இந்தியா சிமெண்ட்ஸ்

இந்தியா சிமெண்ட்ஸ் என்பது இந்தியாவில் உள்ள சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இது 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் முதல் ஆலை 1949 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சங்கர் நகர் இல் அமைக்கப்பட்டது. இது சுமார் ஏழு சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. சங்கர் சிமெண்ட் மற்றும் கோரமன்டல் சிமெண்ட் போன்றவற்றை அவர்கள் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள பிராண்டுகள் ஆகும்.

இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட்
வகைதனியார் துறை
நிறுவுகை1946
தலைமையகம்சங்கர் நகர், தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்நாராயணசாமி சீனிவாசன் — துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்;
தொழில்துறைகட்டுமானத் துறை
உற்பத்திகள்சிமெண்ட்
பணியாளர்7500
இணையத்தளம்www.indiacements.co.in

மேலும் இந்த நிறுவனம் இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஆகும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியா_சிமெண்ட்ஸ்&oldid=3705494" இலிருந்து மீள்விக்கப்பட்டது