சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் சென்னை நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும். 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அணியின் முந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி ஆவார். தற்போதைய பயிற்றுனராக முன்னாள் நியூசிலாந்து வீரர் சுடீபன் பிளெமிங் உள்ளார். இந்த அணியின் உள்ளக அரங்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் துடுப்பாட்ட அரங்கம் உள்ளது.
தனிப்பட்ட தகவல்கள் | ||
---|---|---|
தலைவர் | ருதுராஜ் கெய்க்வாட் | |
பயிற்றுநர் | ஸ்டீபன் பிளெமிங் | |
உரிமையாளர் | இந்தியா சிமெண்ட்ஸ்[1] | |
அணித் தகவல் | ||
நிறங்கள் | ||
உருவாக்கம் | 2008 | |
உள்ளக அரங்கம் | எம் ஏ சிதம்பரம் மைதானம் (சேப்பாக்கம்) | |
கொள்ளளவு | 50,000 | |
வரலாறு | ||
இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள் | 5 (2010, 2011, 2018,2021,2023) | |
சாம்பியன்ஸ் லீக் இருபது20 வெற்றிகள் | 2 (2010, 2014) | |
அதிகாரபூர்வ இணையதளம்: | சென்னை சூப்பர் கிங்ஸ் | |
|
5 முறை வாகைப் பட்டத்தை வென்றுள்ள சென்னை அணி, இந்தியன் பிரீமியர் லீக் அணிகளில் அதிக வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ள அணியாகும். இந்த அணி 2010 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் தொடர்ந்து சாம்பின்ஸ் லீக் இருபது20 கோப்பையை வென்றுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் தொடர்ந்து அதிக வெற்றிகளை (7) பெற்ற அணி என்ற சாதனையையும் 2013 ஆம் ஆண்டில் பெற்றது. மேலும் சாம்பியன்சு லீக் இருபது20 போட்டியின் கோப்பையை இருமுறை வென்றுள்ளது. இந்த அணியின் சார்பில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் சுரேஷ் ரைனாவும் அதிக ஆடுநர்களை வீழ்த்தியவர் டுவைன் பிராவோவும் உள்ளனர்.
2013 மே 24 அன்று, சென்னை அணியின் முதன்மை அதிகாரி, குருநாத் மெய்யப்பன், சூதாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த அணியை இரண்டு ஆண்டுகள் தடை செய்து உச்சநீதிமன்றம் அமைத்த முத்கல் குழு உத்தரவிட்டது.[2] அதனால் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பங்கேற்கவில்லை. தடைகாலம் முடிந்த பிறகு மீண்டும் பங்கேற்றது.[3]
தொழில்முறை உரிமையின் வரலாறு
தொகுஇந்தியன் பிரிமியர் லீக் தொடங்கியபோது வாங்கப்பட்ட 8 அணிகளில் சென்னை அணியும் ஒன்றாகும். இதன் 10 ஆண்டுகளுக்கான தொழில்முறை உரிமையை இந்திய சிமேன்ட்ஸ் நிறுவனம் 91 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. 2010ஆம் ஆண்டு வரை இந்தத் தொழில்முறை உரிமையின் விளம்பர நட்சத்திர தூதுவராக இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இருந்தார். மற்றொரு முன்னாள் இந்திய வீரரான வி.பி.சந்திரசேகர் அணியின் தலைமை தேர்வாளர் ஆவார்.
மக்களிடம் துடுப்பாட்டப் போட்டியை கொண்டு சேர்க்க அணிக்கான விளம்பர நட்சத்திர தூதுவர்களாக திரைப்பட நடிகர்களான விஜய்யும் நயன்தாராவும் நியமிக்கப்பட்டனர்.[4][5] . சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் அணியின் இல்ல அரங்கமாக காணப்படும். அணிக்கான கருப்பொருள் பாடலை வைரமுத்து எழுதியிருப்பதோடு மணி சர்மா இசையமைத்துள்ளார் கருப்பொருள் நிகழ்படத்தை ராஜிவ் மேனன் இயக்கியுள்ளார். 2010 ஆம் ஆண்டு அரவிந்த்-சங்கர் இசையில் வெளியிடப்பட்ட 'விசில் போடு' என்னும் விளம்பர பாடல் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
பெயரின் விளக்கம்
தொகுசென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர் சங்கக் காலத் தமிழ் அரசர்களை குறிக்கிறது. அணியின் சின்னம் காட்டு ராஜாவான சிங்கம் ஆகும். இது தமிழகத்தை ஆண்ட பல்லவர்களின் சின்னமும் ஆகும். சூப்பர் கிங்ஸ் என்ற பெயர், இவ்வணியின் உரிமையாளர்களான இந்தியா சிமெண்ட்ஸ் நிருவனத்தின் கோரமாண்டல் கிங் என்ற பெயரில் இருந்தும் தழுவியுள்ளது.
உள்ளக அரங்கம்
தொகுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளக அரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் துடுப்பாட்ட அரங்கமாகும். இந்திய துடுப்பாட்ட வாரியத்தின் முன்னாள் தலைவரான திரு.எம்.ஏ.சிதம்பரத்தில் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கம், இந்தியாவில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் மிகவும் பழைமையான அரங்கமாகும். தமிழ்நாடு துடுப்பாட்டக் கழகத்திற்கு சொந்தமான் இந்த அரங்கில் மே 2013 நிலவரப்படி 50,000 பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது. 2011 துடுப்பாட்ட உலக கிண்ணத்திற்காக புணரமைக்கப்பட்டபோது இதன் பார்வையாளர் கொள்ளளவு 36,000தில் இருந்து 50,000ஆக அதிகரிக்கப்பட்டது.
இங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 62.75 சதவிகித வெற்றியை பதிவு செய்துள்ளது. ரசிகர்களால் "சேப்பாக்கம் கோட்டை" எனவும் "சிங்கத்தின் குகை" எனவும் அழைக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கு விளையாடிய 8 போட்டிகளிலும் (ராயல் சேலஞ்சர்சு பெங்களூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி உள்பட) வென்று, தன் உள்ளக அரங்கத்தில் அனைத்து போட்டிகளிலும் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்தது.
முடிவுகள்
தொகுஆண்டு | இந்தியன் பிரீமியர் லீக் | சாம்பியன்ஸ் லீக் இருபது20 |
---|---|---|
2008 | இரண்டாம் இடம் | இரத்து செய்யப்பட்டது (தே) |
2009 | அரையிறுதி | தே.இ |
2010 | வாகையாளர் | வாகையாளர் |
2011 | வாகையாளர் | குழு சுற்று |
2012 | இரண்டாம் இடம் | குழு சுற்று |
2013 | இரண்டாம் இடம் | அரையிறுதி |
2014 | இரண்டாம் இடம் | வாகையாளர் |
2015 | இரண்டாம் இடம் | தொடர் கைவிடப்பட்டது |
ஆண்டு | இந்தியன் பிரீமியர் லீக் | |
2016 | தகுதி நீக்கப்பட்டது | |
2017 | தகுதி நீக்கப்பட்டது | |
2018 | வாகையாளர் | |
2019 | இரண்டாம் இடம் | |
2020 | ஏழாம் இடம் | |
2021 | வாகையாளர் | |
2022 | ஒன்பதாம் இடம் | |
2023 | வாகையாளர் |
- தே = தேர்வு பெற்றது;
- தே.இ = தேர்வு பெறவில்லை
வீரர்கள் பட்டியல்
தொகு- தங்கள் நாட்டு அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். | பெயர் | நாடு | பிறந்த நாள் | மட்டையாட்ட நடை | பந்துவீச்சு நடை | ஒப்பந்த ஆண்டு | வருமானம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாளர்கள் | ||||||||
31 | ருதுராஜ் கெயிக்வாட் | இந்தியா | 31 சனவரி 1997 | வலது கை | பொருத்தமில்லை | 2019 | ₹6 கோடி (US$7,50,000) | தலைவர் |
21 | அஜின்கியா ரகானே | இந்தியா | 6 சூன் 1988 | வலது கை | வலது கை சுழற்பந்துவீச்சு | 2023 | ₹50 இலட்சம் (US$63,000) | |
66 | ஷேக் ரஷீத் | இந்தியா | 24 செப்டம்பர் 2004 | வலது கை | வலது கை சுழற்பந்துவீச்சு | 2023 | ₹20 இலட்சம் (US$25,000) | |
1 | சமீர் ரிஸ்வி | இந்தியா | 6 திசம்பர் 2003 | வலது கை | பொருத்தமில்லை | 2023 | ₹8.40 கோடி (US$1.1 மில்லியன்) | |
இலக்குக் கவனிப்பாளர் | ||||||||
7 | மகேந்திரசிங் தோனி | இந்தியா | 7 சூலை 1981 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2018 | ₹12 கோடி (US$1.5 மில்லியன்) | |
88 | டேவன் கான்வே | நியூசிலாந்து | 8 சூலை 1991 | இடது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹1 கோடி (US$1,30,000) | வெளிநாடு |
2 | ஆரவெல்லி அவனிஷ் ராவ் | இந்தியா | 2 சூன் 2005 | இடது கை | பொருத்தமில்லை | 2024 | ₹20 இலட்சம் (US$25,000) | |
பன்முக வீரர்கள் | ||||||||
18 | மொயீன் அலி | இங்கிலாந்து | 18 சூன் 1987 | இடது கை | வலது கை சுழற்பந்துவீச்சு | 2021 | ₹8 கோடி (US$1.0 மில்லியன்) | வெளிநாடு |
25 | சிவம் துபே | இந்தியா | 26 சூன் 1993 | இடது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹4 கோடி (US$5,00,000) | |
10 | ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் | இந்தியா | 10 நவம்பர் 2002 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹1.5 கோடி (US$1,90,000) | |
8 | ரவீந்திர ஜடேஜா | இந்தியா | 6 திசம்பர் 1988 | இடது கை | இடது கை சுழற்பந்துவீச்சு | 2018 | ₹16 கோடி (US$2.0 மில்லியன்) | |
19 | அஜய் மண்டல் | இந்தியா | 25 பெப்ரவரி 1996 | இடது கை | இடது கை சுழற்பந்துவீச்சு | 2023 | ₹20 இலட்சம் (US$25,000) | |
75 | டரில் மிட்செல் | நியூசிலாந்து | 20 மே 1991 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2024 | ₹14 கோடி (US$1.8 மில்லியன்) | வெளிநாடு |
17 | ரச்சின் ரவீந்திரா | நியூசிலாந்து | 18 நவம்பர் 1999 | இடது கை | இடது கை சுழற்பந்துவீச்சு | 2024 | ₹1.8 கோடி (US$2,30,000) | வெளிநாடு |
74 | மிட்செல் சான்ட்னர் | நியூசிலாந்து | 5 பெப்ரவரி 1992 | இடது கை | இடது கை சுழற்பந்துவீச்சு | 2018 | ₹1.9 கோடி (US$2,40,000) | வெளிநாடு |
27 | நிஷாந்த் சிந்து | இந்தியா | 9 ஏப்ரல் 2004 | இடது கை | இடது கை சுழற்பந்துவீச்சு | 2023 | ₹60 இலட்சம் (US$75,000) | |
வேகப்பந்துவீச்சாளர்கள் | ||||||||
9 | தீபக் சாஹர் | இந்தியா | 7 ஆகத்து 1992 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2018 | ₹14 கோடி (US$1.8 மில்லியன்) | |
33 | முகேஷ் சௌத்ரி | இந்தியா | 6 சூலை 1996 | இடது கை | இடது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹20 இலட்சம் (US$25,000) | |
24 | துசார் தேஷ்பாண்டே | இந்தியா | 15 மே 1995 | இடது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹20 இலட்சம் (US$25,000) | |
81 | மதீச பத்திரன | இலங்கை | 18 திசம்பர் 2002 | வலது கை | வலது கை வேகப்பந்துவீச்சு | 2022 | ₹20 இலட்சம் (US$25,000) | வெளிநாடு |
90 | முசுத்தாபிசூர் ரகுமான் | வங்காளதேசம் | 6 செப்டம்பர் 1995 | இடது கை | இடது கை மிதவேகப்பந்துவீச்சு | 2024 | ₹2 கோடி (US$2,50,000) | வெளிநாடு |
98 | சிமர்ஜீத் சிங் | இந்தியா | 17 சனவரி 1998 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2022 | ₹20 இலட்சம் (US$25,000) | |
54 | ஷர்துல் தாகூர் | இந்தியா | 16 அக்டோபர் 1991 | வலது கை | வலது கை மிதவேகப்பந்துவீச்சு | 2024 | ₹4 கோடி (US$5,00,000) | |
சுழற்பந்துவீச்சாளர்கள் | ||||||||
46 | பிரசாந்த் சோலங்கி | இந்தியா | 22 பெப்ரவரி 2000 | வலது கை | வலது கை சுழற்பந்துவீச்சு | 2022 | ₹1.2 கோடி (US$1,50,000) | |
61 | மகேசு தீக்சன | இலங்கை | 1 ஆகத்து 2000 | வலது கை | வலது கை சுழற்பந்துவீச்சு | 2022 | ₹70 இலட்சம் (US$88,000) | வெளிநாடு |
Source: சென்னை சூப்பர் கிங்ஸ் |
நிர்வாக மற்றும் உதவிப் பணியாளர்கள்
தொகு- உரிமையாளர் – சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடட்
- தலைமை பயிற்றுனர் – சுடீபன் பிளெமிங்
- மட்டைவீச்சு பயிற்றுனர் – மைக்கேல் ஹசி
- பந்துவீச்சு பயிற்றுனர் – டுவைன் பிராவோ
- பந்துவீச்சு ஆலோசகர் – எரிக் சைமன்ஸ்
- உடற்பயிற்சியாளர் – கிரெக் கிங்
- உடற்பயிற்சி சிகிச்சையாளர் – டோமி சிம்செக்
- செயல்திறன் பகுப்பாளர் – லட்சுமி நாராயணன்
- அணி மேலாளர் – ரஸ்செல் ராதாகிருஷ்ணன்
- அணி மருத்துவர் – மது தொட்டபில்லில்
- ஏற்பாட்டியல் மேலாளர் – சஞ்சய் நடராஜன்
கால அட்டவணை மற்றும் முடிவுகள்
தொகுஇந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் செயல்திறன் தொகுப்பு
தொகுஆண்டு | மொத்தம் | வெற்றிகள் | தோல்விகள் | முடிவின்மை | சமன் | வெற்றி விகிதம் | நிலை | சுருக்கம் |
---|---|---|---|---|---|---|---|---|
2008 | 16 | 9 | 7 | 0 | 0 | 56.25% | 2வது | இரண்டாமிடம் |
2009 | 15 | 8 | 6 | 1 | 0 | 53.33% | 4வது | அரை-இறுதியாளர் |
2010 | 16 | 9 | 7 | 0 | 0 | 56.25% | 1வது | வாகையாளர் |
2011 | 16 | 11 | 5 | 0 | 0 | 68.75% | 1வது | வாகையாளர் |
2012 | 19 | 10 | 8 | 1 | 0 | 55.55% | 2வது | இரண்டாமிடம் |
2013 | 18 | 12 | 6 | 0 | 0 | 61.11% | 2வது | இரண்டாமிடம் |
2014 | 16 | 10 | 6 | 0 | 0 | 62.50% | 3வது | தகுதிச்சுற்று |
2015 | 17 | 10 | 7 | 0 | 0 | 58.8% | 2வது | இரண்டாமிடம் |
2016 | தகுதிநீக்கம் | |||||||
2017 | தகுதிநீக்கம் | |||||||
2018 | 16 | 11 | 5 | 0 | 0 | 68.75% | 1வது | வாகையாளர் |
2019 | 17 | 10 | 7 | 0 | 0 | 58.82% | 2வது | இரண்டாமிடம் |
மொத்தம் | 165 | 100 | 64 | 1 | 0 | 61.28% |
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்டது: 12 மே 2019
எதிரணி வரிசைப்படி[7]
எதிரணி | காலம் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவின்மை | வெற்றி விகிதம் |
---|---|---|---|---|---|---|---|
டெக்கான் சார்ஜர்ஸ்* | 2008–2012 | 10 | 6 | 4 | 0 | 0 | 60% |
டெல்லி கேப்பிடல்ஸ்* | 2008–2015
2018-2019 |
21 | 15 | 6 | 0 | 0 | 71.42% |
கிங்சு இலெவன் பஞ்சாபு | 2008-2015,
2018 |
21 | 12 | 9 | 0 | 0 | 59.52% |
கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா* | 2011 | 2 | 1 | 1 | 0 | 0 | 50% |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 2008-2015,
2018 |
20 | 13 | 7 | 0 | 0 | 65.00% |
மும்பை இந்தியன்ஸ் | 2008-2015,
2018 |
28 | 11 | 17 | 0 | 0 | 39.28% |
புனே வாரியர்சு இந்தியா* | 2011–2013 | 6 | 4 | 2 | 0 | 0 | 66.67% |
ராஜஸ்தான் ராயல்ஸ் | 2008-2015,
2018-19 |
21 | 14 | 7 | 0 | 0 | 66.76℅ |
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | 2008-2015,
2018-19 |
24 | 15 | 8 | 0 | 1 | 65.21% |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 2013-2015,
2018 |
12 | 9 | 3 | 0 | 0 | 75.00℅ |
மொத்தம் | 2008-2015
2018–2019 |
165 | 100 | 64 | 0 | 1 | 61.25% |
*தற்போது செயலற்ற அணிகள் |
சாம்பியன்சு லீக் இருபது20 போட்டி முடிவுகளின் தொகுப்பு
தொகுஆண்டு | போட்டிகள் | வெற்றி | தோல்வி | முடிவின்மை | வெற்றி விகிதம் | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
2008 | – | – | – | – | – | இரத்து செய்யப்பட்டது |
2010 | 6 | 5 | 1 | 0 | 83.33% | வாகையாளர் |
2011 | 4 | 1 | 3 | 0 | 25% | குழு சுற்று |
2012 | 4 | 2 | 2 | 0 | 50% | குழு சுற்று |
2013 | 5 | 3 | 2 | 0 | 60% | அரை இறுதியாளர் |
2014 | 6 | 4 | 1 | 1 | 66.66% | வாகையாளர் |
மொத்தம் | 19 | 11 | 8 | 0 | 57.89% |
- 2009ஆம் ஆண்டு சாம்பின்சு லீக் போட்டிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிபெறவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12". Moneycontrol. https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html. பார்த்த நாள்: 15 August 2019.
- ↑ http://www.espncricinfo.com/india/content/story/898461.html
- ↑ http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article9767741.ece
- ↑ "விளம்பர நட்சத்திர தூதுவர்கள் நியமனம்". Archived from the original on 2008-04-23. பார்க்கப்பட்ட நாள் 2008-04-18.
- ↑ Vijay & Nayan to endorse Chennai Super Kings - Sify.com
- ↑ "CSK - Team". chennaisuperkings.com. பார்க்கப்பட்ட நாள் 24 March 2019.
- ↑ "Indian Premier League - Chennai Super Kings / Records / Result summary". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013.
- ↑ "Champions League Twenty20 - Chennai Super Kings / Records / List of match results (by season)". ESPNcricnfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013.