கே. சி. பழனிசாமி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கே. சி. பழனிசாமி (பிறப்பு: 7 திசம்பர் 1959 சென்னிமலை ஈரோடு மாவட்டம்) என்பவர் இந்திய தமிழ் அரசியல்வாதி மற்றும் இந்திய இந்திய நாடாளுமன்றத்தின் திருச்செங்கோடு தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக கழகம் கட்சியைச் சேர்ந்வர். மேலும் இவர் தமிழ்நாடு சட்டமன்ற காங்கேயம் தொகுதி முன்னாள் உறுப்பினராவார். தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம் சென்னிலையில் பிறந்த இவர் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியியல் பயின்றார். 1972 ஆம் ஆண்டில், எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியைத் தொடங்கியபோது, இவர் தனது 13 வயதில் கட்சி உறுப்பினராக சேர்ந்தார். 1983 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிமுகவின் எம்.ஜி.ஆர் இளைஞரணிக்கு 23 வயதில் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு சுமார் 16,000 வாக்கு வித்தியாசத்தி தேர்தலில் வெற்றி பெற்றார். தனது 24 வயதில் தமிழக சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்த இளைய அரசியல்வாதி என்ற பெருமையை பெற்றார். 1989 ஆம் ஆண்டு தேர்தலில், தென்னிந்தியாவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்று திருச்செங்கோடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
கே. சி. பழனிசாமி | |
---|---|
இந்திய மக்களவை திருச்செங்கோடு தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 1989–1991 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தமிழ்நாடு, சென்னிமலை |
அரசியல் கட்சி | அதிமுக(1977-2017) |
துணைவர் | சௌந்தரி |
பிள்ளைகள் | கேசிபி சுரேஷ், கேசிபி கார்த்திக் |
வாழிடம் | கோயம்புத்தூர் |
As of 22 செப்டம்பர், 2006 |
குறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பதினான்காவது மக்களவை உறுப்பினர்கள் - இந்திய நாடாளுமன்ற வலைத்தளம்[தொடர்பிழந்த இணைப்பு][ <span title="Dead link since February 2020">நிரந்தர இறந்த இணைப்பு</span> ]