படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்
இந்தியப் படைக்கலத் தொழிற்சாலை வாரியம் (OFB), இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும்.[9] படைக்கலத் தொழிற்சாலை வாரியத்தின் கீழ் இயங்கும் 41 ஆயுதத் தொழிற்சாலைகளில் 7 மட்டும் பொதுத்துறை நிறுவனங்களாக செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் கொல்கத்தாவில் உள்ளது.
நிலை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1712[1][2] |
செயலற்றது | 1 அக்டோபர் 2021[3] |
தலைமையகம் | ஆயுத பவன், கொல்கத்தா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் | எம். கே. கார்க் (தலைமை இயக்குநர்)[4] |
தொழில்துறை | பாதுகாப்பு உற்பத்தி |
உற்பத்திகள் | சிறு ஆயுதங்கள், வான்படைக்கான ஆயுதங்கள், வான்படை எதிர்ப்பு ஆயுதங்கள், ஏவுகணைகள், கடற்படைக்கான ஆயுதங்கள், கடற்படை எதிர்ப்பு ஆயுதங்கள், நீர்மூழ்கிகள் எதிர்ப்பு ஆயுதங்கள், கவச வாகன எதிர்ப்பு ஆயுதங்கள், ஏவுகணைகளை செலுத்தும் கருவிகள், இராக்கெட்டு ஏவுகணைகள், வெடி குண்டுகள், கையெறி குண்டுகள், சிறு பீரங்கிகள், நிலக் கண்ணி வெடிகள், உலோகங்கள், இயந்திரக் கருவிகள், இராணுவ வாகனங்கள், இயந்திரங்கள், போர் கவச வாகனங்கள், பாராசூட்டுக்கள், மின்னணு கண்ணாடிகள், வேதிப் பொருட்கள், இராணுவச் சீருடைகள், பீரங்கிகள், வெடி மருந்துகள் |
வருமானம் | ஐஅ$3 பில்லியன் (₹22,389.22 கோடிகள்) (2020–21)[2][5][6][7] |
பணியாளர் | ~80,000[8] |
இந்தியப் படைக்கலத் தொழிற்சாலை வாரியம் உலகின் 37வது பெரிய பாதுகாப்பு கருவிகள் உற்பத்தியாளர் ஆவார். ஆசியாவில் 2வது பெரிய படைக்கல உற்பத்தி நிறுவனம் ஆகும்.[10][11] மேலும் இது இந்தியாவின் மிகப் பழமையான அமைப்பாகும்.[12][13] இது மொத்தம் 80,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.</ref>[8] இதனை "இந்தியப் பாதுகாப்பின் நான்காவது ஆயுதம்" என்றும்[14][15][16] , இந்தியாவின் "ஆயுதப் படைகளுக்குப் பின்னால் உள்ள படை" என்றும் அழைக்கப்படுகிறது.[17][18] 2020-2021ஆம் ஆண்டில் இதன் மொத்த விற்பனை US$3 பில்லியன் (₹22,389.22 கோடி) ஆகும்.[2]
இது காற்று, நிலம் மற்றும் கடல் அமைப்புகளில் இயங்கும் போர்க் கருவிகளின் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி, சோதனை, சந்தைப்படுத்தல் மற்றும் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்தியப் படைக்கலத் தொழிற்சாலை வாரியம் நாடு முழுவதும் நாற்பத்தொரு ஆயுதத் தொழிற்சாலைகள், ஒன்பது பயிற்சி நிறுவனங்கள், மூன்று பிராந்திய சந்தைப்படுத்தல் மையங்கள் மற்றும் நான்கு பிராந்திய பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது.[19][20] ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 18 அன்று ஆயுதத் தொழிற்சாலை நாள் கொண்டாடப்படுகிறது.[21][22]
பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றுதல்
தொகு1 அக்டோபர் 2021 அன்று இந்த வாரியம் கலைக்கப்பட்டு, அதன் 41 தொழிற்சாலைகள் 7 பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் கொண்டு வரப்பட்டது.[23][24][25] அவைகள் பின்வருமாறு:
- இயந்திரா இந்தியா, கான்பூர்
- ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட், ஆவடி
- இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம், கான்பூர்
- முனிசன்ஸ் இந்தியா லிமிடெட், புனே
- ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட், கான்பூர்
- கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட், கான்பூர்
- இந்தியா ஆப்டெல் லிமிடெட், தேராதூன்
படைக்கலன் தொழிற்சாலைகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ordnance Factory Board-History". பார்க்கப்பட்ட நாள் 10 September 2021.
- ↑ 2.0 2.1 2.2 "Corporatisation of ordnance factories may lead to selective privatisation in the long term". 5 July 2021.
- ↑ "Defence Ministry issues order for Ordnance Factory Board dissolution". The Hindu. 28 September 2021. https://www.thehindu.com/news/national/defence-ministry-issues-order-for-ordnance-factory-board-dissolution/article36707478.ece.
- ↑ "Home | Ordnance Factory Board | Government of India". ofbindia.gov.in.
- ↑ "About Department of Defence Production – Department of Defence Production". ddpmod.gov.in. Archived from the original on 4 February 2017. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.
- ↑ "Archived copy". Archived from the original on 24 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-05-13.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Antony reviews Ordnance Factory Board work". The Hindu (Chennai, India). 2012-04-17. http://www.thehindu.com/news/national/article3321340.ece.
- ↑ 8.0 8.1 "Trends in Defence Production: Case of Ordnance Factories". பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
- ↑ "History | Directorate of Ordnance (Coordination and Services) | Government of India".
- ↑ https://www.sipri.org/sites/default/files/2018-12/fs_arms_industry_2017_0.pdf [bare URL PDF]
- ↑ "Factories of graft". பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
- ↑ "Ministry of Defence, Govt of India". Mod.nic.in. Archived from the original on 4 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2012.
- ↑ John Pike. "Ordnance Factories". பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
- ↑ "Two Centuries of Guns and Shells". Mod.nic.in. Archived from the original on 7 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2012.
- ↑ "WHAT". Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
- ↑ "Gun Carriage Factory". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
- ↑ "About Us – Ordnance Factory Board". Ordnance Factory Board. பார்க்கப்பட்ட நாள் 2012-07-17.
- ↑ "Hindustan Aeronautics Limited". Archived from the original on 25 June 2014. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
- ↑ "OFB in Brief – Ordnance Factory Board". Ordnance Factory Board. Archived from the original on 29 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
- ↑ "Our Units – Ordnance Factory Board". Ordnance Factory Board. Archived from the original on 29 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
- ↑ "VFJ celebrates 212th Ordnance Factory Day". The Hitavada. Archived from the original on 3 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
- ↑ Our Bureau. "Business Line : Industry & Economy News : Ordnance Factory to invest Rs 15,000 cr for modernisation". Thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-17.
- ↑ OFB dissolved: The 7 new companies inaugurated by PM Modi on Dussehra
- ↑ Govt dissolves OFB, transfers employees and assets to 7 PSUs
- ↑ Ordnance Factory Board (OFB): Details on conversion to 7 Public Sector Undertakings