அணி | ஆடியவை | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை | புள்ளிகள் | நிகர ஓட்ட வீதம் | ||
---|---|---|---|---|---|---|---|---|
ராஜஸ்தான் ராயல்ஸ்(C) | 14 | 11 | 3 | 0 | 22 | +0.632 | ||
கிங்சு இலெவன் பஞ்சாபு | 14 | 10 | 4 | 0 | 20 | +0.509 | ||
சென்னை சூப்பர் கிங்ஸ் (R) | 14 | 8 | 6 | 0 | 16 | -0.192 | ||
டெல்லி டேர்டெவில்ஸ் | 14 | 7. | 6 | [1] | 15 | +0.342 | ||
மும்பை இந்தியன்ஸ் | 14 | 7. | 7. | 0 | 14 | +0.570 | அரை-இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்ற அணிகள் | |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 14 | 6 | 7. | [1] | 13 | -0.147 | ||
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | 14 | 4 | 10 | 0 | 8 | -1.161 | அரை-இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெறாத அணிகள் | |
டெக்கான் சார்ஜர்ஸ் | 14 | 2 | 12 | 0 | 4 | -0.467 |
2008 இந்தியன் பிரீமியர் லீக்
இந்தியன் பிரீமியர் லீக்(IPL) இந்திய மட்டைப்பந்து வாரியத்தால்(BCCI) 2007 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இருபதுக்கு-20 மட்டைப்பந்து பருவத் தொடர் ஆகும். அரங்கேற்றப் பருவப் போட்டிகள் 18 ஏப்ரல் 2008 துவங்கி 1 ஜூன் 2008 வரை நடந்தன.
![]() | |
நிர்வாகி(கள்) | இந்திய மட்டைப்பந்து வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | இருபதுக்கு /20 |
நடத்துனர்(கள்) | ![]() |
வாகையாளர் | (1st-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 59 |
தொடர் நாயகன் | ![]() |
அதிக ஓட்டங்கள் | ![]() |
அதிக வீழ்த்தல்கள் | ![]() |
அலுவல்முறை வலைத்தளம் | www.iplt20.com |
எட்டு அணிகள் சுற்றுப் போட்டிகளில் விளையாடின. இதில் இருந்து நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தேர்வாயின. அதனையடுத்து அரையிறுதிப் போட்டிகளில் வென்ற இரண்டு அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நிகழ்ந்தது.[1] கடைசிப் பந்து வரை சென்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வென்றது.[2] அப்போட்டியில் யூசுப் பதான் ஆட்ட நாயகனாகவும், ஷேன் வாட்சன் தொடரின் சிறந்த ஆட்டக்காரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3] சொஹைல் தன்வீர் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக பழுப்புநீலத் தொப்பியையும், ஷான் மார்ஷ் அதிக ஓட்டங்கள் குவித்ததற்காக ஆரஞ்சு தொப்பியையும் வென்றனர். 19 வயதுக்குக் குறைந்த சிறந்த ஆட்டக்காரராக சிறீவத்ஸ் கோசுவாமி வென்றார். சிறந்த ஆட்ட உணர்வுக்கான தனி விருதை மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வென்றது.
விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்தொகு
குழு நிலவரப்படி வெற்றிப்புள்ளிகள் பின்வருமாறு அளிக்கப்பட்டன:
முடிவுகள் | புள்ளிகள் |
---|---|
வெற்றி | 2 புள்ளிகள். |
முடிவு இல்லை | 1 புள்ளி |
தோல்வி | 0 புள்ளிகள் |
ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு ஓவர் கொண்ட தீர்மானிக்கும் போட்டி நடத்தப்பட்டு முடிவு தீர்மானிக்கப்பட்டது.[4].
குழு நிலவரத்தில், அணிகள் பின்வரும் தேர்வுமுறை அடிப்படையில் தரவரிசை காணப்படும்.[5]
- அதிக பட்ச புள்ளிகளின் எண்ணிக்கை.
- சமநிலை வெற்றிகளின் எண்ணிக்கை.
- சமநிலை தொடர்ந்து இருப்பின் நிகர ஓட்ட வீதம்.
- சமநிலை தொடர்ந்து இருப்பின் குறைந்த பந்து வீச்சு வீதம்.
- சமநிலை தொடர்ந்து இருப்பின், சமநிலை கொண்ட அணிகள் சந்தித்த போட்டியின் முடிவு.
வீரர்களுக்கான ஏலம்தொகு
சனவரி 2008ல் நடைபெற்ற ஏலத்தில் மகேந்திர சிங் தோனி1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரே அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவராவார்.[6]
அணிகளும் நிலைகளும்தொகு
-
- (சி) = இறுதி வெற்றியாளர்; (ஆர்) = இறுதிப் போட்டியில் தோற்ற அணி.
நிகழ்விடம்தொகு
சென்னை | மும்பை | மொகாலி |
---|---|---|
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் இருக்கைகள்:50,000 |
வான்கேடே அரங்கம் இருக்கைகள்: 45,000 |
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் இருக்கைகள்: 30,000 |
கொல்கத்தா | பெங்களூரு | நவி மும்பை |
ஈடன் கார்டன்ஸ் இருக்கைகள்:82,000 |
எம். சின்னசுவாமி அரங்கம் இருக்கைகள்:45,000 |
டி. ஒய். பாட்டில் அரங்கம் இருக்கைகள்: 55,000 |
ஐதராபாத் | தில்லி | செய்ப்பூர் |
இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் இருக்கைகள்:55,000 |
பெரோசா கோட்லா இருக்கைகள்:48,000 |
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம் இருக்கைகள்:30,000 |
2008 இந்தியன் பிரீமியர் லீக் (இந்தியா) |
முடிவுகள்தொகு
குழு நிலைதொகு
குழு நிலைதொகு
18–24_ஏப்ரல்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Indian Premier League 2007/08 Fixtures". Cricinfo.
- ↑ "Rajasthan Royals are IPL champions". The Times of India. 2008-06-02. Archived from the original on 2008-06-04. https://web.archive.org/web/20080604031604/http://ipl.timesofindia.indiatimes.com/articleshow/3091229.cms. பார்த்த நாள்: 2008-06-02.
- ↑ "Congratulate Rajasthan Royals". The Times of India. 2008-06-02. Archived from the original on 2008-06-02. https://web.archive.org/web/20080602141522/http://ipl.timesofindia.indiatimes.com/articleshow/3091309.cms. பார்த்த நாள்: 2008-06-02.
- ↑ ஆடும் நிபந்தனைகள் பரணிடப்பட்டது 2008-07-20 at the வந்தவழி இயந்திரம், பெறப்பட்டது 12 செப்டம்பர் 2007
- ↑ உலக டுவெண்டி-20. ஆடும் நிபந்தனைகள் பரணிடப்பட்டது 2008-09-11 at the வந்தவழி இயந்திரம், பெறப்பட்டது 12 செப்டம்பர் 2007
- ↑ "IPL Auction: Players' worth". Rediff Sports. பெப்ரவரி 20, 2008. 23 மார்ச் 2010 அன்று பார்க்கப்பட்டது.