ஷான் பொலொக்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஷான் மெக்லியன் பொலொக் (Shaun Maclean Pollock, பிறப்பு: செப்டம்பர் 16 1973), தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 108 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 303 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 186 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 435 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 -2008 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1996 -2008 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் அணியின் தலைவராக இருந்துள்ளார். சகலத்துறையரான இவர் அலன் டொனால்டுடன் இணைந்து பல ஆண்டுகள் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். 2000முதல் 2003 ஆம் ஆண்டுவரை தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் தலைவராகவும், ஆப்பிரிக்க லெவன், உலக லெவன் அகிய அணிகளுக்காகாவும், டால்பின்ஸ் மற்றும் வார்க்விக்‌ஷயர் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் சிறந்த துடுப்பாட்ட வீரராக இவரை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.

ஷான் பொலொக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஷான் பொலொக்
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 261)நவம்பர் 16 1995 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுசனவரி 10 2008 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 39)சனவரி 9 1996 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 3 2008 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப சட்டை எண்7
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 108 303 186 435
ஓட்டங்கள் 3,781 3,519 7,021 5,494
மட்டையாட்ட சராசரி 32.31 26.45 33.11 26.66
100கள்/50கள் 2/16 1/14 6/35 3/24
அதியுயர் ஓட்டம் 111 130 150* 134*
வீசிய பந்துகள் 24,353 15,712 39,067 21,588
வீழ்த்தல்கள் 421 393 667 573
பந்துவீச்சு சராசரி 23.11 24.50 23.25 22.93
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
16 5 22 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 7/87 6/35 7/33 6/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
72/– 108/– 132/– 153/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 20 2008

சனவரி 11,2008 ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.பின் பெப்ரவரி 3 இல் தனது 303 ஆவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியோடு ஓய்வு பெற்றார்[1]. இவர் டர்பனில் உள்ள நார்த் வுட் பள்ளியில் பயின்றார்.

சர்வதேச போட்டிகள்

தொகு

நவம்பர் 16, 1995 இல் செஞ்சூரியனில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் அறிமுகமானார்.இதில் 29 ஓவர்களை வீசி 98 ஓட்டங்களி விட்டுக்கொடுத்தார். இதில் 7 ஓவர்களை மெய்டனாக வீசி 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.[2] இந்தப் போட்டி சமனில் முடிந்தது. பின் சனவரி 9, 1996 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் அறிமுகமானார்.[3] இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 66 ஓட்டங்களை எடுத்தார். பின் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் 10 ஓவர்களை வீசினார் அதில் 34 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றி அந்த அணியை 205 ஓட்டங்களில் வீழ்த்தி அணியை வெற்றி பெறுவதற்கு உதவினார். மேலும் இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.[4]

சாதனைகள்

தொகு

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 9 ஆவது வீரராக களம் இறங்கி அதிக முறை நூறுகள் அடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 12 முறைகள் நூறு ஓட்டங்களை அடித்துள்ளார். இதன்மூலம் இந்தச் சாதனையைப் புரிந்த ஒரே வீரர் இவர் ஆவார்.[5] இவர் தனது 190 ஆவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தான் முதல் நூறினைப் பதிவு செய்தார். இதன்மூலம் நூறு அடிப்பதற்கு முன் அதிக ஒருநாள் போட்டிகள் எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஆட்டப்பகுதியில் 99 ஓட்டங்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அணித் தலைவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[7][8] சொந்த மண்ணில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர் எனும் சதனையைப் படைத்தார். 193 இலக்குகளைக் கைப்பற்றி இந்தச் சாதனையைப் படைத்தார்.[9]

சான்றுகள்

தொகு
  1. Pollock announces his retirement BBC News retrieved 11 January 2008
  2. "1st Test, England tour of South Africa at Centurion, Nov 16-20 1995 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-16
  3. "1st ODI (D/N), England tour of South Africa at Cape Town, Jan 9 1996 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-16
  4. "1st ODI (D/N), England tour of South Africa at Cape Town, Jan 9 1996 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-16
  5. "Most test centuries at each batting positions". Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-24.
  6. "HowSTAT! ODI Cricket - Most Innings before First Century". www.howstat.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-28.
  7. "Statistics / Statsguru / Test matches / Batting records". www.cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2017-05-04.
  8. "Stranded on 99, and stranded on four". www.cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2017-05-04.
  9. "Most wickets taken by a bowler in ODI matches played at home soil". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2017-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷான்_பொலொக்&oldid=3006853" இலிருந்து மீள்விக்கப்பட்டது