸ்லாமியருக்கு இடதுக்கீடு வழங்கக்கோரிப் பிரச்சாரங்களை நிகழ்த்தியது.[15][16] 2012 இல் அப்பாவி குடிமக்களை உபா சட்டத்தில் கைது செய்யப்படுவதாகப் போராட்டங்கள் நடத்தியது.[17][18]

சேவைகள்

தமிழ்நாட்டில் கொரோனா காலக்கட்டத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணிகளில் இந்த அமைப்பினர் ஈடுப்பட்டனர். புதுச்சேரி, கேரளா, மகாராஸ்டிரா, பீகார், கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களிலும் இந்த பணிகள் செய்தனர்.[19]

குற்றச்சாட்டுகளும், மறுப்புகளும்

2015 மார்ச் மாதம் தேசியப் புலனாய்வுத்துறை 2011 மும்பை குண்டு வெடிப்புகள், 2012 புனே குண்டுவெடிப்பு மற்றும் 2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள் போன்ற நிகழ்வுகளில் இந்த அமைப்பு தொடர்புடையது என்றது.[20] ஜார்ஜண்ட் மாநில அரசு, இவ்வமைப்பைத் தடை செய்தபோது 2018 இல் உயர்நீதிமன்றம் அத்தடையை விலக்கியது.[21]

இந்திய நாட்டுக்கு எதிராகவும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும்,[22][23] இதர இஸ்லாமிய ஆயுதக்குழுக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும்,[24] ஆயுதங்கள் கொண்டிருப்பதாகவும்,[25][26][27] கடத்தல், கொலை,[28][29] மிரட்டல்,[30][31][32][33] வெறுப்புப் பேச்சு,[34][35][36][37] மதக்கலவரம்,[38][39] லவ் ஜிகாத்[40] இதர மதச்செயல்பாடுகளில் ஈடுபட்டதாக இவ்வமைப்பின் மிது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சர்ச்சைக்குரிய வகையில் கேள்வித்தாளைத் தயாரித்த கேரள பேராசிரியர் டி. ஜெ. ஜோசப் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புள்ளதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.[41][42][43][44][45][46][47][48]

2012 இல் உயர்நீதிமன்றத்தில் இவ்வமைப்பின் செயல்பாடுகள் இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் போல நாட்டின் பாதுகாப்பில் அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறிப் பேரணிக்குத் தடைசெய்ய கேரள அரசு கூறியது.[49][50][51] ஆனால் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.[50][51][52]

கேரளா

2013 ஏப்ரல் இல் கண்ணூர் அருகே நரத் என்னுமிடத்தில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டதற்காக 21 செயல்பாட்டாளார்களைக் கைது செய்தது.[25][26][27] அதை மறுத்து அது யோகப் பயிற்சியில் தான் ஈடுபட்டதாக அதன் தலைவர் கூறினார்.[25] 2013 மே 18 முதல் தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்துவருகிறது.[53] இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் போன்ற அமைப்பினர்கள் 27 நபர்களின் கொலை வழக்கில் இவ்வமைப்பு தொடர்புள்ளதாக 2012 இல் கேரள அரசு கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.[54][55] அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பைச் சேர்ந்த சச்சின் கோபால் என்ற மாணவர் மற்றும் விஷால் என்ற மாணவர் தலைவரை இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டதாக விசாரணை நடந்தது.[56][57][58] மத நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தி, கேள்வித்தாள் தயாரித்த சர்ச்சையில் 2011 ஜனவரியில் டி. ஜே. ஜோசப் என்ற கேரள பேராசிரியரின் கைகள் வெட்டப்பட்டன. இத்தாக்குதல் வழக்கில் இவ்வமைப்பினர் பலர் மீது கேரளக் காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது.[59][60] 2015 மே 8 ஆம் நாள் அவ்வமைப்பினர் பதின்மூன்று பேரின் குற்றத்தை உறுதி செய்து தண்டனை வழங்கியது.[61]

கர்நாடகம்

கருநாடக, மைசூர் மஹாஜன் கல்லூரி வளாகத்தில் 2011 ஜூன் 8 சுதீந்திரா மற்றும் விக்னேஷ் என்ற இருவர் கடத்திப் பணம் மிரட்டல் செய்ததாகச் சிலர் கைது செய்யப்பட்டனர்.[30][31][32][33] 2015 பிப்ரவரியில் கார்நாடக மாநில சிமோகா மாவட்டத்தில் இவ்வமைப்புச் செயல்பாட்டளருக்கும் மூன்று நபர்களுக்கும் நடந்த சண்டையில் விஸ்வநாத் ஷெட்டி என்பவர் இறந்தார், இதைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டு, 144 தடை உத்தரவு போடப்பட்டது.[62][63][64][65][66][67]

தமிழ்நாடு

2019 பிப்ரவரி 6 ஆம் நாள் தமிழ்நாட்டுத் திருபுவனத்தில் மதமாற்றத்திற்கு எதிராகப் பேசிய பாமக கட்சியைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் கைகள் வெட்டுப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இவ்வமைப்பினர் மீது குற்றம்சாட்டு எழுந்தது.[68] தமிழ்நாட்டில் இவ்வமைப்பைத் தடை செய்யக்கோரி இந்து முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, நீதிமன்றம் 2018 ஜூன் மாதத்தில் தள்ளுபடி செய்தது.[69]

மறுப்பு

தங்கள் மீது போலிக் குற்றச்சாட்டைகளை பல ஊடகங்களும் அமைப்புகளும் செய்வதாக 2012 இல் தேசிய அளவில் பிரச்சாரம் செய்தது.[70] அதே ஆண்டில் 10 செய்தித்தாள்கள் மீது இந்தியப் பத்திரிக்கை மன்றத்தில் புகார் அளித்தது.[71]

வங்கிக் கணக்குகள் முடக்கம்

2014க்கு பின் இந்த அமைப்பை சேர்ந்தவர்களின் வங்கி கணக்குகளுக்கு பல கோடி முதலீடு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதை அமலாக்க இயக்குனரகம் தீவிரமாக கண்காணித்து வந்தது. கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் போராட்டத்திற்கும் இந்த அமைப்பின் மாணவர் பிரிவுதான் காரணம் என்று கர்நாடக பாஜகவினர் புகார் தெரிவித்தனர். 2 வருடங்களுக்கு முன் இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பதவி வகித்த ரவூப் செரீப் கைது செய்யப்பட்டார். அவரின் வங்கி கணக்கில் பல கோடி முதலீடு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது. அதோடு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இந்த அமைப்பின் பல்வேறு கணக்குகளில் கணக்கில் வராத 100 கோடிக்கும் அதிகமான பணம் வைப்ப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளதை தெரிவித்தது. இந்தியாவில் நடந்த குடியுரிமை சட்ட எதிரிப்பு போராட்டங்கள், தில்லி கலவரம் ஆகியவற்றில் இந்த அமைப்பிற்கு தொடர்பு உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது.

இந்த நிலையில்தான் 1 சூன் 2022 அன்று, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகளில் மொத்தமாக ரூபாய் 68.62 இலட்சத்தை அமலாக்கத்துறை முடக்கியது.[72] [73]

இந்தியாவில் தடை

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக இந்திய அரசு அறிவித்ததுடன், உபா சட்டத்தின் கீழ் 28 செப்டம்பர் 2022 அன்று, இவ்வமைப்பின் செயல்பாடுகளை 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது. மேலும் இதனுடன் தொடர்புடைய அமைப்புகளும், சட்ட விரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதன் செயல்பாடுகளும் ஐந்தாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.[74][75][76]

பின்னணி

இந்தியாவின் பல மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 95 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை 22 செப்டம்பர் 2022 அன்று ஒரே நாளில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

மேற்கோள்கள்

  1. Emmerich 2019.
  2. Santhosh & Paleri 2021, p. 574: "Contrary to its claims of being non-religious in character, the PFI is often found to deploy radical Islamic identity for grassroot mobilization and has been accused of engaging in a series of violent incidents with specific religious motifs.".
  3. "PFI spreading tentacles to Andhra,says police chief", Indian Express, 12 August 2010
  4. "Kerala Police unmasks PFI's terror face".
  5. "HuJi, Popular Front of India under lens for hate messages - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2016-09-09.
  6. "In a pluralistic part of India, fears of rising Islamic extremism". washingtonpost.com. Washingtonpost.
  7. "Tehelka - India's Independent Weekly News Magazine". archive.tehelka.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-09-09.
  8. Concern in govt over PFI’s growing outfits, spread, shishir gupta, Tue 5 Apr 2011, indianexpress.com
  9. "Muslim bodies float front". The Hindu (Chennai, India). 2006-12-12 இம் மூலத்தில் இருந்து 2007-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001061950/http://www.hindu.com/2006/12/12/stories/2006121201960500.htm. பார்த்த நாள்: 2007-02-21. 
  10. "Popular Front of India floated". Webindia123. 2006-12-10. http://news.webindia123.com/news/articles/India/20061210/532982.html. 
  11. "On the back of a good showing, SDPI sets its sights higher". The Hindu. 12 May 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/on-the-back-of-a-good-showing-sdpi-sets-its-sights-higher/article4707953.ece. பார்த்த நாள்: 17 April 2014. 
  12. "New Party Formed". Times of India. 2009-08-11. Archived from the original on 2011-08-11. பார்க்கப்பட்ட நாள் 2010-08-11.
  13. 2 April 2012 - 10:24am (2012-04-02). "NCHRO asks govt to repeal anti-people laws, frame rules for Human Rights Act 1993". TwoCircles.net. பார்க்கப்பட்ட நாள் 2014-04-15.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  14. "Serving Mangaloreans Around The World!". Mangalorean.Com. Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2014-04-15.
  15. Hyderabad Deccan News (2010-02-03). "National campaign for Muslim reservation launched in Pune". Newswala.com. Archived from the original on 2016-01-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-15.
  16. "PFI's march for Muslim Reservation". Milligazette.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-15.
  17. "Popular Front of India plans month-long campaign to highlight plight of jailed Muslims - The Times of India". Articles.timesofindia.indiatimes.com. 2012-07-11 இம் மூலத்தில் இருந்து 2013-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029214413/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-11/india/32632277_1_pfi-public-meetings-muslims. பார்த்த நாள்: 2014-04-15. 
  18. "Popular Front's campaign starts - The Times of India". Articles.timesofindia.indiatimes.com. 2012-10-13 இம் மூலத்தில் இருந்து 2013-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029213407/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-13/mangalore/34430508_1_pfi-e-m-abdul-rahiman-popular-front. பார்த்த நாள்: 2014-04-15. 
  19. "How Volunteer Groups Are Helping Municipalities Across the Country With COVID-19 Funerals". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
  20. "Popular Front of India’s role in 2011 Mumbai, 2012 Pune, 2013 Hyd blasts found: Intel agencies". The Times of India. 27 March 2015. http://timesofindia.indiatimes.com/india/Popular-Front-of-Indias-role-in-2011-Mumbai-2012-Pune-2013-Hyd-blasts-found-Intel-agencies/articleshow/46710055.cms. பார்த்த நாள்: 26 June 2015. 
  21. "HC quashes ban on Popular Front of India in Jharkhand". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/ranchi/hc-quashes-ban-on-popular-front-of-india-in-jharkhand/articleshow/65564588.cms. பார்த்த நாள்: 7 February 2019. 
  22. "Inside a Mangalore jail, two deaths and a communal crack". www.hindustantimes.com/. 3 November 2015.
  23. "NIA report on Popular Front of India’s ‘terror links’ on government table" (in en-US). The Indian Express. 2017-09-12. http://indianexpress.com/article/news-archive/nia-report-on-popular-front-of-indias-terror-links-on-government-table-4839296/. 
  24. "PFI, NDF Involved in CPI(M), RSS Cadres' Murders: Kerala". News.outlookindia.com. Archived from the original on 8 ஏப்பிரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்பிரல் 2014.
  25. 25.0 25.1 25.2 "Kerala cops confirm Popular Front terror camp in Kannur". Dailypioneer.com. 2013-04-25. பார்க்கப்பட்ட நாள் 2014-04-15.
  26. 26.0 26.1 "'Radical outfit Popular Front of India has terrorist links'". daily.bhaskar.com. 2013-04-24. பார்க்கப்பட்ட நாள் 2014-04-15.
  27. 27.0 27.1 "Country-made bombs seized, 21 PFI cadres arrested in Kerala". Deccanherald.com. 2013-04-24. பார்க்கப்பட்ட நாள் 2014-04-15.
  28. "Stabbed Kannur ABVP Leader Succumbs to Injury". Daijiworld.com. Archived from the original on 2014-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-17.
  29. "Vishal murder: Two PFI activists held". Newindianexpress.com. 2012-07-20. http://newindianexpress.com/states/kerala/article572127.ece. பார்த்த நாள்: 2014-04-17. 
  30. 30.0 30.1 "Karnataka Forum for Dignity men abducted, killed Hunsur boys for ransom". 23 June 2011.
  31. 31.0 31.1 "Mysore double murder case: Six arrested". 23 June 2011. Archived from the original on 8 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  32. 32.0 32.1 "College mourns for murdered students". The Times Of India. 23 June 2011. http://articles.timesofindia.indiatimes.com/2011-06-23/mysore/29693768_1_students-lectures-college. [தொடர்பிழந்த இணைப்பு]
  33. 33.0 33.1 "Six KFD activists held for Hunsur students’ murder". The Times Of India. 27 June 2011 இம் மூலத்தில் இருந்து 2011-09-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110909052852/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-23/bangalore/29693825_1_kfd-karnataka-forum-murder-case. 
  34. "North-East people's exodus continues". பார்க்கப்பட்ட நாள் 18 August 2012.
  35. "Northeast people indeed assaulted, threatened in Bangalore". Archived from the original on 14 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 18 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  36. "Kerala based PFI Group triggered hate SMS leading to North East Exodus". Bihar Prabha. பார்க்கப்பட்ட நாள் 14 May 2014.
  37. "How HuJI, PFI lobbed the hate bomb with ease". Rediff. 21 August 2012. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.
  38. "Violence rips Shivamogga, Section 144 imposed". Times of India. 19 February 2015.
  39. "Shivamogga: Frictions vitiate PFI programme, one killed, five injured". daijiworld.com. 20 February 2015. Archived from the original on 29 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 7 பிப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  40. Nelson, Dean (13 October 2009). "Handsome Muslim men accused of waging 'love jihad' in India". The Daily Telegraph (London) இம் மூலத்தில் இருந்து 8 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100308135104/http://www.telegraph.co.uk/news/newstopics/religion/6316966/Handsome-Muslim-men-accused-of-waging-love-jihad-in-India.html. பார்த்த நாள்: 7 September 2010. 
  41. "Kerala: One more arrested in lecturer attack case". Rediff.com. 2 August 2010. பார்க்கப்பட்ட நாள் 12 May 2011.
  42. "English News | Top Stories". Manorama Online. Archived from the original on 14 July 2012. பார்க்கப்பட்ட நாள் 12 May 2011.
  43. "Explosives, weapons seized near Kerala mosque". The Times of India. 13 July 2010 இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811094756/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-13/india/28296095_1_pfi-anti-terror-explosives. பார்த்த நாள்: 7 September 2010. 
  44. "Probe source of extremist funding: CPI". The Hindu (Chennai, India). 22 July 2010 இம் மூலத்தில் இருந்து 25 July 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100725165611/http://www.hindu.com/2010/07/22/stories/2010072253230700.htm. பார்த்த நாள்: 7 September 2010. 
  45. M.G. Radhakrishnan (10 July 2010). "Hatred's New Haven: STATES: India Today". India Today. பார்க்கப்பட்ட நாள் 12 May 2011.
  46. "Defending the front". The Indian Express. 28 July 2010. பார்க்கப்பட்ட நாள் 12 May 2011.
  47. "Police unearth CDs of Taliban like terror module in Kerala". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 12 May 2011.
  48. "PFI – an Extremist Caucus Prophet Muhammad's Recipe for World Peace – Latest News about Muslims,Islam". Radianceweekly.com. Archived from the original on 2011-04-20. பார்க்கப்பட்ட நாள் 12 May 2011.
  49. "Popular Front has SIMI connection, informed HC". Asianetindia. 25 July 2012 இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130613132404/http://asianetindia.com/popular-front-has-simi-connection-informed-hc/. 
  50. 50.0 50.1 "PFI is SIMI in another form, Kerala govt tells HC". Indian Express. 2012-07-26. பார்க்கப்பட்ட நாள் 2014-04-15.
  51. 51.0 51.1 "Ban on 'Freedom Parades' by PFI activists upheld". Zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-15.
  52. "PFI is SIMI in another form, Kerala govt tells HC - Indian Express". Archive.indianexpress.com. 2012-07-26. பார்க்கப்பட்ட நாள் 2014-04-15.
  53. "Narath case: NIA team in Kannur". Chennai, India: The Hindu. 2013-05-18. http://www.thehindu.com/todays-paper/tp-national/narath-case-nia-team-in-kannur/article4726572.ece. பார்த்த நாள்: 2014-04-15. 
  54. "PFI is banned outfit SIMI in another form, Kerala govt tells HC". 26 Jul 2012. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.
  55. "PFI, NDF Involved in CPI(M), RSS Cadres' Murders: Kerala". Outlook. Jul 25, 2012 இம் மூலத்தில் இருந்து 8 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140408211304/http://news.outlookindia.com/items.aspx?artid=769976. பார்த்த நாள்: 18 April 2014. 
  56. "Ban orders in Chengannur, Mavelikkara". New Indian Express. http://www.newindianexpress.com/states/kerala/article572853.ece. 
  57. "ABVP pays homage to Sachin Gopal".
  58. Special Correspondent (2012-09-06). "ABVP activist who was stabbed dies". Chennai, India: Thehindu.com. https://www.thehindu.com/todays-paper/tp-national/abvp-activist-who-was-stabbed-dies/article3864525.ece. பார்த்த நாள்: 2014-04-17. 
  59. "Hand chopping case: Charge sheet filed against 27 accused". Indian Express. 2011-01-14. பார்க்கப்பட்ட நாள் 2014-04-15.
  60. "Kerala professor lost hand first, now his job". Rediff. 4 September 2010.
  61. "13 guilty of chopping Kerala professor's hand | The Indian Express". 2016-06-11. Archived from the original on 2016-06-11. பார்க்கப்பட்ட நாள் 2017-02-25.
  62. "Violence rips Shimoga, Section 144 imposed". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/Violence-rips-Shimoga-Section-144-imposed/articleshow/46304418.cms. பார்த்த நாள்: 7 February 2019. 
  63. "dajiworld". Archived from the original on 2019-12-29. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  64. "Prohibitory orders". http://indianexpress.com/article/india/india-others/prohibitory-orders-imposed-in-shimoga-after-communal-clash/. 
  65. "Violence rips Shimoga". http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Violence-rips-Shimoga-Section-144-imposed/articleshow/46304418.cms. 
  66. "Bolt from the blue for this family".
  67. "Man dies as group attacks him after communal clash". Deccan Herald.
  68. "PMK man hacked to death in Tirubhuvanam". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இம் மூலத்தில் இருந்து 10 பிப்ரவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190210120256/http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/feb/07/pmk-man-hacked-to-death-in-tirubhuvanam-1935511.html. பார்த்த நாள்: 7 February 2019. 
  69. "பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா அமைப்பை தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி". மாலைமலர். https://www.maalaimalar.com/News/District/2018/06/08145254/1168725/case-which-ban-to-popular-brand-of-india-was-dismissed.vpf. பார்த்த நாள்: 7 February 2019. 
  70. "Bangalore : PFI to Launch 'Why Popular Front' Campaign from Oct 10". daijiworld.com. Archived from the original on 2019-12-29. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  71. "Muslim Mirror ]] Press Council to hear PFI's complaints against 10 dailies on 16 July". Muslim Mirror.
  72. Popular Front allegedly raised funds from China, links to Hathras and Delhi riots emerge
  73. Enforcement Directorate attaches Popular Front of India accounts in money laundering case
  74. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்பது என்ன அமைப்பு? அதை ஏன் இந்திய அரசு தடை செய்தது?
  75. Centre declares PFI 'unlawful association' for 5 years
  76. Centre bans PFI, affiliates for 5 years, says major threat to internal security

வெளியிணைப்புகள்