பள்ளப்பட்டி (கரூர்)
பள்ளப்பட்டி (Pallapatti Makkal) தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளுள் ஒன்றாகும். அரவக்குறிச்சி பேரூராட்சி அருகில், பள்ளப்பட்டி நகராட்சி அமைந்துள்ளது 27 வார்டு உறுப்பினர்களைக் கொண்டது. பள்ளப்பட்டி பகுதியில் அமராவதி ஆற்றின் கிளை ஆறான நன்காஞ்சி ஆறு பாய்கிறது. நகராட்சியாக 2022 ஜனவரியில் தமிழக அரசு அறிவித்தது. நகராட்சியின் முதல் உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 2022 ல் நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவராக திமுக முனவர்ஜான் அவர்கள் பதவியேற்றார்கள். 27 வார்டுகளில் 31233 வாக்காளர் இருப்பதாக பதிவு செய்துள்ளது.
பள்ளப்பட்டி | |
---|---|
ஆள்கூறுகள்: 10°43′52″N 77°54′35″E / 10.731111°N 77.909722°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் மாவட்டம் |
ஏற்றம் | 174 m (571 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 30,624 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 639205, 639207 |
தொலைபேசு குறியீடு | 04320 |
வாகனப் பதிவு | TN-47[1] |
அமைவிடம்
தொகுகரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்த பள்ளப்பட்டி, திண்டுக்கல்லிருந்து 47 கிமீ தொலைவிலும், கரூருக்கு தென்மேற்கே 37 கிமீ தொலைவில் உள்ளது. அரவக்குறிச்சிக்கு தெற்கே 7 கிமீ தொலைவில் பள்ளப்பட்டி நகராட்சி உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு18 வார்டுகளும், 7,426 வீடுகளும் கொண்ட பள்ளப்பட்டி பேரூராட்சியின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 30,624 ஆகும். அதில் ஆண்கள் 15,069 (49%) ஆகவும்; பெண்கள் 15,555 (51%) ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1032 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 92.53% ஆகவுள்ளது. பள்ளப்பட்டியின் மொத்த மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்டோர் 3471 ஆகவுள்ளனர். பள்ளப்பட்டி பேரூராட்சியின் பெரும்பாலான மக்கள் தமிழ் மொழி பேசும் இசுலாமியர்களாக (94.90%) உள்ளனர்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Registration series allotted to regional transport offices. State Transport Authority, Government of Tamil Nadu: "Karur".
- ↑ Pallapatti Population Census 2011
- ↑ Pallapatti Town Panchayat