கூடலூர் (நீலகிரி)

(கூடலூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூடலூர் (Gudalur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓர் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். கூடலூரின் பொருளாதாரம் தேயிலைத் தொழிற்துறையைச் சார்ந்துள்ளது.

Gudalur
கூடலூர்
நகராட்சி
கூடலூர் முதன்மை வீதி
கூடலூர் முதன்மை வீதி
Gudalur is located in தமிழ் நாடு
Gudalur
Gudalur
தமிழ்நாட்டில் கூடலூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°30′N 76°30′E / 11.50°N 76.50°E / 11.50; 76.50
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
அரசு
 • வகைஇரண்டாம்நிலை நகராட்சி
 • நிர்வாகம்கூடலூர் நகராட்சி
 • தலைவர்ரமா மணி [1]
ஏற்றம்1,072 m (3,517 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்49,535
 • அடர்த்தி200/km2 (500/sq mi)
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சலகக் குறியீடு643 212
தொலை பேசி குறியீடு04262
வாகனப் பதிவுTN-43Z, TN43Y
பாலின விகிதம்900/1000 /

வரலாறுதொகு

கூடலூர் வட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்போதைய மலபார் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகவே விளங்கியது.

புவியியலும் காலநிலையும்தொகு

 
உதகை கூடலூர் சாலையிலிருந்து கூடலூரின் காட்சி

இவ்வூரின் அமைவிடம் 11°30′N 76°30′E / 11.50°N 76.50°E / 11.50; 76.50 ஆகும்.[2] கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலையின் மேற்குப்புற சரிவில் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் மற்றும் சுற்றுப் பகுதிகள் சராசரியாக 1000 மீட்டர் (3000 அடி) உயரத்தில் இருக்கின்றது. இதனால் கடும் குளிரோ வறுத்தெடுக்கும் வெயிலோ இன்றி ஆண்டு முழுவதும் இதமான காலநிலை உள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை மூலமாக ஓர் ஆண்டிற்கு 120 ஏக்கர் (3,000 மிமீ) மழைப்பொழிவு கிடைக்கிறது. இப்பகுதி முழுவதும் சிறுசிறு குன்றுகளாக உள்ளதால் தேயிலை சிறப்பாக வளர்கிறது.கூடலூரின் வடபகுதியில் முதுமலை புலிகள் காப்பகக் காடு உள்ளது. கூடலூரின் வடகிழக்கு பகுதியில் மசினகுடி உள்ளது.

மக்கள் தொகைதொகு

மத கணக்கெடுப்பு
மதம் விகிதம்(%)
இந்து
59.83%
முகமதியர்
26.01%
கிருத்துவர்
14.1%
சீக்கியர்
0.01%
மற்றவர்
0.05%
மதம் சாராதவர்
0.01%

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கூடலூரின் மொத்த மக்கள்தொகை 49,535. இதில் பாலின விகிதம் 1,032 பெண்களுக்கு 1000 ஆண்கள். இது 929 என்ற தேசிய விகிதத்தை விட உயர்ந்தது. மொத்தம் 5,359 பேர் ஆறு வயதுக்குக் கீழ் இருந்தனர். இதில் 2,719 ஆண்களும் 2,640 பெண்களும் இருந்தனர். முறையே 27.66 சதவிகிதம் மற்றும் 3.65 சதவிகிதம் என்ற விகிதத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. நகரத்தின் சராசரி கல்வியறிவு 79.48% ஆகும், இது தேசிய சராசரியான 72.99% உடன் ஒப்பிடுகையில். மொத்தம் 12,101 குடும்பங்கள் இருந்தன. 551 விவசாயிகள், 1,759 பிரதான விவசாயத் தொழிலாளர்கள், 206 வீடமைப்புத் தொழில்கள், 14,488 பிற தொழிலாளர்கள், 1,803 குறுந்தொழிலாளர்கள், 90 குறு விவசாயிகள், 278 குறு விவசாயிகள், வீட்டுத் தொழிலில் உள்ள 119 தொழிலாளர்கள் மற்றும் 1,316 இதர குறுந்தொழில் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்த 18,807 தொழிலாளர்கள் இருந்தனர். 2011-ஆம் ஆண்டின் சமய கணக்கெடுப்பின்படி, 59.83% இந்துக்கள், 26.01% முஸ்லிம்கள், 14.1% கிரிஸ்துவர், 0.01% சீக்கியர்கள், 0.05% மற்ற மதங்கள். 0.01% மதத்தைத் தவிர்த்தனர் அல்லது மத விருப்பத்தேர்வைச் சுட்டிக்காட்டவில்லை.

போக்குவரத்துதொகு

நீலகிரி மலைச்சாலையில் ஒன்றான என்.எச். 67, ஊட்டி கூடலூரை இணைக்கிறது. கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட்டை, கேரளா மாநிலத்தின் மலப்புரம் மற்றும் சுல்தான் பத்தேரி ஆகிய இடங்களுடன் சாலை மூலம் கூடலூர் இணைக்கப்பட்டுள்ளது. கோவை வாளையார், பாலக்காடு, பெரிந்தல்மன்னா, நிலம்பூர் வழியாக 20 கி.மீ மட்டுமே மலைச்சாலையில் பயணம் செய்து கூடலூரை அடையலாம். பேருந்துகள், கூடலூரிலிருந்து ஊட்டி, கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, சென்னை ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

அரசியல்தொகு

கூடலூர் சட்டமன்றத் தொகுதி நீலகிரி மாவட்டத்தின் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். கூடலூர் நீலகிரி மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது.[3]

பார்க்க வேண்டிய இடங்கள்தொகு

ஊசிமலை காட்சிமுனை, தவளை மலை காட்சிமுனை, தொரப்பள்ளி தொங்கு பாலம், ஜீன்பூல் கார்டன், தேவாலா மற்றும் சேரம்பாடி சுரங்கங்கள், முதுமலை வன விலங்கு சரணாலயம், குசுமகிரி முருகன் கோயில், சந்தனமலை முருகன் கோயில், நம்பாலக்கோட்டை சிவன் கோயில், மசினகுடி, மாயார், மற்றும் நெலாக்கோட்டை,பந்தலூர் குருசுமலை, சாமியார் மலை சேரங்கோடு.

மேற்கோள்கள்தொகு

  1. "Gudalur Municipality". 24 மார்ச் 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Gudalur". Falling Rain Genomics, Inc. ஜனவரி 30, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  3. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. 2008-10-31 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2008-10-10 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடலூர்_(நீலகிரி)&oldid=3657285" இருந்து மீள்விக்கப்பட்டது