டெல்லி கேபிடல்ஸ்

(டெல்லி டேர்டெவில்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டெல்லி கேபிடல்ஸ் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமைக்குழு அணியாகும். 2008ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அணியின் உரிமையாளர்களாக GMR குழுமம் மற்றும் JSW குழுமம் ஆகியவை உள்ளன. இதன் உள்ளக அரங்கமாக அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் உள்ளது.

டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி டேர்டெவில்ஸ் (2008–2018)
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ரிஷப் பந்த்
பயிற்றுநர்ரிக்கி பாண்டிங்
Chairmanபார்த் ஜிண்டால்
உரிமையாளர்GMR குழுமம் மற்றும் JSW குழுமம்[1]
அணித் தகவல்
நகரம்டெல்லி, இந்தியா
நிறங்கள்DC
உருவாக்கம்2008 as டெல்லி டேர்டெவில்ஸ்
உள்ளக அரங்கம்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், புதுடெல்லி
(கொள்ளளவு: 41,820)
வரலாறு
இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள்0
சலீஇ20 வெற்றிகள்0
அதிகாரபூர்வ இணையதளம்:delhicapitals.in

Regular kit

India's Unique Diversity Tribute kit

2018ஆம் ஆண்டு உரிமைக்குழுவின் 50% உரிமையை குழுமம் வாங்கியது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 2018இல் இந்த அணி "டெல்லி கேப்பிடல்ஸ்" என்று பெயர் மாற்றப்பட்டது.

உரிமைக்குழு வரலாறு

தொகு

செப்டம்பர் 2007இல், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அதன் முதல் பருவம் 2008ஆம் ஆண்டில் தொடங்கவிருந்தது. அதற்காக 20 பிப்ரவரி 2008இல் டெல்லி உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் மும்பையில் ஏலம் விடப்பட்டன. டெல்லி அணியை GMR குழுமம் 84 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.[2]

மார்ச் 2018இல் GSW குழுமம் தனது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50% பங்குகளை JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் விற்றது..[3] பிறகு டிசம்பர் 2018இல் அந்த அணி டெல்லி கேப்பிடல்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.

பருவங்கள்

தொகு
ஆண்டு இறுதி நிலை புள்ளிப்பட்டியல்
2008 அரையிறுதி (4வது) 4வது
2009 அரையிறுதி (3வது) 1வது
2010 குழுநிலை 5வது
2011 10வது
2012 தகுதிச்சுற்று (3வது) 1வது
2013 குழுநிலை 9வது
2014 8வது
2015 7வது
2016 6வது
2017 6வது
2018 8வது
2019 தகுதிச்சுற்று (3வது) 3வது
2020 இரண்டாம் இடம் 2வது
2021 தகுதிச்சுற்று (3வது) 1வது

வீரர்கள் பட்டியல்

தொகு
  • பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். பெயர் நாடு பிறந்த நாள் மட்டையாட்ட நடை பந்துவீச்சு நடை ஒப்பந்த ஆண்டு வருமானம்
குறிப்புகள்
மட்டையாளர்கள்
25 ஷிகர் தவான்   5 திசம்பர் 1985 (1985-12-05) (அகவை 38) இடது-கை வலது-கை எதிர் திருப்பம் 2019 5.2 கோடி
41 சிரேயாஸ் ஐயர்   6 திசம்பர் 1994 (1994-12-06) (அகவை 29) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 7 கோடி தலைவர்
100 பிரித்வி ஷா   9 நவம்பர் 1999 (1999-11-09) (அகவை 24) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2018 1.2 கோடி
N/A அஜின்கியா ரகானே   5 சூன் 1988 (1988-06-05) (அகவை 36) வலது-கை வலது-கை மிதம் 2020 4 கோடி
பன்முக வீரர்கள்
13 ஹர்ஷல் படேல்   23 நவம்பர் 1990 (1990-11-23) (அகவை 33) வலது-கை வலது-கை மித-வேகம் 2018 20 லட்சம்
20 அக்சார் பட்டேல்   20 சனவரி 1994 (1994-01-20) (அகவை 30) இடது-கை இடது-கை வழமைச் சுழல் 2019 5 கோடி
84 கீமோ பவுல்   21 பெப்ரவரி 1998 (1998-02-21) (அகவை 26) வலது-கை வலது-கை வேகம்-மிதம் 2019 50 லட்சம் வெளிநாட்டு வீர்ர்
இழப்புக் கவனிப்பாளர்கள்
17 ரிஷப் பந்த்   4 அக்டோபர் 1997 (1997-10-04) (அகவை 27) இடது-கை 2018 8 கோடி
பந்து வீச்சாளர்கள்
1 சந்தீப் லாமிச்சன்னே   2 ஆகத்து 2000 (2000-08-02) (அகவை 24) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 20 லட்சம் வெளிநாட்டு வீர்ர்
6 அவேஷ் கான்   13 திசம்பர் 1996 (1996-12-13) (அகவை 27) வலது-கை வலது-கை வேகம்-மிதம் 2018 70 லட்சம்
10 காகிசோ ரபாடா   25 மே 1995 (1995-05-25) (அகவை 29) இடது-கை வலது-கை வேகம் 2018 4.2 கோடி வெளிநாட்டு வீர்ர்
97 இஷாந்த் ஷர்மா   2 செப்டம்பர் 1988 (1988-09-02) (அகவை 36) வலது-கை வலது-கை வேகம்-மிதம் 2019 1.1 கோடி
99 அமித் மிஷ்ரா   24 நவம்பர் 1982 (1982-11-24) (அகவை 41) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2018 4 கோடி
N/A ரவிச்சந்திரன் அசுவின்   17 செப்டம்பர் 1986 (1986-09-17) (அகவை 38) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2020 7.6 கோடி

மேற்கோள்கள்

தொகு
  1. "IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12". Moneycontrol இம் மூலத்தில் இருந்து 15 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://ௌweb.archive.org/web/20190815211914/https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html. பார்த்த நாள்: 15 August 2019. 
  2. "IPL announces franchise owners". ESPNcricinfo. 24 January 2008. Archived from the original on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 7 August 2019.
  3. "JSW Sports buys 50% stake in Delhi Daredevils". ESPNcricinfo. 9 March 2018. Archived from the original on 10 March 2018. பார்க்கப்பட்ட நாள் 9 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்லி_கேபிடல்ஸ்&oldid=3979093" இலிருந்து மீள்விக்கப்பட்டது