ஜாகிர் கான்

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

ஜாகீர் கான் (Zaheer Khan, பிறப்பு:7 அக்டோபர், 1978)[2] என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் 2000 முதல் 2014 வரை இந்திய அணியில் விளையாடினார். கபில்தேவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் இரண்டாவது வெற்றிகரமான விரைவு வீச்சாளராகத் திகழ்ந்தார். இவர் பரோடா அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இவர் மட்டையாளர் நிற்கும் வரைகோட்டிற்கருகே வீசப்படும் பந்து (யார்க்கரை ) துல்லியமாகவும், விரைவாகவும் வீசுவதன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[3]

சாகீர் கான்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு7 அக்டோபர் 1978 (1978-10-07) (அகவை 46)
ஸ்ரீராம்பூர், மகாராட்டிரம், இந்தியா
பட்டப்பெயர்ஷக், ஷிப்பி அண்ட் ஷிப்பி [1]
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைஇடது கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 231)10 நவம்பர் 2000 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வு14 பெப்ரவரி 2014 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 133)3 அக்டோபர் 2000 எ. கென்யா
கடைசி ஒநாப4 ஆகஸ்டு 2012 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்34
இ20ப அறிமுகம் (தொப்பி 5)1 டிசம்பர் 2006 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப2 அக்டோபர் 2012 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1999/00–2005/06பரோடா
2004சர்ரே மாகாணத் துடுப்பாட்ட அணி
2006வோர்செச்டர்ஷயர்
2006–2014மும்பை
2008, 2011–2013பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
2009–2010, 2014மும்பை இந்தியன்ஸ்
2015–2017டெல்லி டேர்டெவில்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது பஇ20 முதது
ஆட்டங்கள் 92 200 17 253
ஓட்டங்கள் 1,230 792 13 1047
மட்டையாட்ட சராசரி 11.94 12.00 6.50 12.17
100கள்/50கள் 0/3 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 75 34* 9 43
வீசிய பந்துகள் 18,785 10,097 352 12,745
வீழ்த்தல்கள் 311 282 17 357
பந்துவீச்சு சராசரி 32.95 29.44 26.35 29.07
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
11 1 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 0 0
சிறந்த பந்துவீச்சு 7/87 5/42 4/19 5/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
19/– 43/– 2/– 57/–
மூலம்: ESPNCricinfo, 25 December 2016

2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் விளையாடிய 9 போட்டிகளில் 21 இலக்குகளை எடுத்தார். 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் விளையாட்டு விருதுகளில் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் அருச்சுனா விருதை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பெற்றார். இவர் பல முறை காயங்களினால் துன்பமடைந்தார். அந்தக் காராணத்தினால் தான் புரோ ஸ்போர்ட் அண்ட் சர்விசஸ் எனும் சேவை மையத்தினை ஆண்ட்ரூ லிபசுடன் இணைந்து துவங்கினார்.

2008 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுள் ஒருவராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. அக்டோபர் 2015 இல் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இவர் அறிவித்தார்.[4] இவர் மும்பை துடுப்பாட்ட அணிக்காவும், வோர்செஸ்டெர்ஷயர் அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஜாகீர் கான் அக்டோபர் 7,1978 இல் ஸ்ரீராம்பூர், மகாராட்டிரத்தில் பிறந்தார். இவரின் தந்தை பக்தியார் கான், தாய் ஷகியா. இவருக்கு சீசான் எனும் மூத்த சகோதரரும் , அனீஸ் எனும் இளைய சகோதரரும் உள்ளனர். இவர் நியூ மராத்தி துவக்கப் பள்ளியிலும், பின் கே. ஜே. சோமையா மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் லோகல் ரெவென்யூ காலனி துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார். பின் புனேவில் தனது துடுப்பாட்ட வாழ்க்கையைத் துவக்கினார்.[5]

24 ஏப்ரல் 2017 அன்று, இவர் தனது டுவிட்டர் கணக்கில் நடிகை சாகரிகா காட்ஜுடன் நிச்சயதார்த்தம் செய்ததாக அறிவித்தார்.[6] இந்த தம்பதி 23 நவம்பர் 2017 அன்று திருமணம் செய்து கொண்டனர்.[7]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

தொகு

இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 282 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். இவர் ஒரு இலக்குகளை வீழ்த்துவதற்கு 29 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். மேலும் 4 இலக்குகளை 6 முறைகள் வீழ்த்தியுள்ளார். இதில் நான்கு முறை சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக வீழ்த்தியுள்ளார். மேலும் அந்த அணிக்கு எதிராக மட்டும் 32 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இலக்கிற்கு 17.46 ஓட்டஙகளை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஆசீஷ் நேராவுடன் பந்துவீசி இந்திய அணியை இறுதிப் போட்டியில் பங்கேற்கச் செய்தார். இந்தத் தொடரின் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காவது இடம் பெற்றார்.இவர் 11 போட்டிகளில் விளையாடி 18 இலக்குகளை வீழ்த்தினார். ஒரு இலக்கிற்கு 20 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.[8]

2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக விளங்கினார். இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சாகித் அஃபிரிடியுடன் முதலிடத்தில் உள்ளார். இருவரும் தலா 21 இலக்குகள் வீழ்த்தினர். இதன்மூலம் துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் அதிக இலக்குகள் எடுத்த இந்திய வீரர் ஜவகல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார். இந்தச் சாதனையை 34 போட்டிகள் ஸ்ரீநாட்த் பெற்றார். ஆனால் 23 போட்டிகளிலேயே ஜாகீர் கான் இந்தச் சாதனையைப் புரிந்தார்.[9]

உள்ளூர் போட்டிகள்

தொகு

கான் 1996 இல் மும்பைக்கு வந்து நேஷ்னல் துடுப்பாட்ட சங்கத்தில் அ பிரிவில் துடுப்பாட்டம் விளையாடினார். இவர் கங்கா துடுப்பாட்ட லீக்,காம்ரேட் ஷீல்ட் மற்றும் புர்ஷோட்டம் ஷீல்ட் போன்ற போட்டிகளில் விளையாடினார்.சனவரி 1997 இல் சிவாஜி பார்க் ஜிம்கானாவுக்கு எதிரான போட்டியில் இவர் 74 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து இவர் 7 இழப்புகளைக் கைப்பற்றினார்.[10][11] பின்னர் இவரை சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப் பேஸ் அறக்கட்டளைக்கு நேஷன் துடுப்பாட்ட சங்ன்கத்தின் உரிமையாளர் சுதீர் நாயக் அனுப்பினார். இவரது திறமையால் ஈர்க்கப்பட்ட, அங்குள்ள பந்துவீச்சு பயிற்சியாளர் டி.ஏ. சேகர், இவரை வடோதரா துடுப்பாட்ட அணிக்காக விளையாடுமாறு அறிவுறுத்தினார்.[10]

கான் மும்பை துடுப்பாட்ட அணிக்கு மாற்றப்பட்ட பின்பு 2006-07 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஞ்சிக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பைத் துடுப்பாட்ட அணி வங்காளத் துடுப்பாட்ட அணியினை வீழ்த்தியது. முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் வடோதரா துடுப்பாட்ட அ ணி சார்பாக இவர் சிறப்பான போட்டிகளில் விளையாடினார். ரயில்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ரஞ்சி டிராபியின் 2000-01 ஆண்டின் இறுதிப் போட்டியில், கான் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார், அந்தப் போட்டியில் 145 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 8 இழப்புகளைக் கைப்பற்றினார்.அதில் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 16 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இழப்புகளைக் கைப்பற்றினார்.[12] ஐந்தாவது முறையாக அந்த அணி கோப்பையை வெல்வதற்கும் பின்னர் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் வெல்வது இதுவே முதல் முறையாகும்.[13] 2005 ஆம் ஆண்டில், கான், இங்கிலாந்தில் உள்ள வொர்செஸ்டர்ஷைர் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்தில் தங்கள் இரு வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக கையெழுத்திட்டார், ஷோயப் அக்தருக்கு பதிலாக இவர் தேர்வானார்.[14] வொர்செஸ்டர்ஷைர் போட்டியில் தோல்வியடைந்தாலும், ஜாகீர் சோமர்செட்டுக்கு எதிராக பத்து இழப்புகளை வீழ்த்தினார்;[15] 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமான போட்டியில்10 இழப்புகளை களை வீழ்த்திய முதல் வொர்செஸ்டர்ஷைர் வீரர் எனும் சாதனை படைத்தார்.[16]

கான் 2015 இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸுடன் விளையாடியுள்ளார். இவர் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் டேர்டெவில்ஸ் அணியின் தலைவராக இருந்தார். 2017 ஆம் ஆண்டில் , இந்தியன் பிரீமியர் லீக்கில் 100 இழப்புகளை வீழ்த்திய 10 வது பந்து வீச்சாளராகவும், 8 வது இந்திய பந்து வீச்சாளராகவும் ஜாகீர் ஆனார். தனது 38 வயதில், இந்த சாதனையை நிகழ்த்திய மிக மூத்த வீரர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. [1] Cricinfo Magazine
  2. "Zaheer Khan", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-08
  3. http://www.espncricinfo.com/ci/content/player/30102.html?index=timeline
  4. http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/344697.html
  5. "Wisden Cricketer of the Year 2008 Zaheer Khan". பார்க்கப்பட்ட நாள் 1 December 2013.
  6. "Zaheer Khan announces engagement with actress Sagarika Ghatge". பார்க்கப்பட்ட நாள் 24 April 2017.
  7. "Sagarika Ghatge marries Zaheer Khan, see photos of the newlyweds and wedding card". http://indianexpress.com/article/entertainment/bollywood/zaheer-khan-sagarika-ghatge-ties-the-knot-see-first-photos-all-wedding-updates-4950683/. பார்த்த நாள்: 23 November 2017. 
  8. "ICC Cricket World Cup, 2002/03 Bowling – Most Wickets". ESPNcricinfo. 17 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-12-20.
  9. "ICC Cricket World Cup, 2010/11 / Records / Most wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-07-15.
  10. 10.0 10.1 Bhattacharyya, Wriddhaayan (2 September 2013). "Zaheer Khan: A born fighter who is gunning to get his India spot back". Cricket Country (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 23 April 2015. பார்க்கப்பட்ட நாள் 18 October 2018.
  11. . 
  12. "Zaheer Khan bowls Baroda to Ranji Trophy glory". ESPNcricinfo. 23 April 2001. http://www.espncricinfo.com/ci/content/story/95486.html. பார்த்த நாள்: 18 October 2018. 
  13. "Baroda wins Ranji trophy". Rediff.com. 23 April 2001. http://www.rediff.com/cricket/2001/apr/23ranji.htm. பார்த்த நாள்: 18 October 2018. 
  14. Bolton, Paul. "Worcestershire preview, 2006: Strong squad eyeing promotion". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-07-26.
  15. "Mushtaq powers Sussex to victory". Cricinfo. 28 April 2006. பார்க்கப்பட்ட நாள் 2011-07-25.
  16. [2] பரணிடப்பட்டது 2011-12-16 at the வந்தவழி இயந்திரம், from http://www.zks.co.in/about_zaheer.php பரணிடப்பட்டது 2011-12-16 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாகிர்_கான்&oldid=3477808" இலிருந்து மீள்விக்கப்பட்டது