முதன்மை பட்டியைத் திறக்கவும்

சோயிப் மாலிக் (Shoaib Malik,உருது: شعیب ملک பிறப்பு: பிப்ரவரி 1 1982), முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 2001 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் தேர்வுப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார்.[1] மேலும் இவர் ஆசிய லெவன் அணி, பார்படோசு டிரிடெண்ட்ஸ், குஜ்ரன்வாலா துடுப்பாட்ட சங்கம், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், கராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான், பாக்கித்தான் ரெசர்வ்ஸ் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[2]

சோயிப் மாலிக்
Shoaib Malik, Dunedin, NZ, 2009.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
பிறப்பு 1 பெப்ரவரி 1982 (1982-02-01) (அகவை 37)
சியல்கொட், பாக்கித்தான்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 169) ஆகத்து 29, 2001: எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு ஆகத்து 9, 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 128) அக்டோபர் 14, 1999: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி சூன் 19, 2010:  எ இந்தியா
சட்டை இல. 18
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்தரஏ-தர
ஆட்டங்கள் 32 192 95 268
ஓட்டங்கள் 1,606 5,188 3,856 7,304
துடுப்பாட்ட சராசரி 33.45 34.35 29.66 38.04
100கள்/50கள் 2/8 7/31 8/17 12/43
அதிக ஓட்டங்கள் 148* 143 148* 143
பந்து வீச்சுகள் 2,245 6,384 11,144 10,388
இலக்குகள் 21 134 179 250
பந்துவீச்சு சராசரி 61.47 36.29 31.05 30.98
சுற்றில் 5 இலக்குகள் 0 0 5 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 4/42 4/19 7/81 5/35
பிடிகள்/ஸ்டம்புகள் 16/– 68/– 44/– 105/–

ஆகத்து 24, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

பொருளடக்கம்

சர்வதேச போட்டிகள்தொகு

தேர்வுத் துடுப்பாட்டம்தொகு

2001  ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் ஆகஸ்டு 29  இல் முல்தானில்  நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் சராசரி 4.32 ஆகும்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]

இறுதிப் போட்டிதொகு

2015 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில்  சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 1,சார்ஜா அமீரக மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 91  பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசி 4 இலக்கினைக் கைப்பற்றினார். பந்துவீச்சு சராசரி 3.35.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஆண்டர்சன் வீசிய முதல்பந்திலேயே ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 15 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். 4 ஓவர்களை மெய்டனாக வீசினார். 3 இலக்குகளைக் கைப்பற்றினார். 127 ஓட்டங்கள் வித்தியசத்தில் பாக்கித்தான் அணி வெற்றி பெற்றது.[4]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்தொகு

1999  ஆம் ஆண்டில் கொக்கக் கோலா வாகையாளர் கோப்பைத் தொடரில் பாக்கித்தான் அணியில் விளையாடும் வாய்பினைப் பெற்றார், அக்டோபர் 14 இல்சார்ஜா அமீரகத்தில்  நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[2]  இந்தப் போட்டியில் 8 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களை வீட்டுக் கொடுத்து 1 இலக்கினை வீழ்த்தினார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]

பன்னாட்டு இருபது20தொகு

2006 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்தது. ஆகஸ்டு 28 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். துவக்க வீரராக களம் இறக்கிய இவர் 16 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்தார். இதில் 2 நான்குகளும் அடங்கும். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[6]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயிப்_மாலிக்&oldid=2714385" இருந்து மீள்விக்கப்பட்டது