முதன்மை பட்டியைத் திறக்கவும்

அனில் கும்ப்ளே

இந்தியத் துடுப்பாட்ட முன்னாள் வீரர்

அனில் கும்ப்ளே(AnilKumble இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation (பிறப்பு: அக்டோபர் 17, 1970) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் தலைவர் ஆவார். இவர் 18 ஆண்டுகள் துடுப்பாட்டங்கள் விளையாடியுள்ளார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 619 இலக்குகள் எடுத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்தவர்கள் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக உள்ளார். இவர் ஜம்போ என்றும் அழைக்கப்படுகிறார்.[1] 1993 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டார். பின் 1996 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பால் சிறந்த வீரராகத் தேர்வானார்.

அனில் கும்ப்ளே
Anil Kumble.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அனில் இராதாகிருடிண கும்ப்ளே
பட்டப்பெயர் ஜம்போ
பிறப்பு 17 அக்டோபர் 1970 (1970-10-17) (அகவை 48)
பெங்களூரு, இந்தியா
வகை பந்து வீச்சாளர் மற்றும் தேர்வுத் துடுப்பாட்ட தலைவர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை leg break
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 192) 9 ஆகஸ்டு, 1990: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு 29 அக்டோபர், 2008: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 78) 25 ஏப்ரல், 1990: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி 19 மார்ச், 2007:  எ பெர்மியூடா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1989/90 – 2008/09 கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி
2006 சர்ரே
2008– பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒருநாள் (பன்னாட்டு)மு துபட்டியல் அ
ஆட்டங்கள் 132 271 244 380
ஓட்டங்கள் 2,506 938 5,572 1,456
துடுப்பாட்ட சராசரி 17.65 10.54 21.68 11.20
100கள்/50கள் 1/5 0/0 7/17 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 110* 26 154* 30*
பந்து வீச்சுகள் 40,850 14,496 66,931 20,247
வீழ்த்தல்கள் 619 337 1,136 514
பந்துவீச்சு சராசரி 29.65 30.89 25.83 27.58
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 35 2 72 3
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 8 n/a 19 n/a
சிறந்த பந்துவீச்சு 10/74 6/12 10/74 6/12
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 60/– 85/– 120/– 122/–

8 நவம்பர், 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

அனில் கும்ப்ளே

பெங்களூர், கருநாடகத்தில் பிறந்த இவர் பி. சி. சந்திரசேகரின் பால் ஈடுபாடு கொண்டு முழு நேர துடுப்பாட்ட வீரராக ஆனார். இவர் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டத்தில் தனது 19 வயதில் விளையாடினார். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரானது ஆகும். 132 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணியை தலைமேற்று நடத்தினார். 1990 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது. மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளை எடுத்தார். 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். அதில் 7 போட்டிகளில் விளையாடி 15 இலக்குகளை எடுத்தார். அவரின் பந்து வீச்சு சராசரி 18.73 ஆகும். 1999 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அனைத்து இலக்குகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.[2] இதற்குமுன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜிம் லேகர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.[3][4]

இந்தியக் குடியுரிமை விருதுகளில் நான்காவது பெரிய விருதாக கருதப்படும் பத்மசிறீ விருதினை 2005 ஆம் ஆண்டில் கும்ப்ளே பெற்றார். நவம்பர் 2008 ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். அக்டோபர், 2012 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் செயலாளராக நியமனம் ஆனார்.[5]

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அறிவுரையாளராக நியமனம் ஆனார். மேலும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஹால் ஆஃப் ஃபேமாக அறிவிக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

அனில் கும்ப்ளே அக்டோபர் 17, 1970 இல் பெங்களூர், கருநாடகத்தில் பிறந்தார். இவரின் தந்தை கிருஷ்ணசாமி, தாய் சரோஜா.[6][7] இவருக்கு தினேஷ் கும்ப்ளே எனும் சகோதரர் உள்ளார். இவர் சேத்தானா கும்ப்ளே என்பவரை திருமணம் செய்தார்.[8] இவர்களுக்கு மயாஸ் கும்ப்ளே எனும் மகனும், ஸ்வாஸ்தி கும்ப்ளே எனும் மகளும் உள்ளனர்.[9] சேத்தானாவின் முதல் திருமணத்தில் பிறந்த ஆருனி கும்ப்ளே எனும் மகளை கும்ப்ளே தத்தெடுத்தார்.[10]

இவரது சாதனைகள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

டுவிட்டரில் அனில் கும்ப்ளே  

  1. "Anil Kumble reveals how he got his nickname 'Jumbo'". deccanchronicle.com. 2016-07-12. http://www.deccanchronicle.com/sports/cricket/120716/team-india-coach-anil-kumble-reveals-how-he-got-his-nickname-jumbo.html. 
  2. Lal, Kuldip (7 February 1999). "Kumble takes all 10 wickets as India rout Pakistan". ESPN Cricinfo. http://static.espncricinfo.com/db/ARCHIVE/1998-99/PAK_IN_IND/SCORECARDS/PAK_IND_T2_04-08FEB1999_AFP_MR/PAK_IND_T2_07FEB1999_AFP_MR.html. பார்த்த நாள்: 19 May 2012. 
  3. Garg, Chitra (2010). Indian Champions Profiles Of Famous Indian Sportspersons. Rajpal & Sons. பக். 128–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7028-852-7. https://books.google.com/books?id=Fq1wdzqhu6kC&pg=PA128. பார்த்த நாள்: 14 May 2012. 
  4. Ayanjit Sen (2 December 2004). "Kumble reaps reward for commitment". BBC. http://news.bbc.co.uk/sport2/hi/cricket/other_international/4061169.stm. பார்த்த நாள்: 9 August 2007. 
  5. "Kumble to be chairman of ICC Cricket Committee". Wisden India. 10 October 2012. http://www.wisdenindia.com/cricket-news/kumble-to-be-chairman-icc-cricket-committee/30418. 
  6. MD Ritti (15 February 1999). "10 wickets – and phone overload". Rediff.com. பார்த்த நாள் 9 August 2007.
  7. Abhijit Chatterjee. "Jumbo spinner". The Tribune. http://www.tribuneindia.com/2007/20070407/saturday/main1.htm. பார்த்த நாள்: 9 August 2007. 
  8. Hemanth Kashyap (14 July 2008). "Bitter-battle". MidDay. பார்த்த நாள் 6 June 2012.
  9. "Anil Kumble". Indian Mirror. பார்த்த நாள் 6 June 2012.
  10. "Anil Kumble, with his son Mayas, as he announces his retirement from ODIs". ESPNcricinfo (30 March 2007). பார்த்த நாள் 17 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_கும்ப்ளே&oldid=2783826" இருந்து மீள்விக்கப்பட்டது