பூசாவல்
பூசாவல் என்பது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஜள்காவ் மாவட்டத்தின் நகரம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும்.[1] 1882 ஆம் ஆண்டில் நகராட்சி நிறுவப்பட்டது. ஜள்காவ் மாவட்டத்தில் பூசாவல் மிகப்பெரிய தாலுகா ஆகும். இந்த நகரம் 47 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் பரப்பளவு 13.38 சதுர கி.மீ. ஆகும். பூசாவல் நகரத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் உள்ளது.
இந்த நகரம் தப்தி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அஜந்தா குகைகள் பூசாவலில் இருந்து சுமார் 63 கி.மீ ( ஜாம்னர் வழியாக) தொலைவில் உள்ளன. 1-3 லட்சம் மக்கட் தொகையைக் இந் நகரம் நாட்டின் 69 வது தூய்மையான நகரமாகும். இந்த நகரம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழைப்பழ ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிக்கின்றது.
புவியியல்
தொகுபூசாவல் நகரம் தப்தி நதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கின்றது. தப்தி ஆறு மத்திய இந்தியா வழியாக சத்புரா மலைத்தொடருக்கும், டெக்கான் பீடபூமியின் அஜந்தா மலைகளுக்கும் இடையில் பாய்கிறது. இது இந்தியாவின் சுமார் 724 கிலோமீட்டர் (450 மைல்) நீளமுள்ள முக்கிய நதிகளில் ஒன்றாகும். தப்தி நதி பெத்துல் மாவட்டத்தில் உருவானது. இந்த மாவட்டம் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. பூசாவால் மகாராஷ்டிரா மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரம் மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது.
இடவியல்
தொகுபூசாவல் 21 ° 02'50.56 "வடக்கு 75 ° 47'15.99" கிழக்கு என்ற அமைவிடத்தில் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 209 மீட்டர் ஆகும். சத்புரா மலைத்தொடர்களுக்கும் டெக்கான் பீடபூமியின் அஜந்தா மலைகளுக்கும் இடையில் பள்ளத்தாக்கில் விழும் தப்தி ஆற்றின் கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. நகராட்சி மன்றத்தின் மொத்த நிலப்பரப்பு 228.57 சதுர கி.மீ. ஆகும்.
புள்ளி விபரங்கள்
தொகு2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி பூசாவல் நகரத்தில் 187,421 மக்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கட் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 96,147 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 91,274 ஆகவும் உள்ளது. நகர மக்களின் கல்வியறிவு விகிதம் 88.38% வீதமாகும். பெண்களின் கல்வியறிவு விகிதம் ஆண்கள் 91.74% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 84.87% ஆகவும் இருந்தது.[2]
இந்து மதம் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதமாகும். மொத்த மக்கட் தொகையில் 64.06% வீதத்தினரால் இந்து மதமும், 24.40% வீதத்தினரால் இசுலாமிய மதமும், 8.79% வீதத்தினரால் பௌத்த மதமும் பின்பற்றப்படுகின்றது.[2]
காலநிலை
தொகுபூசாவல் நகரம் மிகவும் வறண்ட மற்றும் வெப்பமான காலநிலையைக் கொண்டுள்ளது. கோடைகாலத்தில் வெப்பநிலை 46 முதல் 49 பாகை செல்சியஸ் வெப்பநிலையை அடையும். இது இந்தியாவில் மிக உயர்ந்த வெப்பநிலையாகும். 2010 ஆம் ஆண்டில் வெப்பநிலை 49 ° ஐத் தாண்டி 49.8 ஐ எட்டியது. நகரம் நல்ல மழையைப் பெறுகிறது மற்றும் குளிர்காலம் மிதமானது.
பொருளாதாரம்
தொகுபூசாவல் வாழை சாகுபடிக்கு பெயர் பெற்றது. வாழைப்பழங்களை வாங்க வர்த்தகர்கள் பூசாவலுக்கு வருகிறார்கள். வாழைப்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.[3] மேலும் இங்கு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.
போக்குவரத்து
தொகுபூசாவல் சந்தி ரயில் நிலையம் நல்ல ரயில் சேவையைக் கொண்டுள்ளது மற்றும் மத்திய ரயில்வேயின் ஒரு பிரதேச தலைமையகமாகும். அஜந்தாவுக்கு (83 கி.மீ தூரத்தில்) அருகிலுள்ள சந்தி பூசாவல் ஆகும்.
ஜுல்கான் விமான நிலையம் பூசாவலுக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். அவுரங்காபாத் விமான நிலையம் டெல்லி, புனே, நாக்பூர் மற்றும் மும்பைக்கு நேரடி இணைப்பைக் கொண்டுள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ 2.0 2.1 "Bhusawal City Population Census 2011-2019 | Maharashtra". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
- ↑ "The story of Jalgaon district in Maharashtra as the 'new' banana republic". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-07-16. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.