கிரயெம் சிமித்

கிரயெம் கிரைக் சிமித் (Graeme Craig Smith, பிறப்பு: பெப்ரவரி 1, 1981) தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் ஆவார். ஆரம்ப துடுப்பாட்ட வலதுகை மட்டையாளரும், வலதுகை புறத்திருப்பப் பந்துவீச்சாளருமான இவர் தென்னாபிரிக்கா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடினார். ஷான் பொலொக்கிற்கு அடுத்தபடியாக இவர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் 2014 ஆம் ஆண்டில் ஒய்வு பெறும்வரையில் தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளின் அணித் தலைவராக இருந்தார்.[1]

கிரயெம் சிமித்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரயெம் கிரைக் சிமித்
பட்டப்பெயர்பிஃப்
உயரம்6 அடி 4 அங் (1.93 m)
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைவலக்கை புறத்திருப்பம்
பங்குஆரம்ப மட்டையாளர், தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணித் தலைவர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 286)மார்ச் 8 2002 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 20 2014 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 68)மார்ச் 30 2007 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபநவம்பர் 27 2013 எ. இந்தியத்
ஒநாப சட்டை எண்15
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1999/2000கோட்டெங் அணி
2000ஹம்ப்சயர் துடுப்பாட்ட அவை
2000/01-2003/04மேற்கு மாகாணம்
2004/05-இன்றுகேப் கோப்ராஸ்
2005சமர்செட்
2008-2010ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 15)
2011-இன்றுசகாரா புனே வாரியர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநா முதல் பட்.ஏ
ஆட்டங்கள் 117 197 160 259
ஓட்டங்கள் 9,265 6,989 12,653 9,331
மட்டையாட்ட சராசரி 48.25 38.48 49.23 36.03
100கள்/50கள் 27/38 10/47 36/50 14/67
அதியுயர் ஓட்டம் 277 141 311 141
வீசிய பந்துகள் 1,418 1,026 1,786 1,968
வீழ்த்தல்கள் 8 18 11 47
பந்துவீச்சு சராசரி 110.62 52.83 102.90 38.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/145 3/30 2/145 3/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
169/– 105/– 231/– 137/-
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 28 2014

அனைத்துக் காலத்திற்குமான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் சிறந்த துவக்க வீரர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறு அல்லது அதற்கும் மேல் எடுத்த போட்டிகளில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி தோல்வியடைந்தது இல்லை. 2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு இருநூறுகள் அடித்தார்.[2]பர்மிங்காமில் நடைபெற்ற முதல் போட்டியில் 277 ஓட்டங்களும்[3],இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 259 ஓட்டங்களும் எடுத்தனர்.[4] இதன்மூலம் இலார்ட்சு மைதானத்தில் அதிக ஓட்டங்கள் அடித்த அயல்நாட்டவர் எனும் சாதனையைப் படைத்தார்.[5] அக்டோபர் 24. 2013 இல் தனது 112 ஆவது போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 9000 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் சர்வதேச அளவில் 12 ஆவது வீரர் எனும் சாதனை படைத்தார்.[6][7][8]

சர்வதேச போட்டிகள்

தொகு

2002 ஆம் ஆண்டில் கேப் டவுனில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கி 68 ஓட்டங்கள் எடுத்தார்.[9] பின் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் துவக்க வீரராக ஹெர்ச்சல் கிப்ஸ் உடன் களம் இறங்கி 200 ஓட்டங்கள் அடித்தார்.[10] பின் தென்னாப்பிரிக்காவில் நடந்த பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரும் ஹெர்ச்சல் கிப்ஸ்சும் இணைந்து 368 ஓட்டங்கள் எடுத்தார்.[11] இந்தப் போட்டியில் சிமித் 151 ஓட்டங்களும், கிப்ஸ் 228 ஓட்டங்களும் எடுத்தனர். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த துவக்க வீரர்கள் பட்டியலில் நான்காவது இடம்பிடித்து சாதனை படைத்தனர். பின் சிமித்தும் நீல் மெக்கென்சியும் இணைந்து 415 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையைத் தகர்த்தனர்.[12] 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரோடு ஷான் பொலொக் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளை இவரை தலைவராக அணி நிர்வாகம் நியமனம் செய்தது. இவரைத் தலைவராக தேர்வு செய்தது பல விமர்சனத்திற்கு உள்ளானது.[13] ஏனெனில் 8 தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் மட்டுமே விளையாடிய நிலையில் இவருக்கு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.[14] வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுப் போட்டியில் முதல் முறையாக தலைவராக விளையாடினார். அப்போது அவருக்கு வயது 22 ஆண்டுகள், 82 நாள்கள் ஆகும். இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் தென்னாப்பிரிக்க அணியின் தலைவராக ஆனவர் எனும் சாதனையைப் படைத்தார்[15].

சான்றுகள்

தொகு
  1. "Fourth-innings hero, and captain extraordinaire".
  2. "Individual Scores of 200 and More in an Innings for South Africa in Test Cricket". Cricket archive. 16 ஏப்பிரல் 2008. Archived from the original on 14 சூன் 2009.
  3. "Scorecard". Cricket archive. 16 April 2008.
  4. "Scorecard". Cricket archive. 16 April 2008.
  5. "Lord's, London – Test matches". Cricinfo. 16 April 2008.
  6. "Smith scores a double, 9000 and equals Bradman | Cricket News | Pakistan v South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2014-05-05.
  7. "Smith joins 9,000-run club, gets SA to 460/4 against Pak". Hindustan Times. 24 அக்டோபர் 2013. Archived from the original on 27 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2014.
  8. Featured Columnist (2013-10-23). "5 Captain's Innings from Graeme Smith". Bleacher Report. பார்க்கப்பட்ட நாள் 2014-05-05.
  9. "Scorecard". Cricket archive. பார்க்கப்பட்ட நாள் 16 April 2008.
  10. "Scorecard". Cricket archive. பார்க்கப்பட்ட நாள் 22 June 2008.
  11. "Scorecard. Example one of 300 plus stand". Cricinfo. 16 April 2008.
  12. "Highest Partnerships in Tests for the First Wicket". Cricinfo. 25 June 2008.
  13. "Profile of Graeme Smith". Cricinfo. 16 April 2008.
  14. "Biography: Graeme Craig Smith". Cricinfo. 16 April 2008.
  15. "Graeme Smith will become South Africas youngest captain". Cricinfo. 16 April 2008.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரயெம்_சிமித்&oldid=3586605" இலிருந்து மீள்விக்கப்பட்டது