மார்க் பவுச்சர்

மார்க் வெர்தன் பவுச்சர் (Mark Verdon Boucher பிறப்பு: திசம்பர் 3 1976), தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 139 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 292 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 201 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 358 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 -2011 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1998 -2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் பார்டர், வாரியர்ஸ், தென்னாப்பிரிக்க்க லெவன், மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 532 இலக்குகளைத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய குச்சக் காப்பாளர் எனும் சாதனை படைத்துள்ளார். அணியில் இவருக்கு நிலையான இடம் கிடைத்தது. சூலை 2012 ஆம் ஆண்டில் சாமர்செட் அணிக்காக விளையாடியபோது இவரின் கண்களில் காயம் ஏற்பட்டது.[1]

மார்க் பவுச்சர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மார்க் பவுச்சர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 267)அக்டோபர் 17 1997 எ பாக்கித்தான்
கடைசித் தேர்வுசனவரி 6 2011 எ இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 46)சனவரி 16 1998 எ நியூசிலாந்து
கடைசி ஒநாபசூன் 3 2010 எ மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப சட்டை எண்9
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 147 295 212 365
ஓட்டங்கள் 5,515 4,686 8,803 6,218
மட்டையாட்ட சராசரி 30.30 28.57 33.34 28.19
100கள்/50கள் 5/35 1/26 10/53 2/35
அதியுயர் ஓட்டம் 125 147* 134 147*
வீசிய பந்துகள் 8 32
வீழ்த்தல்கள் 1 1
பந்துவீச்சு சராசரி 6.00 26.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/6 1/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
532/23 403/22 712/37 484/31
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 4 2013

சர்வதேச போட்டிகள் தொகு

குச்சக் காப்பாளராக தொகு

இவர் தேவ் ரிச்சர்ட்ச்னுக்குப் பதிலாக குச்சக் காப்பாளராக அணிக்குத் தேர்வானார்.தனது ஓய்வினை அறிவிக்கும் வரையில் இவருக்கு அணியில் எஇலையான இடம் கிடைத்தது. சிறந்த குச்சக் காப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.இவர் 532 இலக்குகளைத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய குச்சக் காப்பாளர் எனும் சாதனை படைத்துள்ளார்.[2], 2007 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அக்டோபர் 3 இல் கராச்ச்சியில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் உமர் குல்லின் இலக்கினை ஸ்டம்ப் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் இலக்கினை வீழ்த்திய குச்சக் காப்பாளர் எனும் சாதனை படைத்த ஆத்திரேலியக் குச்சக் காப்பளரான இயன் ஹீலியின் சாதனையை சமன் செய்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய குச்சக் காப்பாளர்களின் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.[3]

மட்டையாளராக தொகு

1999 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பரில் ஹராரேயில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 125 ஓட்டங்கள் எடுத்தார்.[4]

2006 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மார்ச் 12 இல் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.[5] தான் விளையாடியதில் இந்தப் போட்டி தான் சிறப்பு வாய்ந்தது எனக் கூறினார்.

ஓய்வு தொகு

2012ஆம் ஆண்டு இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டித் தொடரின்போது மார்க் பவுச்சரின் கண்ணில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, மார்க் பவுச்சர் ஓய்வு பெற்றார்.[6]

ஆட்டநாயகன் விருது தொகு

வ எ எதிரணி இடம் ஆண்டு செயல்பாடு முடிவு
1 நியூசிலாந்து அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் 2002 57* (32 பந்துகள்: 3x4, 2x6) ; இலக்கு 1 Ct.   தென்னாப்பிரிக்கா 93 ஓட்டங்களில் வெற்றி.[7]
2 சிம்பாப்வே ஜோகன்ஸ்பர்க் மைதானம் 2005 49 (29 பந்துகள்: 4x4, 3x6) ; இலக்கு   தென்னாப்பிரிக்கா 165 ஓட்டங்களில் வெற்றி.[8]
3 சிம்பாப்வே சென்வஸ் பார்க் 2006 147* (68 பந்துகள்: 8x4, 10x6) ; இலக்கு 2 ct.   தென்னாப்பிரிக்கா 171 ஓட்டங்களில் வெற்றி .[9]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_பவுச்சர்&oldid=3567337" இருந்து மீள்விக்கப்பட்டது