திருநெல்வேலி மாநகராட்சி

இந்தியாவின் தமிழ்நாட்டின் 15 மாநகராட்சிகளில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி.

திருநெல்வேலி பெருநகர மாநகராட்சி

தமிழ் நாடு
திருநெல்வேலி மாநகராட்சி
TamilNadu Logo.svg

இக்கட்டுரை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள்
என்ற தொடரில் ஒரு பகுதி

திருநெல்வேலிமாநகராட்சி.jpg

ஏனைய மாவட்ட்ங்கள் ·  அரசியல் நுழைவு
தமிழக உள்ளாட்சி நுழைவு

திருநெல்வேலி பெருநகர மாநகராட்சி, தென் இந்தியா வின், தமிழ்நாடு மாநிலத்தில், தெற்குப் பகுதி மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தின், மாநகர் பகுதியாகும். தமிழகத்தின் ஆறாவது பெரிய நகரமாகும். இது ஆரம்பிக்கப்பட்டது 1994ஆம் ஆண்டு. திருச்சிராப்பள்ளி , சேலம் ஆகியவை திருநெல்வேலி மாநகராட்சியின் வயதை ஒத்தவை.

பல சிறப்புகளுக்குப் பெயர் கொண்ட மாநகராட்சிப் பகுதியாகும். திருநெல்வேலி மாவட்டம் தான், பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சிநாதன் மற்றும் விடுதலைப் புரட்சியாளர்களான வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா மற்றும் பலரின் பிறப்பிடமாகும்.

டிவிஎஸ் சுந்தரம், சிம்சன், ஏசான், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன தொழிலதிபர்களும் இம்மாவட்டத்தையே பிறப்பிடமாகக் கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி, 'அல்வா' தயாரிப்புக்குப் பிரசித்திப் பெற்ற இடமாகும். இதனால் இது, "அல்வா நகரம்" என்ற இடுகுறிப் பெயருடன் விளங்குகின்றது.

இம்மாநகராட்சி, மூன்று பெரிய நகராட்சிகளை ஒன்றிணைக்கின்றது. அதாவது,

  1. திருநெல்வேலி,
  2. பாளயங்கோட்டை,
  3. மேலப்பாளையம்

மற்றும் இதர ஊராட்சிகளையும் இணைக்கின்றது.

குற்றால அருவிகள் திருநெல்வேலிமாவட்ட குற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இவை தென்னகத்தின் "ஸ்பா" (ஆரோக்கிய நீருற்றுகள்) என்றழைக்கப்படுகின்றன.

மாநகராட்சிதொகு

தற்பொழுதய திருநெல்வேலி மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்
ஆணையர் மேயர் துணை மேயர் மாநகராட்சி உறுப்பினர்கள்
' விஜிலா சத்தியானந்த் ' 55 உறுப்பினர்கள்

வெளி இணைப்புக்கள்தொகு