நந்திவரம்-கூடுவாஞ்சேரி

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

நந்திவரம்-கூடுவாஞ்சேரி (ஆங்கிலம்:Nandivaram-Guduvancheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியானது, செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்குட்பட்டது.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி
நந்திவரம்-கூடுவாஞ்சேரி
இருப்பிடம்: நந்திவரம்-கூடுவாஞ்சேரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°50′38″N 80°03′40″E / 12.8440°N 80.0610°E / 12.8440; 80.0610
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் செங்கல்பட்டு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

44,098 (2011)

5,188/km2 (13,437/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/nandivaram-guduvancheri

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல் தொகு

நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியானது 12 செப்டம்பர் 2021 அன்று நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3]

அமைவிடம் தொகு

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 57 கி.மீ. தொலைவில் உள்ளது. கூடுவாஞ்சேரியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே திருப்போரூர் 23 கி.மீ.; மேற்கில் திருப்பெரும்புதூர் 28 கி.மீ.; வடக்கில் பீர்க்கன்கரணை 5 கி.மீ.; தெற்கில் மறைமலைநகர் 7 கி.மீ. தொலைவில் உள்ளன.

நகராட்சியின் அமைப்பு தொகு

8.50 ச.கி.மீ. பரப்பும், 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 312 தெருக்களையும் கொண்ட நகராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 11,252 வீடுகள், மற்றும் 44,098 மக்கள்தொகை கொண்டுள்ளதைக் குறிக்கிறது . மேலும், இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 91.13% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Govt upgrades 9 Town Panchayats as Municipalities
  4. நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியின் இணையதளம்
  5. Nandivaram - Guduvancheri Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திவரம்-கூடுவாஞ்சேரி&oldid=3670258" இலிருந்து மீள்விக்கப்பட்டது