திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு முன் தமிழ்நாட்டில் இருந்த மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. இத் தொகுதியில் இருந்த சட்டசபைத் தொகுதிகள் ஈரோடு, மொடக்குறிச்சி, திருச்செங்கோடு, கபிலர்மலை, எடப்பாடி.

திருச்செங்கோடு சட்டசபை தொகுதி நாமக்கல் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. ஈரோடு மக்களவைத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. புதிய ஈரோடு மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் சட்டசபை தொகுதிகள் - குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் , காங்கேயம்.


இங்கே வென்றவர்கள்தொகு

 • 1951: எசு.கே. பேபி, சுயேச்சை
 • 1957: ப. சுப்பராயன், காங்கிரசு
 • 1962: ப. சுப்பராயன், காங்கிரசு
 • 1967: க. அன்பழகன், திமுக [1]
 • 1971: மா.முத்துசாமி, திமுக
 • 1977: ஆர். குழந்தைவேலு, அதிமுக
 • 1980: எம். கந்தசாமி, திமுக
 • 1984: பி.கண்ணன், அதிமுக
 • 1989: கே. பழனிசாமி, அதிமுக
 • 1991: கே.எசு. சவுந்தரம், அதிமுக
 • 1996: கே.பி. இராமலிங்கம், திமுக
 • 1998: கே. பழனிசாமி, அதிமுக
 • 1999: மு. கண்ணப்பன், மதிமுக
 • 2004: சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக

சான்றடைவுதொகு

<references>

 1. 4th Lok Sabha Members Bioprofile [1]