அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்

அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் (Adelaide Oval) தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெயிட் நகரில் அமைந்துள்ள விளையாட்டரங்கமாகும். இது அடிலெய்டு நகர மையத்திற்கும் வடக்கு அடிலெய்டிற்கும் இடையே பார்க்லாண்ட்சில் அமைந்துள்ளது.

அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்

நீள்வட்ட அரங்கத்தை வானிலிருந்து ஏப்ரல் 2014இல் எடுத்த காட்சி
இடம் போர் நினைவகச் சாலை, அடிலெயிட், தெற்கு ஆஸ்திரேலியா
அமைவு 34°54′56″S 138°35′46″E / 34.91556°S 138.59611°E / -34.91556; 138.59611
திறவு 1871
உரிமையாளர் தெற்கு ஆத்திரேலிய அரசு
ஆளுனர் அடிலெய்டு ஓவல் எஸ்எம்ஏ
குத்தகை அணி(கள்) தெ.ஆ. துடுப்பாட்டச் சங்கம் (1871–நடப்பு)
தெ.ஆ.துடுப்பாட்ட அணி (1877 – நடப்பு)
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி (1884 – நடப்பு)
அடிலெய்டு இசுட்ரைக்கர்சு (பிக் பாஷ் லீக்) (2011–நடப்பு)
தெ.ஆ. தேசிய காற்பந்து கூட்டிணைவு (1975–1976, 2014–நடப்பு)
அடிலெய்டு காற்பந்துக் கழகம் (ஆத்திரேலியக் காற்பந்துக் கூட்டிணைவு) (2014–நடப்பு)
அடிலெய்டுத் துறைமுக காற்பந்துக் கழகம் (ஆத்திரேலியக் காற்பந்துக் கூட்டிணைவு) (1975-76, 2011, 2014–நடப்பு)
தெற்கு அடிலெய்டு காற்பந்துக் கழகம் (1882–03, 1905–94)
மேற்கு அடிலெய்டு காற்பந்துக் கழகம் (1940–57)
இசுட்டூவர்ட்டு காற்பந்துக் கழகம் (1987–97)
அடிலெய்டு ராம்சு (1997-98)
அமரக்கூடிய பேர் 53,583 (3,500 குன்றில் நின்றுகொண்டு)[1]
பரப்பளவு 167 x 124 மீட்டர்கள் (அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்) [2]

இந்த விளையாட்டரங்கம் முதன்மையாக துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் காற்பந்தாட்டப் போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இவ்வரங்கம் இரக்பி லீக், இரக்பி யூனியன், சங்கக் கால்பந்து, மற்றும் இசைக் கச்சேரிகளுக்கும் அவ்வப்போது வழங்கப்படுகின்றது. 1933இல் நடந்த ஆசசு தொடரில் மூன்றாவது தேர்வுப் போட்டிக்கு துடுப்பாட்டத்திற்கு சாதனை வருகையாக 50,962 பார்வையாளர்கள் கண்டு களித்தனர்; அனைத்துப் போட்டிகளுக்குமான சாதனை வருகையாக 62,543 பேர் 1965இல் நடந்த தெற்கு ஆத்திரேலியா காற்பந்துக் கூட்டிணைவு ஆட்டத்திற்கு வந்திருந்தனர்; இப்போட்டி அடிலெய்டு துறைமுகத்திற்கும் இசுட்டூவர்ட்டு காற்பந்துக் கழகத்திற்கும் இடையே நடைபெற்றது.

மேற்சான்றுகள்

தொகு
  1. Voss, Cameron (29 March 2014). "Adelaide Oval ready for showdown". Austadiums.com. http://www.austadiums.com/news/news.php?id=542. பார்த்த நாள்: 19 May 2014. 
  2. Oval retains unique size (afc.com.au)