ரஞ்சிக் கோப்பை

ரஞ்சிக் கோப்பை என்பது இந்தியாவின் பிராந்திய மற்றும் மாநில துடுப்பாட்ட வாரியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அணிகளுக்கு இடையே உள்நாட்டில் விளையாடும் முதல் தர துடுப்பாட்ட வாகைத் தொடர் ஆகும். இத்தொடரில் தற்போது உள்ள 37 அணிகளில் இந்தியாவின் 29 மாநிலங்களும், 7 ஒன்றியப் பகுதிகளில் இரண்டு பகுதிகளும் குறைந்தது ஒரு பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன. பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடிய முதல் இந்திய வீரரான ரஞ்சி என்று அழைக்கப்படும் ரஞ்சித்சிங்ஜி நினைவாக இத்தொடருக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

ரஞ்சிக் கோப்பை
நாடு(கள்)இந்தியா இந்தியா
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
வடிவம்முதல்தரத் துடுப்பாட்டம்
முதல் பதிப்பு1934
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி பிறகு ஒற்றை வெளியேற்றப் போட்டி
மொத்த அணிகள்27
அதிகபட்ச ஓட்டங்கள்வாசிம் ஜாஃபர்
அதிகபட்ச வீழ்த்தல்கள்ரஜிந்தர் கோயில்(640)
1958–1985

1934ம் ஆண்டு முதல் நடந்து வரும் ரஞ்சிக் கோப்பை தொடரில், இதுவரை மும்பை அணி மட்டும் 41 முறை வாகைப் பட்டம் வென்று, மிகப்பெரிய சாதனையை தன் வசம் வைத்துள்ளது. அதிலும், தொடர்ச்சியாக 15 ஆண்டுகள், ரஞ்சிக் கோப்பையை வென்ற ஒரே அணி மும்பை தான். 1958 முதல் 1973 வரை தொடர்ச்சியாக கோப்பையை கைப்பற்றி, அந்தச் சாதனையை படைத்தது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடக அணி 8 முறை வாகைப் பட்டம் வென்றுள்ளது.[1] நாக்பூரின் விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கில் நடைபெற்ற 2018–19 தொடரின் இறுதி ஆட்டத்தில் சவுராட்டிரா அணியை 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற விதர்பா அணியின் வசம் தற்போது ரஞ்சிக் கோப்பையின் வாகைப் பட்டம் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "ரஞ்சி தொடரில் 'விதர்பா' அணியின் வெற்றி எதை உணர்த்துகிறது? கிரிக்கெட் பரவலாக்களின் முதல் படியா?". Indian Express Tamil. 2018-01-03. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சிக்_கோப்பை&oldid=3591409" இலிருந்து மீள்விக்கப்பட்டது