அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று

அரவக்குறிச்சி கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி 151ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். இத்தொகுதி அரவக்குறிச்சி வட்டம் மற்றும் கரூர் வட்டத்தின் கிராம ஊராட்சிகள் மற்றும் அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி என 2 பேரூராட்சிகள் கொண்டது. 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.13 இலட்சம் ஆகும்.[1] சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் வாக்குகள் செலுத்த 247 வாக்குச் சாவடிகள் உள்ளது.[2]

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் மேற்கே ஒட்டன்சத்திரம் மற்றும் காங்கேயம் ஆகிய தொகுதிகளும், கிழக்கே கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளும், வடக்கே மொடக்குறிச்சி மற்றும் கபிலர் மலை ஆகிய தொகுதிகளும், தெற்கே ஒட்டன்சத்திரம், வேடச்சந்தூர் ஆகிய தொகுதிகளும் அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள் தொகு

  • அரவக்குறிச்சி தாலுக்கா
  • கரூர் தாலுக்கா (பகுதி)

வேட்டமங்கலம் (மேற்கு), வேட்டமங்கலம் (கிழக்கு), கோம்புபாளையம், திருக்காடுதுறை மற்றும் நஞ்சைபுகளுர் கிராமங்கள்,

டி.என்.பி.எல். புகலூர் (பேரூராட்சி) புஞ்சைபுகளுர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி (பேரூராட்சி)[3].

வாக்காளர் எண்ணிக்கை தொகு

செப்டம்பர் 2011 நிலவரப்படி 162365 வாக்காளர்களை [4] கொண்ட தொகுதி இது.

வெற்றி பெற்றவர்கள் தொகு

சென்னை மாநிலம் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 என். ரத்தினக்கவுண்டர் சுயேச்சை 30962 57.00 டி. என். நல்லசாமி இந்திய தேசிய காங்கிரசு 18140 33.39
1957 எஸ். சதாசிவம் இந்திய தேசிய காங்கிரசு 24726 55.02 என். ரத்தினம் சுயேச்சை 15920 35.43
1962 எஸ். சதாசிவம் இந்திய தேசிய காங்கிரசு 28732 45.84 சி. முத்துசாமி கவுண்டர் சுதந்திரா கட்சி 21082 33.63
1967 எஸ். கே. கவுண்டர் சுதந்திரா கடசி 46614 67.46 வி. பி. கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 22482 32.53

தமிழ்நாடு தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 அப்துல் ஜப்பார் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 34164 60.10 எஸ். கந்தசாமி கவுண்டர் ஸ்வதேச கட்சி 18859 33.18
1977 எஸ். சதாசிவம் இந்திய தேசிய காங்கிரசு 32581 39.51 பி. ராமசாமி திமுக 21547 26.13
1980 சென்னிமலை (எ) P. S.கந்தசாமி அதிமுக 45145 51.60 கே. சண்முகம் இந்திய தேசிய காங்கிரசு 40233 45.99
1984 எஸ். ஜெகதீசன் அதிமுக 57887 55.72 பி. ராமசாமி திமுக 44273 42.62
1989 மொஞ்சனூர் ராமசாமி திமுக 48463 42.40 S. ஜெகதீசன் அதிமுக(ஜெயலலிதா அணி) 30309 26.52
1991 மரியமுல் ஆசியா அதிமுக 57957 55.61 மொஞ்சனூர் ராமசாமி திமுக 37005 35.50
1996 எசு. எசு. முகமது இஸ்மாயில் திமுக 41153 38.38 V. K. துரைசாமி அதிமுக 32059 29.8993
2001 லியாவுதீன் சேட் அதிமுக 51535 48.03 லட்சுமி துரைசாமி திமுக 33209 30.95
2006 கலிலூர் ரகுமான் திமுக 45960 45.60 மொஞ்சனூர் ராமசாமி மதிமுக 43135 42.79
2011 கே. சி. பழனிச்சாமி திமுக 72831 செந்தில்நாதன் அதிமுக 68290
2016 வே. செந்தில்பாலாஜி அதிமுக 88068 63.61 கே. சி. பழனிசாமி திமுக 64407 38.13
2019 இடைத்தேர்தல் வே. செந்தில்பாலாஜி திமுக 97718 வி. வி. செந்தில்நாதன் அதிமுக 59771
2021 இரா. இளங்கோ திமுக[5] 93,369 52.72 அண்ணாமலை பாஜக 68,553 38.71

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டாவிற்கு வாக்களித்தவர்கள் நோட்டாவிற்கு வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 2021-இல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி நிலவரம்
  2. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் 247 வாக்குச் சாவடிகள் பட்டியல்
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
  4. 1 தினமலர் நாளிதழ்
  5. அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு