அர்ஜுன் கவச வாகனம்

அர்ஜுன் (Arjun MBT)) இந்தியாவின் டி. ஆர். டி. ஒ நிறுவனம் இந்திய தரைப்படைக்காக உருவாக்கிய ஒரு கவச வாகனமாகும். இது மகாபாரதத்தில் வரும் அர்சுனன் என்னும் கதாப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கபடுகிறது. இதன் உச்ச வேகம் 70 கி.மி. ஆகும். இந்திய ராணுவம் 2000ஆவது ஆண்டில் 124 அர்ஜுன்களை டி. ஆர் டி ஒ விடம் கோரியது. இது சென்னையில் உள்ள ஆவடி கவச வண்டிகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இதன் உருவாக்கம் பல்வேறு தாமதங்களையும் பல தோல்விகளையும் தாண்டி வந்தது ஆகும். இது இந்திய ராணுவத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள டி-90 என்னும் கவச வாகனத்திற்கு பதிலாக எதிர்காலத்தில் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன்
மணல் மேடுகளில் அர்ஜூன் பரிசோதிக்கப்படுகிறது
வகைமுக்கிய சண்டை டாங்கு
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்சி. வி. ஆர். டி. ஈ, டி. ஆர். டி. ஓ
வடிவமைப்புமார்ச் 1974–தற்போது வரை
தயாரிப்பாளர்கனரக வண்டிகள் தொழிற்சாலை, ஆவடி
ஓரலகுக்கான செலவுரூ. 17.2 கோடி[1]
உருவாக்கியது2004–தற்போது வரை
எண்ணிக்கை124[2]
மாற்று வடிவம்Tank EX
அளவீடுகள்
எடை58. 5 டன்கள்
நீளம்10.638 மீ
அகலம்3.864 மீ
உயரம்2.32 மீ
பணிக் குழு4 (தலைவர், சுடுனர், ஏற்றுபவர் மற்றும் ஓட்டுனர்)

கவசம்எஃகு/கூட்டுக் கவசம் காஞ்சன் கவசம்.
முதல் நிலை
ஆயுதங்கள்
120 மி. மீ சுருள் துளையிடப்பட்ட டாங்கு பீரங்கி
லஹாட் எதிர்-டாங்கு ஏவுகணை
ஹீட், ஏபிஎஸ்டிஎஸ், ஹேஷ் டாங்கு குண்டுகள்[3]
இரண்டாம் நிலை
ஆயுதங்கள்
ஹெச்.சி.பி 12.7 மி. மீ விமான எதிர்ப்பு எந்திர துப்பாக்கி
மாக் 7.62 மி. மீ டி. கே 715 அச்சொன்றிய எந்திரத் துப்பாக்கி[3]
இயந்திரம்எம். டி. யூ 838 கே ஏ. 501 டீசல் எஞ்சின்
1,400 குதிரை சக்தி (1,040 கிலோவாட்)
ஆற்றால்/எடை26 குதிரை சக்தி/டன்
பரவுமுறைRenk epicyclic train gearbox, 4 முன்னோக்கும் மற்றும் 2 பின்னோக்கும் பல் சக்கரங்கள்
Suspensionநீர்-காற்றியக்கம்
எரிபொருள் கொள்ளளவு1,610 லிட்டர்
இயங்கு தூரம்
450 கி. மீ[3]
வேகம்மணிக்கு 72 கி. மீ (சாலைகளில்)[3] மணிக்கு 40 கி. மீ (சீரற்ற நிலப்பரப்பில்)[3]

மேற்கோள்கள் தொகு

  1. India, Frontier. "Indian MoD outlines roadmap for MBT Arjun, Mark II in pipeline | Frontier India Strategic and Defence - News, Analysis, Opinion". Frontierindia.net. பார்க்கப்பட்ட நாள் 2010-02-07.
  2. DRDO working on more advanced version of Arjun MBT: Saraswat
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Arjun specifications india-defence.com

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அர்ஜூன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_கவச_வாகனம்&oldid=3611237" இலிருந்து மீள்விக்கப்பட்டது