இரா. இளங்கோ

இரா. இளங்கோ (R. Elango) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் மாவட்டம் காளிப்பாளையம் மொஞ்சனூர் கிராமத்தினைச் சார்ந்தவர். இளங்கோ, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் தொழில்நுட்ப கழகத்தில் பொறியியலில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். இவர் 2021 மே மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Elango. R(DMK):Constituency- ARAVAKURICHI(KARUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-10-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._இளங்கோ&oldid=3302853" இலிருந்து மீள்விக்கப்பட்டது