கே. சி. பழனிச்சாமி (கரூர்)
2004-ஆம் ஆண்டில் பதினான்காவது மக்களவை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக கரூர் மக்களவைத் தொக
கே. சி. பழனிச்சாமி, 2004-ஆம் ஆண்டில் பதினான்காவது மக்களவை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] இவர் 2011 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் 1986 முதல் 1991 முடிய கரூர் நகராட்சி மன்றத் துணைத்தலைவராக செயல்பட்டார்.
கே. சி. பழனிச்சாமி | |
---|---|
14வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | எம். சின்னசாமி |
தொகுதி | கரூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கரூர், தமிழ்நாடு | 24 ஏப்ரல் 1935
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | ப. அன்னம்மாள் |
பிள்ளைகள் | மகன் 1 & மகள் 1 |
பெற்றோர் | சின்னப்பா செட்டியார் வெங்கட்டம்மாள் |
வாழிடம்(s) | 330/1 சின்ன ஆண்டான் கோயில் சாலை, கரூர் 639 001, தமிழ்நாடு |
வேலை | வழக்கறிஞர், எழுத்தாளர் அரசியல்வாதி, தொழில் அதிபர் |
திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ள கே. சி. பழனிச்சாமி, வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், இவர் வங்கிக் கடனுக்காக அடமானம் வைத்த ரூபாய் 197.79 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்வதாகக் கோவை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ [http://164.100.47.194/Loksabha/Members/memberbioprofile.aspx?mpsno=3355&lastls=14 Fourteenth Lok Sabha Members Bioprofile - Pallani Shamy K. C]
- ↑ திமுக முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமியின் ரூ198 கோடி சொத்து விற்பனை: வங்கிகள் நடவடிக்கை