போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி, சென்னை

போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) ஆவடி, சென்னை (Combat Vehicles Research and Development Establishment (CVRDE)), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ) (Defence Research and Development Organisation (DRDO) இயங்கும் ஒரு ஆய்வகமாகும். இது இந்தியாவில் சென்னையை அடுத்த ஆவடியில் அமைந்துள்ளது. இந்த முதன்மை ஆய்வகம் கவச போர் ஊர்திகள் (Armoured fighting vehicles) மற்றும் தகரிகளின் வளர்மானத்தில் ஈடுபட்டுள்ளது.

போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், (சி.வி.ஆர்.டி.இ) ஆவடி, சென்னை
தலைமையிடம் சி.வி.ஆர்.டி.இ, ஆவடி, சென்னை - 600 054
நிறுவப்பட்ட ஆண்டு மார்ச்சு 1976
முக்கிய துறை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ)
ஊழியர்கள் ~3000
இயக்குநர் எஸ் சிவகுமார்
இணையத் தளம் CVRDE Home Page பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்
மணல் மேடுகளில் அர்ஜூன் முதன்மை தகரி பரிசோதிக்கப்படுகிறது
அர்ஜுன் முதன்மை தகரி
கண்காட்சியில் T-90 பீஷ்மா தகரி தன் சுழல் பீரங்கியுடன்

வரலாறு

தொகு

இந்திய விடுதலைக்குப் பின்பு, பாகிஸ்தானில் சக்லாலா என்ற இடத்தில் அமைந்திருந்த பொறிமுறை போக்குவரத்து நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் பணிமனை(Chief Inspectorate of Mechanical Transport Establishment (MTE) மகாராட்டிர மாநிலத்தில் உள்ள அஹமதுநகருக்கு இடம் பெயர்ந்தது. இது ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், அகமதுநகர் (Vehicle Research & Development Establishment (VRDE), Ahmednagar) என்று பெயர் மாற்றப்பட்டது.

சென்னை ஆவடியில் 1965 ஆம் ஆண்டு விசயந்தா (Vijayanta MBT) தகரியினை உற்பத்தி செய்வதற்காக கனரக போரூர்தித் தொழிற்சாலை (Heavy Vehicles Factory (H.V.F) தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் ஒரு பிரிகை (detachment), அகமதுநகரிலிருந்து பிரிந்து ஆவடியில் தொடங்கப்பட்டது. ஆவடியில் இயங்கிய இந்தப் பிரிகை 1976 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முழுமையடைந்த ஒரு டி ஆர். டி. ஒ ஆய்வமாக வளர்ச்சி பெற்று போரூர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (Combat Vehicles Research and Development Establishment) என்று பெயர் மாற்றம் பெற்றது. கவச போரூர்திகளை வடிவமைக்கும் பொறுப்பும் பெற்றது.[1]

ஆற்றிவரும் பணிகள்

தொகு

பாதையிடு போரூர்திகள் (tracked combat vehicles) மற்றும் சிறப்புப் பாதையிடு ஊர்திகளையும் (specialized tracked vehicles) வடிவமைத்து முன் மாதிரிகளை (prototypes) உருவாக்கும் பணியினை சி.வி.ஆர்.டி.இ பெற்றது. சி.வி.ஆர்.டி.இ குறிப்பிட்ட வானூர்தி துணையமைப்புகளான வானூர்தி பொறி (எஞ்சின்) மற்றும் நீர்மவியல் பொறிகளையும் (hydraulic systems) வடிவமைத்துள்ளது. மற்ற டி.ஆர்.டி.ஒ ஆய்வகங்களைப் போல படைத்துறை சார்ந்த ஆயுதங்கள் வடிவமைப்பு மட்டுமல்லாமல் படைத்துறை சாராத தொழில் நுட்பங்களையும் சமுதாயம் பயனுறும் வகையில் மேம்படுத்தியுள்ளது. இந்த ஆய்வகத்தின் அன்மைய திட்டம் ஆளில்லா பாதையிடு நிலவூர்திகளை (Unmanned Ground Vehicles of the tracked category). வடிவமைப்பதாகும் [2]

ஆய்வுத் திட்டங்கள் மற்றும் வளர்மான பொருட்கள்

தொகு

சி.வி.ஆர்.டி.இ ஆய்வகத்தின் முதன்மையான பணி அர்ஜுன் என்ற பெயரில் முதன்மைக் தகரிகளை உருவாக்குவதாகும். இந்தியப் தரைப்படைத்துறை 248 அர்ஜுன் தகரிகளுக்கு வழங்கீட்டு ஆணை (supply order) பிறப்பித்துள்ளனர். இந்த நிறுவனம் உருவாக்கிய சில ஊர்திகளிவை:

  1. போரூர்தி எக்ஸ்,
  2. அர்ஜுன் அடிச்சட்டகத்தைக் (Arjun Chassis) கொண்டு உருவான பீம் சுய உந்துப் பீரங்கி (Bhim Self Propelled Artillery,),
  3. போர்த்திறன் கூட்டப்பட்ட அஜெயா (Combat Improved Ajeya), இது ஒரு இந்திய படைத்துறையின் மேம்படுத்தப்பட்ட டி.-72 ரக தகரி ஆகும்.

கவச போரூர்த்திகளுடன் தொடர்புடைய பல தொழில்நுட்பங்களில் சி.இ.வி.ஆர்.டி.இ பங்காற்றி வருகிறது. இந்த ஆய்வகத்தில் கவச போரூர்திகளுக்கான தன்னியக்கச் செலுத்தம் (Automatic transmissions for Armored Fighting Vehicles) பற்றி ஒரு தனி துறை நிறுவி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தன்னியக்கச் செலுத்தம் 1500, 800, 150 குதிரைத்திறன் (horsepower) அளவுகளில் வடிவமைக்கப் பட்டுள்ளன.[3] இதனோடு தொடர்புடைய துணையமைப்புகளான:

  1. திருக்கு விசை மாற்றி (torque converter),
  2. பாய்ம இணைப்பு மற்றும் மந்தமாக்கி (Fluid coupling and retarder),
  3. திசை திருப்பி தொகுதிகள் (Steering units), மற்றும்
  4. கடைநிலைச் செலுத்தி (Final drives )

போன்ற பலவற்றையும் வடிவமைத்துள்ளனர்.

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அர்ஜூன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேலும் பார்க்க

தொகு
  • Armoured Vehicle Tracked Light Repair பாதையிடு கவச போரூர்தி இலகுவான சீரமைப்புப் பணிகளுக்காக
  • BLT T-72 பாலமிடு தகரி பி.எல்.டி டி-72
  • CMF T-72 மோர்டார் ஏந்தும் போரூர்தி டி-72
  • DRDO Armoured Ambulance டி.ஆர்.டி.ஒ கவச நோயர் காவூர்தி
  • DRDO light tank டி.ஆர்.டி.ஒ இலகு ரக தகரி
  • M-46 Catapult எம் 46 சுய உந்துப் பீரங்கி

மேற்கோள்கள்

தொகு
  1. "Combat Vehicles Research & Development Establishment Historical Background of CVRDE". Archived from the original on 2012-02-10. பார்க்கப்பட்ட நாள் 2012-03-14.
  2. "Combat Vehicles Research & Development Establishment Areas of Work". Archived from the original on 2012-02-10. பார்க்கப்பட்ட நாள் 2012-03-14.
  3. "Combat Vehicles Research & Development Establishment Facilities Available". Archived from the original on 2012-02-10. பார்க்கப்பட்ட நாள் 2012-03-14.

வெளி இணைப்பு

தொகு