காரமடை (ஆங்கிலம்:Karamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கோவை - உதகமண்டலம் நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாகச் செல்கிறது.

காரமடை
—  பேரூராட்சி  —
காரமடை
இருப்பிடம்: காரமடை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°16′N 76°58′E / 11.27°N 76.97°E / 11.27; 76.97ஆள்கூறுகள்: 11°16′N 76°58′E / 11.27°N 76.97°E / 11.27; 76.97
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மேட்டுப்பாளையம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

35,166 (2011)

1,776/km2 (4,600/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

19.8 சதுர கிலோமீட்டர்கள் (7.6 sq mi)

353 மீட்டர்கள் (1,158 ft)

இணையதளம் www.townpanchayat.in/karamadai

அமைவிடம்தொகு

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காரமடை பேரூராட்சியில் பிரசிதிபெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காரமடை பேரூராட்சியானது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓர் தேர்வு நிலை பேரூராட்சியாகும். கோயம்புத்தூரிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேட்டுப்பாளையம் 7 கிமீ தொலைவில் உள்ளது.

போக்குவரத்துதொகு

காரமடை பேரூராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

19.8 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 174 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9792 வீடுகளும், 35166 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 11°16′N 76°58′E / 11.27°N 76.97°E / 11.27; 76.97 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 மீட்டர் (1158 அடி) உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கின்றது.

ஆன்மீக இடங்கள்தொகு

காரமடை அரங்கநாதர் கோவில்

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. காரமடை பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/karamadai/population
  5. Karamadai Town Panchayat Population Census 2011
  6. "Karamadai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.


"https://ta.wikipedia.org/w/index.php?title=காரமடை&oldid=2875201" இருந்து மீள்விக்கப்பட்டது