சுஐப் அக்தர்

பாகிஸ்தான் துடுப்பாட்டக்காரர்

சுஐப் அக்தர் ( உருது: شعیب اختر பிறப்பு 13 ஆகஸ்ட் 1975) முன்னாள் பாக்கித்தானிய துடுப்பாட்ட வீரர் மற்றும் வர்ணனையாளர் . "ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்று புனைப்பெயர் பெற்ற இவர், [3] மணிக்கு 100 மைல் வேகத்தில் பந்துவீசிய முதல் பந்துவீச்சாளர் ஆவார். தனது துடுப்பாட்ட வாழ்க்கையில் இருமுறை மணிக்கு 100 மைல் வேகத்தில் பந்துவீசியுள்ளார். [4]

சுஐப் அக்தர்
2018இல் அக்தர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகம்மது சுயப் அக்தர்
பிறப்பு13 ஆகத்து 1975 (1975-08-13) (அகவை 48)
ராவல்பிண்டி, பஞ்சாப் (பாக்கித்தான்)
பட்டப்பெயர்ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்
உயரம்6அ்டி 0in[1][2]
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை வேகம்
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 150)29 நவம்பர் 1997 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு8 திசம்பர் 2007 எ இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 123)28 மார்ச் 1998 எ சிம்பாப்வே
கடைசி ஒநாப8 மார்ச் 2011 எ New Zealand
ஒநாப சட்டை எண்14
இ20ப அறிமுகம் (தொப்பி 9)28 ஆகஸ்ட் 2006 எ இங்கிலாந்து
கடைசி இ20ப28 டிசம்பர் 2010 எ New Zealand
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒபது ப இ20
ஆட்டங்கள் 46 163 15
ஓட்டங்கள் 544 394 21
மட்டையாட்ட சராசரி 10.07 8.95 7.00
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 47 43 8*
வீசிய பந்துகள் 8,143 7,764 318
வீழ்த்தல்கள் 178 247 19
பந்துவீச்சு சராசரி 25.69 24.97 22.73
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
12 4 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 0 0
சிறந்த பந்துவீச்சு 6/11 6/16 3/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 20/– 2/–
மூலம்: Cricinfo, 8 November 2016

அக்தர் நவம்பர் 1997 இல் விரைவு வீச்சாளராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது முதல் ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். [5] துடுப்பாட்ட வாழ்க்கையின் போது பல சர்ச்சைகளில் சிக்கினார், பலமுறை முறையற்ற விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.2005 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடந்த ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரின் போது, மோசமான அணுகுமுறையின் காரணமாக அக்தர் விளையாட தடை விதிக்கப்பட்டார். நான்ட்ரோலோன் சோதனையில் குற்றம் நிரூபணம் ஆனதால் இவர் விளையாட தடைவிதிக்கப்பட்டார். ஆனால், மேல்முறையீட்டில் இவருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.[6] 2008 ஆம் ஆண்டில், பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியத்தை பகிரங்கமாக விமர்சித்ததற்காக அக்தருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது, [7] இருப்பினும் அக்டோபர் 2008 இல், லாகூர் உயர் நீதிமன்றம் தடையை இடைநீக்கம் செய்தது மற்றும் கனடாவில் நடைபெற்ற இருபது20 போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் அக்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு அக்தர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு, யூடியூப் சேனலைத் தொடங்கினார், அதில் போட்டிகள் மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்டம் பற்றிய மதிப்புரைகளை வழங்குகிறார்.

சொந்த வாழ்க்கை தொகு

அக்தர் பாக்கித்தானின் பஞ்சாப், ராவல்பிண்டியில் உள்ள மோர்கா என்ற சிறிய நகரத்தில் பஞ்சாபி முசுலிம் குடும்பத்தில் பிறந்தார்.

அவர் 11 நவம்பர் 2014 அன்று இளம் வயதினரான ரூபாப் கானை மணந்தார், இது சிறிது காலத்திற்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. [9] [10]

சர்வதேச போட்டிகள் தொகு

1997/98இல் மேற்கிந்தியத் தீவுகள், பாக்கித்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் இரண்டாவது போட்டியில் இவர் அறிமுகமானார்.8 போட்டிகள் 16 ஆட்டப் பகுதிகளுக்குப் பின்னர் இவர் 18 இலக்குகளை மட்டுமே கைப்பற்றினார்.[11]

1999 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலகக் கிண்ணத்திற்கு முந்தைய தொடரின் போது சிறப்பாக விளையாடினார். அதைத் தொடர்ந்து சார்ஜாவிலும் பின்னர் 1999 துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரிலும் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். 1999 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த ஆசிய தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் 8இலக்குகளைக் கைப்பற்றினார். ராகுல் திராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் இலக்குகள் உட்பட இரு மட்டையாளர்களை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். டெண்டுல்கரை தனது முதல் பந்தில் வீழ்த்தினார். [12]

உள்ளூர்ப் போட்டிகள் தொகு

இங்கிலாந்தில் தொகு

அக்தர் மூன்று ஆங்கில மாகாணத் துடுப்பாட்ட சங்கங்களுக்காக விளையாடியுள்ளார்: 2001 இல் சோமர்செட், 2003 மற்றும் 2004 இல் டர்ஹாம் மற்றும் 2005 இல் வொர்செஸ்டர்ஷயர் . 2003 ஆம் ஆண்டு நேஷனல் லீக்கில் சோமர்செட்டுக்கு எதிராக 35 ஓட்டங்களில் 5 இலக்குகளையும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குளூசெஸ்டர்சருக்கு எதிராக 16 ஓட்டங்களில் 6 இலக்குகளை கைப்பற்றியது இவரது சிறந்த பந்துவீச்சாகும்.

ஐபிஎல் தொகு

இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். மூன்று நிறைவுகளில் 11 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். [13] [14]

சான்றுகள் தொகு

  1. Shoaib Akhtar's profile on Cricbuzz
  2. Shoaib Akhtar's profile on Sportskeeda
  3. "Shoaib Akhtar – the legend, the sensation, the enigma". 10 April 2015. http://blogs.tribune.com.pk/story/25921/shoaib-akhtar-the-legend-the-sensation-the-enigma/. 
  4. "Shoaib Akhtar at 100 MPH". https://www.espncricinfo.com/story/shoaib-akhtar-at-100-mph-126897. 
  5. "Shoaib Akhtar profile and biography, stats, records, averages, photos and videos" (in en). https://www.espncricinfo.com/player/shoaib-akhtar-42655. 
  6. "PCB bans Shoaib Akhtar for an indefinite period". http://news.bbc.co.uk/sport2/hi/cricket/other_international/pakistan/7039633.stm. 
  7. "Shoaib Akhtar gets 5-year ban for foul delivery | It's unfair". Ibnlive.com. http://ibnlive.com/news/shoaib-akhtar-gets-5year-ban-for-foul-delivery---its-unfair/62443-5.html. 
  8. "Shoaib in for Canada, not Yousuf". http://content-usa.cricinfo.com/pakistan/content/story/372804.html. 
  9. "Haripur: Shoaib Akhtar tie the knot with Rubbabb". dunyanews.tv. http://dunyanews.tv/index.php/en/Cricket/226712-Haripur-Shoaib-Akhtar-tie-the-knot-with-Rubab. 
  10. "Shoaib Akhtar secretly marries 20-year old Rubab Khan". india.com. http://www.india.com/sports/shoaib-akhtar-secretly-marries-20-year-old-rubab-khan-84313/. 
  11. "Player profile: Shoaib Akhtar". ESPNcricinfo. http://www.espncricinfo.com/ci/content/player/42655.html. 
  12. "ICC World Cup, 1999 Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". https://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=787&type=tournament. 
  13. Indian Premier League – 35th match, Kolkata Knight Riders v Delhi Daredevils. Cricinfo.com. Retrieved on 14 May 2008.
  14. Shoaib leads Delhi drubbing. Cricinfo.com. Retrieved on 14 May 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஐப்_அக்தர்&oldid=3632208" இருந்து மீள்விக்கப்பட்டது