2013 இந்தியன் பிரீமியர் லீக்

2013 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 6 அல்லது 2013 ஐபிஎல்), ஆறாவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) 2007இல் தொடங்கியது. இந்தப் போட்டியில் ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 3, 2013 முதல் மே 26, 2013 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.[1] இதன் துவக்கவிழா ஏப்ரல் 2, 2013 அன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் அரங்கத்தில் நடந்தது. குளிர்பான நிறுவனமான பெப்சி புரக்கும் முதல் பருவமாக இது அமைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் முதல் பருவமாகவும் இது அமைந்துள்ளது. முந்தைய பருவ வெற்றியாளர்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை தக்க வைத்துக்கொள்ள விளையாடுகின்றனர்.

2013 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்ஏப்ரல் 3, 2013 (2013-04-03) – 26 மே 2013 (2013-05-26)
நிர்வாகி(கள்)பிசிசிஐ
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி
மற்றும் தீர்வாட்டங்கள்
நடத்துனர்(கள்) இந்தியா
வாகையாளர்TBD
மொத்த பங்கேற்பாளர்கள்9
மொத்த போட்டிகள்76
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
2012
2014

பின்னணி

தொகு

புரவலர்

தொகு

2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை புரவலராக இருந்த டிஎல்எப் நிறுவனத்திற்கு மாற்றாக பெப்சி நிறுவனம் ஏற்றுக்கொண்டது. ஐந்தாண்டுகளுக்கு 250 கோடிக்கு ஏலம் எடுத்திருந்த டிஎல்எப் நிறுவனம் சென் ஆண்டுடன் முடிவடைந்த தனது ஒப்பந்தப்புள்ளியை புதுப்பிக்காதநிலையில் பெப்சிகோ அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, 2017 வரை, 396.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.[2][3] இருப்பினும் ஐபிஎல்லின் தற்போதைய வணிகவிளம்பர மதிப்பு 2010இல் $4.1 பில்லியனாக இருந்ததில் இருந்து 2012இல் $2.9 பில்லியனாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[4]

டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கம்

தொகு

2009 இந்தியன் பிரீமியர் லீக்கின் வாகையாளர்களான டெக்கான் சார்ஜர்ஸ் கொச்சி டஸ்கர்சுக்கு அடுத்ததாக ஐபிஎல்லில் இருந்து நீக்கப்பட்ட அணியானது. அணியின் உரிமையாளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்திலும் இந்திய உச்ச நீதிமன்றத்திலும் தொடுத்த முறையீடுகள் தோல்வியடைந்தன. சார்ஜர்சின் நீக்கத்திற்கு பிறகு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் ஐதராபாத்தில் புதிய மாற்று அணிக்கான ஏலம் விட்டது. இதில் சன் குழுமம் ஆண்டுக்கு 85.05 கோடிக்கு ஏலத்தை வென்றதாக அக்டோபர் 25, 2012 அன்று அறிவிக்கப்பட்டது.[5] இந்தப் புதிய அணிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் எனப் பெயரிடப்பட்டது.[6]

இலங்கை நாட்டு வீரர்களின் பங்கேற்பிற்கு எதிர்ப்பு

தொகு

இலங்கைத் தமிழர் மீதான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வேண்டி தமிழ்நாடெங்கிலும் மாணவர் போராட்டங்களும் பொதுமக்கள் எதிர்ப்பும் வலுத்துவந்த நிலையில் மாநில முதல்வர் ஜெ. ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இலங்கை விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அது சட்டம் ஒழுங்கு சிக்கல்களை உருவாக்கக்கூடிய வாய்ப்புள்ளதால் ஐபிஎல்லில் இலங்கையைச் சார்ந்தவர்கள் பங்கேற்க தடை கோரினார்.[7] இதனை அடுத்து 2013ஆம் ஆண்டு ஐபிஎல் ஆட்டங்கள் தொடுங்குவதற்கு முன்னதாக இலங்கை துடுப்பாட்ட வீரர்களும் பிற அதிகாரிகளும் சென்னையில் நடைபெறும் ஆட்டங்களில் இடம்பெற மாட்டார்கள் என ஆணையிட்டது.[8]

இந்த முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் ஏற்கவில்லை; இது சென்னைக்கு தங்களிட அரங்கப்போட்டிகளில் மேன்மை பயக்கும் என எதிர்த்தன. சென்னை அணியில் இலங்கை ஆட்டக்காரர்கள் முதன்மை ஆட்டக்காரர்களாக இல்லாதநிலையில் மற்ற அணிகளில் இவர்கள் அணித்தலைவர்களாகவோ முதன்மை அங்கம் வகிப்பவர்களாகவோ இருந்தனர். இந்தக் காரணத்தை முன்னுதாரணமாகக் கொண்டு ஏன் சென்னை ஆட்டங்களை மாற்று நகரத்திற்கு மாற்றவில்லை என்ற எதிர்ப்பொலியும் எழுந்தது.[9]

நிகழிடங்கள்

தொகு

இந்தப் போட்டிகள் நடைபெற 12 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன; ராய்ப்பூர் மற்றும் ராஞ்சியும் இந்தப் போட்டிகளை ஏற்றுநடத்த முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.[10] தீர்வாட்டப் போட்டிகள், முந்தைய ஆண்டு வாகையாளர் கொல்கத்தாவில் இரண்டாம் தகுதியாளர் மற்றும் இறுதி ஆட்டங்களையும் இரண்டாம் இடத்தில் வந்த சென்னையில் முதல் தகுதியாளர் மற்றும் வெளியேற்ற ஆட்டங்களையும் ஏற்று நடத்த தீர்மானிக்கப்பட்டது.[11] இலங்கை விளையாட்டாளர்களையும் அலுவலர்களையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாது அரசியல் நெருக்கடிநிலை நிலவுவதால் ஏப்ரல் 27,013 அன்று சென்னையில் நிகழவிருந்த தீர்வாட்டங்கள் தில்லிக்கு மாற்றப்பட்டன. எனவே முதல் தகுதியாளர் மற்றும் வெளியேற்ற ஆட்டங்கள் தில்லியில் நிகழ உள்ளன.[11][12][13]

செய்ப்பூர் தரம்சாலா மொகாலி தில்லி
ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்சு இலெவன் பஞ்சாபு கிங்சு இலெவன் பஞ்சாபு டெல்லி டேர்டெவில்ஸ்
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம் இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கம் பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் பெரோசா கோட்லா
இருக்கைகள்: 30,000 இருக்கைகள்: 23,000 இருக்கைகள்: 30,000 இருக்கைகள்: 48,000
     
மும்பை கொல்கத்தா
மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வான்கேடே அரங்கம் ஈடன் கார்டன்ஸ்
Capacity: 45,000 Capacity: 67,000[14]
   
புனே ராஞ்சி
புனே வாரியர்சு இந்தியா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Maharashtra Cricket Association Stadium JSCA International Cricket Stadium
Capacity: 55,000 Capacity: 35,000
 
பெங்களூரு சென்னை ஐதராபாத்து ராய்ப்பூர்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டெல்லி டேர்டெவில்ஸ்
எம். சின்னசுவாமி அரங்கம் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் இராய்ப்பூர் பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம்
இருக்கைகள்: 55,000 இருக்கைகள்: 50,000 இருக்கைகள்: 55,000 இருக்கைகள்: 65,000
     

அணிகளும் இடங்களும்

தொகு
அணி[15] வி வெ தோ மு.இ பு நிஓவி
சென்னை சூப்பர் கிங்ஸ் 16 11 5 0 22 +0.530
மும்பை இந்தியன்ஸ் 16 11 5 0 22 +0.441
ராஜஸ்தான் ராயல்ஸ் 16 10 6 0 20 +0.322
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 16 10 6 0 20 +0.003
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 16 9 7 0 18 +0.457
கிங்சு இலெவன் பஞ்சாபு 16 8 8 0 16 +0.226
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 6 10 0 12 -0.095
புனே வாரியர்சு இந்தியா 16 4 12 0 8 -1.006
டெல்லி டேர்டெவில்ஸ் 16 3 13 0 6 -0.848

லீக்கில் முன்னேற்றம்

தொகு
குழு ஆட்டங்கள் தீர்வாட்டங்கள்
அணி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 P தகுதி2
சென்னை சூப்பர் கிங்ஸ் 0 2 4 4 6 8 10 12 14 16 18 18 20 ? ? ?
டெல்லி டேர்டெவில்ஸ் 0 0 0 0 0 0 2 2 4 6 6 6 ? ? ? ?
கிங்சு இலெவன் பஞ்சாபு 2 2 2 4 4 6 8 8 8 8 10 10 ? ? ? ?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 2 2 4 4 4 4 6 6 6 8 8 10 ? ? ?
மும்பை இந்தியன்ஸ் 0 2 4 6 6 6 8 10 12 12 14 16 ? ? ? ?
புனே வாரியர்சு இந்தியா 0 0 2 2 4 4 4 4 4 4 4 4 4 ? ? ?
ராஜஸ்தான் ராயல்ஸ் 2 4 4 6 8 8 8 10 12 12 14 16 18 ? ? ?
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 2 2 4 6 6 8 10 12 12 12 14 14 ? ? ? ?
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 4 4 6 6 8 10 10 10 12 14 14 ? ? ? ?
வெற்றி தோல்வி முடிவில்லை
குறிப்பு: ஒவ்வொரு குழு ஆட்டத்தின் பின்னரும் மொத்த புள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

புள்ளிவிபரம்

தொகு

கூடிய ஓட்டங்கள்

தொகு
நாடு விளையாட்டாளர்[16] அணி ஓட்டங்கள் சரா அ.வீ கூ.பு 100 50 4கள் 6கள்
  மைக்கேல் ஹசி சென்னை சூப்பர் கிங்ஸ் 12 574 57.40 131.95 95 0 5 61 15
  கிறிஸ் கெயில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 12 566 70.75 164.53 175* 1 3 51 40
  சுரேஷ் ரைனா சென்னை சூப்பர் கிங்ஸ் 18 548 42.25 150.13 100* 1 4 50 18
  ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் 12 430 53.75 147.76 79* 0 4 28 25
  அஜின்கியா ரகானே ராஜஸ்தான் ராயல்ஸ் 13 424 47.11 112.46 68* 0 4 38 9
  ஷேன் வாட்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் 11 413 45.88 143.90 101 1 1 47 14
  விராட் கோலி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 12 405 36.81 129.39 93* 0 3 40 12
  தினேஷ் கார்த்திக் மும்பை இந்தியன்ஸ் 12 388 35.27 139.56 86 0 2 39 13
  ராபின் உத்தப்பா புனே வாரியர்சு இந்தியா 13 374 28.76 117.98 75 0 2 37 10
  கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 370 28.46 125.85 60 0 4 47 5

     குழு ஆட்டங்களின்போது மிகக் கூடிய ஓட்டங்களை எடுத்துள்ள விளையாட்டாளர் இளஞ்சிவப்பு (ஓரஞ்சு) வண்ணத்தொப்பி அணிந்து களத்தடுப்பு செய்வார்.

அதிக இலக்குகள்

தொகு
Nat Player[17] Team Inns Wkts Ave Econ BBI SR 4WI 5WI
  டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் 12 20 17.05 8.02 &0000000000000003.0370373/27 12.7 0 0
  வினய் குமார் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 12 19 20.42 8.11 &0000000000000003.0555563/18 15.1 0 0
  ஜேம்ஸ் ஃபௌக்குனர் ராஜஸ்தான் ராயல்ஸ் 10 18 14.16 6.51 &0000000000000005.0500005/20 13.0 0 1
  அமித் மிஷ்ரா சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11 17 14.88 6.17 &0000000000000004.0526324/19 14.4 1 0
  சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 16 17.43 5.81 &0000000000000004.0769234/13 18.0 1 0
  மிச்சல் ஜான்சன் மும்பை இந்தியன்ஸ் 11 15 19.33 7.73 &0000000000000003.0370373/27 15.0 0 0
  ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் 12 13 20.84 6.77 &0000000000000003.0714293/14 18.4 0 0
  இஷாந்த் ஷர்மா சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11 13 22.53 7.03 &0000000000000003.0370373/27 19.2 0 0
  ஆர்.பி சிங் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 10 13 24.30 8.13 &0000000000000003.0769233/13 17.9 0 0
  உமேஸ் யாதவ் டெல்லி டேர்டெவில்ஸ் 12 13 25.15 7.81 &0000000000000004.0416674/24 19.3 1 0

     The leading wicket-taker of the group stage wears a purple cap while fielding.

மேற்கோள்கள்

தொகு
  1. "IPL GC ask Sahara to get consent of all franchises". Times of India. 22 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-02-22.
  2. "Pepsi bags title sponsorship of Indian Premier League". 21 November 2012 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121225023538/http://www.ipl-schedule.net/ipl-title-sponsorship-pepsi-bags-title-sponsorship-of-indian-premier-league/. பார்த்த நாள்: 21 November 2012. 
  3. "PepsiCo bags title sponsorship for IPL". The Board of Control for Cricket in India. 21 November 2012 இம் மூலத்தில் இருந்து 18 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130418180052/http://www.bcci.tv/bcci/content/50acb02954435-pepsico-bags-title-sponsorship-for-ipl.html. 
  4. "PepsiCo India to work hard to justify high IPL sponsorship price". Business Today. 23 December 2012. http://businesstoday.intoday.in/story/pepsico-india-justify-high-ipl-sponsorship-price/1/190401.html. பார்த்த நாள்: 27 March 2013. 
  5. "Sun TV Network win Hyderabad IPL franchise". Wisden India. 25 October 2012 இம் மூலத்தில் இருந்து 25 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170625142249/http://www.wisdenindia.com/cricket-news/sun-tv-network-win-hyderabad-ipl-franchise/32100. 
  6. "Sun Risers to represent Hyderabad in IPL". Wisden India. 18 December 2012 இம் மூலத்தில் இருந்து 25 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170625164705/http://www.wisdenindia.com/cricket-news/sun-risers-represent-hyderabad-ipl/40723. 
  7. "Jaya bouncer hits IPL fixtures in Chennai: No Lankans please, we are Tamils". The Telegraph. 26 March 2013. http://www.telegraphindia.com/1130326/jsp/frontpage/story_16716817.jsp. பார்த்த நாள்: 26 March 2013. 
  8. "No Sri Lankan participation in Chennai IPL matches". Wisden India. March 26, 2013 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 2, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130402114834/http://www.wisdenindia.com/cricket-news/sri-lankan-participation-chennai-ipl-matches/56181. 
  9. Gollapudi, Nagraj (27 March 2013). "Franchises fear Chennai no longer level playing field". Cricinfo (ESPN). 
  10. "Raipur, Ranchi to host IPL matches". Cricinfo (ESPN). 9 March 2013. http://www.espncricinfo.com/indian-premier-league-2013/content/story/624264.html. பார்த்த நாள்: 27 March 2013. 
  11. 11.0 11.1 "Knight Riders host Daredevils in IPL 2013 opener". Cricinfo (ESPN). 21 December 2012. http://www.espncricinfo.com/india/content/story/597973.html. பார்த்த நாள்: 2 April 2013. 
  12. "Chennai playoffs moved to New Delhi". Wisden India. 27 April 2013 இம் மூலத்தில் இருந்து 16 ஜூன் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150616124917/http://www.wisdenindia.com/cricket-news/chennai-playoffs-moved-delhi/60230. 
  13. Karhadkar, Amol (27 April 2013). "IPL playoffs moved from Chennai to Delhi". Cricinfo (ESPN). http://www.espncricinfo.com/indian-premier-league-2013/content/story/632662.html. பார்த்த நாள்: 28 April 2013. 
  14. "Eden Gardens". CricInfo. பார்க்கப்பட்ட நாள் 2012-12-26.
  15. "Points Table | Indian Premier League 2013 | ESPN Cricinfo". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2012-12-21.
  16. "Indian Premier League, 2013 / Records / Most runs". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 10 April 2013.
  17. "Indian Premier League, 2013 / Records / Most wickets". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 11 April 2013.

வெளி இணைப்புகள்

தொகு