சிங்காநல்லூர்

இது தமிழகத்தின் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓர் நகராட்சி ஆகும்.

சிங்காநல்லூர், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். முன்னர் இது சிங்காநல்லூர் நகராட்சிப் பகுதியாக இருந்தது. 1981ம் ஆண்டு சிங்காநல்லூர் நகராட்சிப் பகுதி கோயம்புத்துர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆனது . சிங்காநல்லூர் பகுதி சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

சிங்காநல்லூர்
—  நகராட்சி  —
சிங்காநல்லூர்
அமைவிடம்: சிங்காநல்லூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°00′N 77°01′E / 11.00°N 77.02°E / 11.00; 77.02
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி சிங்காநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

கே. ஆர். ஜெயராம் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

8,32,402 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

22.63 கிமீ2 (9 சதுர மைல்)

411 மீட்டர்கள் (1,348 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.municipality.in/singanallur


சிங்காநல்லூர் குளம்

தொகு

கோவை மாநகரில் உள்ள பத்து குளங்களில் ஒன்று சிங்காநல்லூர் குளமாகும். கோவையில் 19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் ப்ளேக் நோய் என்னும் கொடிய காய்ச்சல் பரவியது. இதனால் அந்த நோயை தீர்க்கும் விதத்தில் ப்ளேக் மாரியம்மன் திருக்கோயில் இக்குளத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.இந்த குளத்தின் பரப்பளவு 1.153 சதுர கிலோமீட்டராகும். தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சியில் தான் இந்த குளம் பராமரிப்பு செலவு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இக்குளம் பல்லுயிர் சூழல் பொருந்தியதாகும்.

கோவை மாநகராட்சி படகு இல்லம்

தொகு

இக்குளத்தில் கோவை மாநகராட்சியின் படகு இல்லம் அமைந்து உள்ளது.

மக்கள் தொகை

தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய சிங்காநல்லூர் நகராட்சிப் பகுதியில் 8,32,402 பேர் வசிக்கின்றனர். இவற்றில் ஆண்கள் 53% பேரும் 47% பேர் பெண்களும் இருக்கின்றனர்.மேலும் இது 1991ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விட 43.02% அதிகம்.

சிங்காநல்லூர் பேருந்து நிலையம்

தொகு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் அமைந்துள்ள 7 பேருந்து நிலையங்களில் இதுவும் ஒரு பேருந்து நிலையம் ஆகும். இங்கிருந்துதான் தமிழகத்தின் தென் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கான பேருந்து சேவை இயக்கப்படுகிறது.இங்கு

  1. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கும்பகோணம்
  2. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-மதுரை
  3. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கோயம்புத்தூர்
  4. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-திருநெல்வேலி

என தமிழக போக்குவரத்து சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும் உள்ளூர் சேவைகளை மாநகர் போக்குவரத்து கழகம்-கோவை வழங்குகிறது. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஏர்வாடி, வள்ளியூர், குற்றாலம், ராஜபாளையம், விருதுநகர், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மேலூர், உசிலம்பட்டி, தேனி, வத்தலக்குண்டு, செம்பட்டி, தாராபுரம், பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில், கரூர், குளித்தலை, தஞ்சாவூர், கும்பகோணம்,வேளாங்கண்ணி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், துறையூர், புதுக்கோட்டை, பரமக்குடி, காரைக்குடி, பெரியகுளம், சிவகங்கை, மணப்பாறை, குமுளி, கம்பம் என தமிழக தென்பகுதிகளுக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வசதிகள்

தொகு

சிங்கநல்லூரில் இருந்து காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர்  பன்னாட்டு விமான நிலையம் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர்   ரயில் நிலையம் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சிங்காநல்லூரில் அமைந்துள்ள மேம்பாலங்கள்

தொகு

பழைய சிங்காநல்லூர் நகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒண்டிப்புதூர் மேம்பாலம்,ஹோப் காலேஜ் மேம்பாலம்,வெள்ளலூர் சாலை மேம்பாலம் ஆகியவை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கட்டப்பட்டு உள்ளன. மேலும் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி சாலை மேம்பாலம், நீலிக்கோனாம்பாளையம் மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம் ஆகியன கட்டப்பட்டு வருகின்றன.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம்

தொகு

சிங்கநல்லூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.இவ்வலுவலகம் சிங்காநல்லூர் நகராட்சி அலுவலகமாக 1981ம் ஆண்டு வரை செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்காநல்லூர் ரயில் நிலையம்

தொகு

சிங்கநல்லூரில் இருந்து எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இருகூர் மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது.இங்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம் செல்லும் அனைத்து பயணிகள் ரயிலும் நின்று செல்கின்றன

இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தொகு

சிங்கநல்லூரில் இருந்து ஹோப் காலேஜ் செல்லும் காமராஜர் சாலையில் 1 கிலோமீட்டர் தூரத்தில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது . 2016ம் ஆண்டு இம்மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டு மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

உழவர் சந்தை

தொகு

சிங்காநல்லூர் உழவர் சண்டை 2001ம் ஆண்டு சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புக்கு அருகில் திறக்கப்பட்டது.

முன்மொழியப்பட்ட கோயம்புத்தூர் மெட்ரோ ரயில்

தொகு

கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலின் 5ம் வழித்தடம் திருச்சி சாலையில் உள்ள கோவையின் புறநகர்ப் பகுதியான காரணம்பேட்டை பகுதி முதல் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வழியாக தடாகம் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் வரை முன்மொழியப்பட்டுள்ளது.

சாந்தி சமூக சேவைகள்

தொகு

சாந்தி சமூக சேவைகள் நிறுவனம் சிங்கநல்லூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது .


மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்காநல்லூர்&oldid=3515026" இலிருந்து மீள்விக்கப்பட்டது