வெள்ளக்கோயில்
வெள்ளக்கோயில் (ஆங்கிலம்:Vellakoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருப்பூர் மாவட்டத்தில், உள்ள ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.
வெள்ளக்கோயில் | |||||||
— இரண்டாம் நிலை நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 10°56′N 77°43′E / 10.94°N 77.71°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ் நாடு | ||||||
மாவட்டம் | திருப்பூர் | ||||||
வட்டம் | காங்கேயம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||||||
நகராட்சித் தலைவர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
40,359 (2011[update]) • 623/km2 (1,614/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 64.75 சதுர கிலோமீட்டர்கள் (25.00 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/Vellakoil/ |
மக்கள் வகைப்பாடு
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,157 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,359 ஆகும். மக்கள்தொகையில் 20,158ஆண்களும், 20,201 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 81.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,002 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3438 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 924 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,572 மற்றும் 22 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.64%, இசுலாமியர்கள் 0.92% , கிறித்தவர்கள் 2.02% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[1]
வெள்ளக்கோயில் நகராட்சி தேர்தல் (2022)
தொகு- திமுக - 14
- அதிமுக - 6
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1
போக்குவரத்து
தொகுகோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
முக்கிய ஊர்களுக்கான பேருந்துவழித்தடங்கள்
கோவை, திருப்பூர் ஈரோடு கரூர் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகை புதுகோட்டை வேளாங்கண்ணி வேதாரண்யம் மீமசல் தொண்டி சிதம்பரம் ஜெயங்கொண்டம் பெரம்பலூர் அரியலூர் , மூலனூர் ஓட்டன்சத்திரம் தாராபுரம் பழனி மதுரை அரவகுறிச்சி பள்ளபட்டி இடையகோட்டை வேடசந்தூர் கொடுமுடி அறச்சலூர் சென்னிமலை அந்தியூர் மேட்டுபாளையம் ஊட்டி கூடலூர் தாளவாடி சத்தியமங்கலம்