கே. பி. ராமலிங்கம்

தமிழக அரசியல்வாதி

டாக்டர் கே. பி. ராமலிங்கம் (Dr K. P. Ramalingam ) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சூன், 2010 ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் இராசிபுரம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

கே. பி. ராமலிங்கம்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
30 சூன் 2010 – 29 சூன் 2016
பின்னவர்ஆர். எஸ். பாரதி
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதி.மு.க.
வேலைஅரசியல்வாதி

1996 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._ராமலிங்கம்&oldid=3551310" இலிருந்து மீள்விக்கப்பட்டது