இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம்

அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் அண்டு எகிப்மெண்ட்ஸ் இந்தியா லிமிடெட் (Advanced Weapons and Equipment India Limited (AWE), இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தலைமையிடம் கான்பூர் நகரத்தில் உள்ளது. படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழிருந்த நிறுவனங்களை 1 அக்டோபர் 2021 முதல் 7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றிய போது, இந்நிறுவனம் உருவானது.[1][2][3]

மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி நிறுவனம்
Advanced Weapons and Equipment India Limited
வகைபொதுத்துறை நிறுவனம்
முந்தியதுபடைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்
நிறுவுகைஅக்டோபர் 1, 2021 (2021-10-01)
முதன்மை நபர்கள்பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர்
தொழில்துறைபாதுகாப்பு உற்பத்தி
உற்பத்திகள்பீரங்கிகள்
சிறு ஆயுதங்கள்
ஏவுகணை செலுத்திகள்
கணையெக்கிகள்
மிதிவெடிகள்
உரிமையாளர்கள்இந்திய அரசு

இந்நிறுவனம் இந்திய இராணுவத்திற்கும், வெளிநாட்டு இராணுவத்திற்கும் தேவையான பீரங்கிகள், துப்பாக்கிகள், சிறு ஆயுதங்கள், ஏவுகணை செலுத்திகள், கணையெக்கிகள் மற்றும் மிதிவெடிகளை போர்க்கள பீரங்கி தொழிற்சாலை, கான்பூர், பீரங்கிக் குண்டுகள் தொழிற்சாலை, கோசிப்பூர், பீரங்கி வண்டி தொழிற்சலை, ஜபல்பூர், படைக்கலத் தொழிற்சாலை, கோர்வா, படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி, துப்பாக்கித் தொழிற்சாலை, ஈசாப்பூர் மற்றும் கான்பூர் சிறு ஆயுதங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்கிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு