திருவெறும்பூர்

இது தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கூட்டுப் புறநகர் பகுதி ஆகும்.

திருவெறும்பூர் (Thiruverumbur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி அருளிலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது 2011 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்கபட்டது.[1] இது திருஎறும்பூர் என்பது திரிந்து திருவெறும்பூர் என மாறியது. அதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள திரு எறும்பீஸ்வரர் கோயிலின் புராண பெயர் காரணமாக இந்நகருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

திருவெறும்பூர்
மாநகர் புறநகர்
திருவெறும்பூர் is located in Tiruchirapalli
திருவெறும்பூர்
திருவெறும்பூர்
ஆள்கூறுகள்: 10°47′06.4″N 78°46′30.0″E / 10.785111°N 78.775000°E / 10.785111; 78.775000
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
ஏற்றம்
119 m (390 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்16,835
நேர வலயம்ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTN-81, TN-45 (பழைய எண்)

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,835 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவெறும்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவெறும்பூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

போக்குவரத்து

தொகு

திருவெறும்பூரில் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு தொடர்வண்டிகள் உள்ளன.

முக்கிய இடங்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "Tiruchi Corporation begins delimitation survey". 31 August 2017. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/tiruchi-corporation-begins-delimitation-survey/article19592362.ece. 
  2. "மக்கள் தொகை". web.archive.org. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2022-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவெறும்பூர்&oldid=4044121" இலிருந்து மீள்விக்கப்பட்டது