பெரிய காலாடி

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

வெண்ணிக் காலாடி என்பவர் மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியாக இருந்தவர். வெண்ணிக்காலாடி தேவேந்திரகுல வேளாளர்களில் காலாடி என்ற உட்பிரிவைச் சேர்ந்தவர்.[1]

பெரியகாலாடி
Periya Kaladi
பூலித்தேவர் போர்படைத் தளபதி வெண்ணிக் காலாடியின் படிமம்
பின்னையவர்பிரித்தானியா பேரரசு
பிறப்புநெற்கட்டும்சேவல்
இறப்பு1759
தந்தைஅறியப்படவில்லை
மதம்இந்து

போர் தொகு

பூலித்தேவரை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணினார் கான்சாகிப், அதனால் இரவில் பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிடலாம் என்று தீர்மானித்து கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்த செய்தியை அறிந்த பெரிய காலாடி சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார்.அப்போது எதிரி வீரன் ஒருவன் மறைந்திருந்து தாக்கியதால் காயமுற்றார் என்றாலும் வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளியே வந்த நிலையிலும், தான் தலைப்பாகையாகக் கட்டியிருந்த துண்டை எடுத்து, வெளியே வந்த தன் குடலை மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி, தன் வயிற்றைத் துண்டால் கட்டிக் கொண்டு எதிரிகளுடன் சண்டையிட்டு அவர்களை தோற்கடித்தார்.தான் எதிரிகளை தோற்கடித்ததையும், அவர்கள் படையுடன் காட்டில் சென்று பதுங்கியிருப்பதையும் தெரிவிக்க சூறாவளி காற்றைப்போல் தன் குதிரையை செலுத்தி பூலித்தேவரிடம் வந்தடைந்தார். பலத்த காயத்துடன் வந்த வெண்ணிக்காலாடியை பூலித்தேவர் தன் மடியில் கிடத்தி நடந்தவற்றை கேட்டுக்கொண்டிந்த நேரம், செய்தியை கூறிவிட்டு மரணம் அடைந்தார்.[2]

சிந்து தொகு

தன் தளபதி பெரிய காலாடி எதிரிகளுடன் போரிட்டு மரணம் அடைந்த இடத்தில், பிற்காலத்தில் பூலித்தேவர், வீரக்கல் (நடுகல்) ஒன்றை நட்டு வைத்தார். அந்த இடம் இன்றும் இப்பகுதி மக்களால் ‘காலாடி மேடு’ என்று அழைக்கப்படுகிறது.[3] பூலித் தேவன் சிந்தும், காலாடியின் புகழை பாடுகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

 1. "Periya Kaladi,Commander of the army who fought against Khan Saqib even though his gut collapsed" (in en-IN). The One India. 2018-08-15. https://tamil.oneindia.com/news/tamilnadu/pulithevan-s-war-veteran-commander-periya-kaladi-killed-the-327483.html. 
 2. குங்குமம் வார இதழ் கட்டுரை, பெரிய காலாடி
 3. "பூலித்தேவர் படைத் தளபதி பெரியக் காலாடி" (in தமிழ் மொழி). தி இந்து தமிழ் திசை. 2018-08-15. https://www.hindutamil.in/news/tamilnadu/529453-manimandapam-for-venni-kaladi-hc-directs-home-secretary-to-give-explanation.html. 
 4. கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா
  சூராதி சூரனப்பா..சூழ்ச்சியில் வல்லவனப்பா
  தாயகம் காத்தே தரணி புகழடைந்தானப்பா
  தார்வேந்தன் பூலி பட்டயம் பெற்றானப்பா."
  பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி
  பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே
  பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி
  பாங்காய் குவித்திட்டான் மலைபோலே…
  எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை
  எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா
  செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்
  சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க…
  காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்
  கால் நொடியில் காற்றாய் பறந்தானே…
  பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி
  பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ … (பூலித்தேவன் சிந்து)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_காலாடி&oldid=3829573" இலிருந்து மீள்விக்கப்பட்டது