பெப்ரவரி 1
நாள்
(பிப்ரவரி 1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | பெப்ரவரி 2025 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
MMXXV |
பெப்ரவரி 1 (February 1) கிரிகோரியன் ஆண்டின் 32 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 333 (நெட்டாண்டுகளில் 334) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 1327 – பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ஆனால் அவனது தாய் இசபெல்லாவும் தாயின் காதலன் ரொஜர் மோர்ட்டிமரும் நாட்டை ஆண்டனர்.
- 1329 – பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரை திருமுழுக்கிட்டான்.
- 1662 – ஒன்பது-மாத முற்றுகையின் பின்னர் சீனத் தளபதி கோசிங்கா தைவான் தீவைக் கைப்பற்றினான்.
- 1788 – ஐசாக் பிறிக்ஸ், வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.
- 1793 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்சு போரைத் தொடுத்தது.
- 1814 – பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
- 1832 – ஆசியாவின் முதலாவது அஞ்சல் வண்டி சேவை (mail-coach) இலங்கையில் கண்டியில் ஆரம்பமாகியது.[1]
- 1835 – மொரிசியசில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சசு மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
- 1864 – டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.
- 1880 – யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி சேவையை ஆரம்பித்தது.[1]
- 1884 – ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.
- 1893 – தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் மேற்கு ஒரேஞ்சு நகரில் கட்டி முடித்தார்.
- 1908 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லோசு, அவனது மகன் இளவரசர் லூயிஸ் பிலிப் ஆகியோர் லிஸ்பன் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1918 – உருசியா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
- 1924 – சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
- 1942 – அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ வெளிநாட்டு வானொலி வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.
- 1946 – நோர்வேயின் திறிகுவே இலீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1946 – அங்கேரி நாடாளுமன்றம் ஒன்பது நூற்றாண்டுப் பழமையான மன்னராட்சியை நீக்கி குடியரசாக அறிவித்தது.
- 1953 – வடகடல் வெள்ளப்பெருக்கு நெதர்லாந்து, பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைத் தாக்கியது.
- 1958 – எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.
- 1972 – கோலாலம்பூர் மலேசியாவின் மன்னரால் மாநகரமாக அறிவிக்கப்பட்டது.
- 1974 – பிரேசிலில் சாவோ பாவுலோ நகரில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் உயிரிழந்தனர், 293 பேர் காயமடைந்தனர்.
- 1979 – 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி தெகுரான் திரும்பினார்.
- 1991 – லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலைய ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதியதில் 34 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.
- 1992 – போபால் பேரழிவு: யூனியன் கார்பைட்டின் முன்னாள் முதன்மைச் செயலர் வாரன் அண்டர்சன் ஒரு தலைமறைவான குற்றவாளி என போபால் நீதிமன்றம் அறிவித்தது.
- 1998 – கிளிநொச்சித் தாக்குதல், 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது.
- 2002 – சனவரி 23 இல் கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல் கடத்தல்காரர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
- 2003 – கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
- 2004 – சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் உயிரிழந்தனர், 244 பேர் காயமடைந்தனர்.
- 2005 – நேபாள மன்னர் ஞானேந்திரா இராணுவப் புரட்சி ஒன்றை நடத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
- 2005 – கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.
- 2007 – மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
- 2012 – எகிப்தில் கால்பந்து அரங்கு ஒன்றில் இரண்டு அணி ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் 74 பேர் உயிரிழந்தனர்.
- 2013 – ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக உயரமான கட்டடம் ஷார்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
- 2021 – மியான்மர் இராணுவப் புரட்சியில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார். இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
பிறப்புகள்
தொகு- 1707 – பிரெடரிக், வேல்சு இளவரசர், (இ. 1751)
- 1844 – கிரான்வில் ஸ்டான்லி ஹால், அமெரிக்க உளவியலாளர் (இ. 1924)
- 1873 – பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத் தந்தை (இ. 1964)
- 1894 – ஜான் போர்டு, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1973)
- 1901 – கிளார்க் கேபிள், அமெரிக்க நடிகர் (இ. 1960)
- 1902 – லாங்ஸ்ரன் ஹியூஸ், அமெரிக்கக் கவிஞர் (இ. 1967)
- 1905 – எமீலியோ சேக்ரே, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)
- 1930 – இந்தர் மல்கோத்ரா, இந்திய இதழாளர், நூலாசிரியர் (இ. 2016)
- 1931 – போரிஸ் யெல்ட்சின், உருசியாவின் 1வது அரசுத்தலைவர் (இ. 2007)
- 1936 – பொ. ம. இராசமணி, தமிழகத் தமிழறிஞர் (இ. 2009)
- 1957 – ஜாக்கி செராப், இந்திய நடிகர்
- 1961 – செ. குரு, தமிழக அரசியல்வாதி (இ. 2018)
- 1982 – சோயிப் மாலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்
- 1985 – கோபிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1992 – வைதேகி பரசுராமி, மராத்தி நடிகை
இறப்புகள்
தொகு- 772 – மூன்றாம் ஸ்தேவான் (திருத்தந்தை) (பி. 720)
- 1851 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1797)
- 1876 – மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1815)
- 1882 – நயின் சிங் ராவத், இந்திய நில அளவியலாளர் (பி. 1830)
- 1903 – ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ், ஆங்கிலோ-அயர்லாந்து இயற்பியலாளர், கணிதவியலாளர், அரசியல்வாதி (பி. 1819)
- 1905 – எமீலியோ சேக்ரே, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1989)
- 1939 – ஏ. நாராயணன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், தமிழகத்தின் முதல் பேசும் பட ஒலிக் கலையகத்தை அமைத்தவர் (பி. 1900)
- 1942 – ஞானியார் அடிகள், சைவத் துறவி, பேச்சாளர், உரையாசிரியர் (பி. 1873)
- 1958 – கிளிண்டன் ஜோசப் டேவிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1888)
- 1976 – வெர்னர் ஐசன்பர்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1901)
- 1999 – பாரிசு மான்கோ, துருக்கியப் பாடகர் (பி. 1943)
- 2002 – டேனியல் பெர்ல், அமெரிக்க யூதப் பத்திரிகையாளர் (பி. 1963)
- 2003 – கல்பனா சாவ்லா, இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை, கொலம்பியா விண்ணோட வீராங்கனை (பி. 1961)
- 2008 – ஆர். கே. கரஞ்சியா, இந்திய எழுத்தாளர், இதழாளர் (பி. 1912)
- 2012 – விஸ்லவா சிம்போர்ஸ்கா, நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் (பி. 1923)
சிறப்பு நாள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)