இரண்டாம் நிலை நகராட்சிகள்

தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து நகர்மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன.

இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.

ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன. சிறப்பு நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சிகள்,மூன்றாம் நிலைநகராட்சிகள் என்ற 5 வகைப்பாட்டின் கீழ் அவை பிரிக்கப்பட்டு உள்ளன.

வருமான வகை

தொகு

ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை சிறப்பு நிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை 2-ம் நிலை நகராட்சியாகவும் அதற்கு கீ்ழ் உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இரண்டாம் நிலை நகராட்சிப் பட்டியல்[1]

தொகு
 1. அதிராம்பட்டினம்
 2. அம்பாசமுத்திரம்
 3. அரியலூர்
 4. இடங்கணசாலை
 5. இராமேசுவரம்
 6. உசிலம்பட்டி
 7. ஒட்டன்சத்திரம்
 8. கருமத்தம்பட்டி
 9. களக்காடு
 10. காங்கேயம்
 11. காயல்பட்டினம்
 12. காரமடை
 13. கீழக்கரை
 14. குன்றத்தூர்
 15. குழித்துறை
 16. குளித்தலை
 17. கூடலூர்
 18. கூடலூர் (நீலகிரி மாவட்டம்)
 19. கூடலூர் (தேனி)
 20. கூத்தாநல்லூர்
 21. கொல்லங்கோடு
 22. கோட்டக்குப்பம்
 23. சாத்தூர்
 24. சின்னமனூர்
 25. சீர்காழி
 26. செங்கோட்டை
 27. சோளிங்கர்
 28. தாரமங்கலம்
 29. திருத்துறைப்பூண்டி
 30. திருநின்றவூர்
 31. திருச்செந்தூர்
 32. திருமுருகன்பூண்டி
 33. திட்டக்குடி
 34. செய்யாறு
 35. துவாக்குடி
 36. நரசிங்கபுரம்
 37. நந்திவரம்-கூடுவாஞ்சேரி
 38. நெல்லியாளம்
 39. நெல்லிக்குப்பம்
 40. பள்ளம்பட்டி
 41. பள்ளிபாளையம்
 42. பத்மனாபபுரம்
 43. பவானி
 44. பெரியகுளம்
 45. பேரணாம்பட்டு
 46. பொன்னேரி
 47. புஞ்சைப்புளியம்பட்டி
 48. புளியங்குடி
 49. புஞ்சைபுகலூர்
 50. மாங்காடு
 51. மதுக்கரை
 52. மானாமதுரை
 53. மேல்விஷாரம்
 54. மேலூர்
 55. வடலூர்
 56. வந்தவாசி
 57. வாலாஜாபேட்டை
 58. விக்கிரமசிங்கபுரம்
 59. வெள்ளக்கோயில்
 60. லால்குடி
 61. ஜோலார்பேட்டை
 62. சுரண்டை
 63. முசிறி

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதாரம்

தொகு