குடகு மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்
குடகு மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் மடிகேரி. குடகை ஆங்கிலத்தில் கூர்க் என்று அழைப்பார்கள். 4,100 கிமீ2 பரப்புடைய இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
கொடகு (கூர்க்) | |||||||
— மாவட்டம் — | |||||||
அமைவிடம் | 12°25′15″N 75°44′23″E / 12.4208°N 75.7397°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கருநாடகம் | ||||||
வட்டம் | மடிக்கேரி, சோம்வார்ப்பேடை, விராசுப்பேட்டை | ||||||
தலைமையகம் | மடிக்கேரி | ||||||
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் | ||||||
முதலமைச்சர் | கே. சித்தராமையா | ||||||
பதில் ஆணையர் | திரு கே.ஆர். நிரஞ்சன் | ||||||
மக்களவைத் தொகுதி | கொடகு (கூர்க்) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
5,48,561 (2001[update]) • 134/km2 (347/sq mi) | ||||||
மொழிகள் | கன்னடம், கொடவ தாக் | ||||||
---|---|---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 4,102 சதுர கிலோமீட்டர்கள் (1,584 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.kodagu.nic.in |
மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு முகத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் முதன்மை ஆறு காவிரி ஆகும். காவிரி இம்மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. காவிரியும் அதன் துணை ஆறுகளும் இம்மாவட்டத்தை வளப்படுத்துகின்றன.
குடகு இராச்சியம் தனி அரசாக இருந்து வந்தது. 1834 இல் ஆங்கிலேயர்கள் குடகை தங்கள் ஆட்சியில் இணைத்துக்கொண்டார்கள். 1956 மாநிலங்களை சீர் செய்யும் போது குடகு கர்நாடகாவின் ஒரு மாவட்டமாக சேர்த்து கொள்ளப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு