ராபின் உத்தப்பா

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

ராபின் உத்தப்பா (Robin Uthappa, ஒலிப்பு; பிறப்பு: நவம்பர் 11, 1985) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். இவரது தந்தை வேணு உத்தப்பா ஒரு வளைதடிப் பந்தாட்ட நடுவர். இவர் கருநாடக அணிக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடிவருகிறார்.

ராபின் உத்தப்பா
Robin Uthappa
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராபின் வேணு ஊத்தப்பா
பிறப்பு11 நவம்பர் 1985 (1985-11-11) (அகவை 38)
குடகு மாவட்டம், கருநாடகம், இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தரம்
பங்குதுடுப்பாளர், இலக்குக் கவனிப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 165)15 ஏப்ரல் 2006 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப14 சூலை 2015 எ. சிம்பாப்வே
ஒநாப சட்டை எண்37 (முன்னர் 17)
இ20ப அறிமுகம் (தொப்பி 13)13 செப்டம்பர் 2007 எ. இசுக்காட்லாந்து
கடைசி இ20ப19 சூலை 2015 எ. சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2002/03–2016/17கர்நாடகம்
2008மும்பை இந்தியன்ஸ்
2009–2010ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2011–2013புனே வாரியர்சு இந்தியா
2014–2019கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2017–2018சௌராட்டிரா
2019-2021 சென்னை சூப்பர் கிங்ஸ்கேரளம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 46 13 139 197
ஓட்டங்கள் 934 249 9,336 6,157
மட்டையாட்ட சராசரி 25.94 24.9 41.30 34.20
100கள்/50கள் 0/5 0/1 21/52 14/31
அதியுயர் ஓட்டம் 86 50 162 169
வீசிய பந்துகள் 2  – 751 284
வீழ்த்தல்கள் 0  – 12 5
பந்துவீச்சு சராசரி  –  – 40.00 57.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
 –  – 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
 –  – 0 0
சிறந்த பந்துவீச்சு  –  – 3/26 2/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
19/2 2/– 133/2 109/9
மூலம்: ESPNCricinfo, 29 மார்ச் 2019

ஏப்ரல் 2006 இல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணி ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதில் ஏழாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 86 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அறிமுக வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார்.[1] இவர் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் முறையினால் தி வாக்கிங் அசாசின் எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். 2007 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற மிகமுக்கிய பங்காற்றினார். 2014-2015 ஆம் ஆண்டிகளுக்கான ரஞ்சிக் கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ராபின் உத்தப்பா நவம்பர் 11, 1985 இல் குடகு மாவட்டம், கருநாடகத்தில் பிறந்தார். இவர் பெங்களூர், ஸ்ரீ பகவான் மஹாவீர் ஜெயின் கல்லூரியில் கல்வி பயின்றார்.

இந்தியன் பிரீமியர் லீக்

தொகு

2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தத்ன் தொடரில் சிறப்பான திறமையை வெளிபடுத்தினார். இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய முதல் போட்டியில் 38 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடிய இவர் 36 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்தார். இதில் ஆறு 4 மற்றும் ஒரு 6 ஓட்டங்களும் அடங்கும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டுவைன் பிராவோவுடன் இணைந்து 123 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து முக்கிய போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்தார்.

2009 ஆம் ஆண்டின் இந்திய பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரன போட்டியில் 42 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல்66 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற போட்டிகளில் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தத் தவறினார்.

கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இரண்டாவது அதிவேக 50 ஓட்டங்கள் இதுவாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதுபெற்றார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். இந்தத் தொடர் முழுவதும் 14 போட்டிகளில் விளையாடி 374 ஓட்டங்கள் எடுத்தார். 27 ஆறுகள் அடித்துள்ளார். இந்தத் தொடரில் அதிக ஆறுகள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

சான்றுகள்

தொகு
  1. "Cricinfo – Records – India – One Day Internationals – High scores on debut". பார்க்கப்பட்ட நாள் 2007-08-30.

வெளியிணைப்புகள்

தொகு

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ராபின் உத்தப்பா

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபின்_உத்தப்பா&oldid=3898313" இலிருந்து மீள்விக்கப்பட்டது