துவாக்குடி

இது தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கூட்டுப் புறநகர் பகுதியும் நகராட்சியும் ஆ

துவாக்குடி (ஆங்கிலம்:Thuvakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளியின் கூட்டுப் புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

துவாக்குடி நகராட்சி
துவாக்குடி நகராட்சி
இருப்பிடம்: துவாக்குடி நகராட்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°27′N 78°29′E / 10.45°N 78.48°E / 10.45; 78.48
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
வட்டம் திருவெறும்பூர் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
நகராட்சி தலைவர் இ.காயாம்பு
மக்கள் தொகை 21,460 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,402 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 38,887 ஆகும். அதில் 21,112 ஆண்களும், 17,775 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 842 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் 956 வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,835 மற்றும் 386 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.68%, இசுலாமியர்கள் 5.05%, கிறித்தவர்கள் 10.8% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[3]

இவ்வூரின் சிறப்புதொகு

இவ்வூர் முற்காலத்தில் துழாய்க்குடி என்றழைக்கப்பட்டு, பின்னர் மருவி துவாக்குடி என்றழைக்கப் படுகிறது. இவ்வூரில் உள்ள சோழீசுவரர் கோவில் கல்வெட்டுகளின் மூலம் இத்தகவல் அறியப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கான தேசிய தொழில்நுட்பக் கழகம் துவாக்குடியில் அமைந்துள்ளது.

அருகில் அமைந்துள்ள ஊர்தொகு

திருவெறும்பூர்

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. துவாக்குடி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாக்குடி&oldid=3155272" இருந்து மீள்விக்கப்பட்டது