இடங்கணசாலை
இடங்கணசாலை (ஆங்கிலம்:Edaganasalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இடங்கணசாலை நகராட்சியும் மற்றும் அதன் அருகாமையில் உள்ள இளம்பிள்ளை பேரூராட்சியும் கைநெசவுத் தொழிலுக்கு சிறந்து விளங்குகிறது.
இடங்கணசாலை | |
— நகராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
வட்டம் | சங்ககிரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
33,245 (2011[update]) • 1,357/km2 (3,515/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 24.5 சதுர கிலோமீட்டர்கள் (9.5 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/edanganasalai |
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்
தொகுபேரூராட்சியாக இருந்த இடங்கணசாலை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக நிறுவுவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]
அமைவிடம்
தொகுஇடங்கணசாலை பேரூராட்சிக்கு கிழக்கே சேலம் 20 கிமீ; மேற்கே சங்ககிரி 34 கிமீ; வடக்கே ஓமலூர் 25 கிமீ மற்றும் தெற்கே இளம்பிள்ளை 1 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு24.5 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [6]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,631 குடும்பங்களும், 33,245 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 68.1% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 888 பெண்கள் வீதம் உள்ளனர்.[7]
பெயர் காரணம்
தொகுமுந்தைய காலங்களில் இப்பகுதியில் விவசாயிகளால் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் இளங்கன்றுகள் இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பழைமையான ஏரியில் நீர் அருந்த வந்ததனால் இவ்வூர் இளங்கன்சாலை என்று அழைக்கப்பட்டது பின்னர் இடங்கணசாலை என்றானது.
இதனையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
- ↑ இடங்கணசாலை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Edaganasalai Population Census 2011