மயோன் எரிமலை

பிலிப்பைன்சு நாட்டிலுள்ள ஒரு எரிமலை

மயோன் எரிமலை (Mayon Volcano, தகலாகு: மொழியில் புல்காங்கு மயோன்) அல்லது புல்கான் மயோன் அல்லது மயோன் சிகரம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இது உயிர்த்துடிப்புடைய எரிமலை ஆகும். இது பிலிப்பைன்சு நாட்டின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ளது. இது "முழுமையான கூம்பு" எனப் புகழ்பெற்ற எரிமலையாகும். ஏனெனில் அது கிட்டத்தட்ட சமச்சீரான கூம்பு வடிவத்தில் உள்ளது. இந்த மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஜூலை 20, 1938 இல், நாட்டின் முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் மயோன் எரிமலை இயற்கைப் பூங்கா என வகைப்பாடு செய்யப்பட்டு மயோன் எரிமலை தேசியப் பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]

மயோன் எரிமலை
புல்காங்கு மயோன்
லிங்னான் மலையிலிருந்து மயோன் எரிமலையின் தோற்றம், திசம்பர் 2006
உயர்ந்த இடம்
உயரம்2,463 m (8,081 அடி)[1]
இடவியல் புடைப்பு2,447 m (8,028 அடி)[1]
பட்டியல்கள்அசாதாரண
புவியியல்
மயோன் எரிமலை is located in பிலிப்பீன்சு
மயோன் எரிமலை
மயோன் எரிமலை
பிலிப்பைன்சு நாட்டில் மயோன் எரிமலையின் இருப்பிடம்
அமைவிடம்பிலிப்பீன்சு
நிலவியல்
பாறையின் வயது20 மில்லியன் வருடங்களுக்கு மேல்
மலையின் வகைசுழல் எரிமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்ஸ்கொட்ஸ்மன் பட்டன், ஸ்ரிவாட் (1858)[2]

உள்ளூர் நாட்டுப்புறவியல் தகவலின்படி, தாராகாங் மகயோன் என்ற புகழ்பெற்ற நடிகையின் பெயரே இந்த எரிமலைக்கு வைக்கப்பட்டுள்ளது.[4]

அமைவிடம் தொகு

 
அல்பே மாகாணத்தில் உள்ள மயோன் எரிமலையைச் சுற்றி அமைந்துள்ள எட்டு நகரங்கள்.

பிலிப்பைன்சு நாட்டின் அல்பே மாகாணத்தின் முக்கிய நிலக்குறியீடாக மயோன் எரிமலை அமைந்துள்ளது. அல்பே வளைகுடா கடற்கரையில் இருந்து 10 கி.மீ (96.2 மைல்கள்) தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 2456 மீட்டர் (8077 அடி) உயரம் உடையது.[5][6] இந்த எரிமலை புவியியல் ரீதியாக லெகாஸ்பி, தாரகா, கேமலிக், குயினோபதான், லிகாவ் டபாகொ, மலிலிபாட் மற்றும் டோமிங்கோ ஆகிய எட்டு நகரங்கள் மற்றும் நகராட்சிகளால் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது (லகாஸ்பியில் இருந்து வலப்பக்கமாக). மேலே இருந்து பார்க்கும் போது இந்த நகரங்கள் மயோன் எரிமலையை ஒரு பை (pie) என்ற உணவுப்பண்டத்தினை கூம்புவடிவத் துண்டுகளாகப் பிரித்துள்ளது போலத் தோன்றுகிறது.

புவியியல் பரிமாணம் தொகு

மயோன், ஒரு சிறிய மத்திய உச்சிப் பள்ளம் கொண்ட உன்னதமான சுழல்வடிவ (கலப்பு) வகைபாட்டின் கீழ் வரும் எரிமலையாகும். உலகின் சிறந்த சமச்சீர் வடிவமுடைய எரிமலைக் கூம்பாக இது கருதப்படுகிறது. இது, கடந்த காலங்களில் ஏற்பட்ட வெடிப்புகள் மற்றும் அரிப்புகளின் போது எரிமலையிலிருந்து வெளிவந்த அலைகள் மற்றும் எரிமலைக்குழம்பு வெளியேறிப் பல அடுக்குகளாகப் படிந்ததன் காரணமாகத் தோன்றியது. மேல் உச்சியிலிருந்து சராசரியாக 35-40 கோணங்களில் சரிவாக இது உள்ளது.

பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள மற்ற எரிமலைகள் போலவே, மயோன் எரிமலையும் பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

முக்கிய வெடிப்புகள் தொகு

பிலிப்பைன்சு நாட்டின் மிகத் தீவிரமான உயிர்ப்பு எரிமலையான மயோன் கடந்த 400 ஆண்டுகளில் 49 முறை வெடித்துள்ளது.[7] பிப்ரவரி 1616 இல் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. உலகச்சுற்றுப்பயணம் செய்த டச்சு ஆய்வாளர் ஜோரிஸ் வேன் ஸ்பில்பெர்கன் இந்த வெடிப்பினைப் பதிவு செய்தார்.[8] இந்த எரிமலையில் ஜூலை 20, 1766 அன்று ஆறு நாட்கள் தொடர்ச்சியாகச் சீற்றம் நிகழ்ந்த பதிவும் உள்ளது.[9][10]

1814 வெடிப்பு தொகு

 
கக்ஸாவா இடிபாடுகளில் சிதைவடைந்த தேவாலயத்தின் பழைய புகைப்படம். தேவாலயத்தில் பெரும்பகுதி 1814 மயோன் எரிமலை வெடிப்பின் போது அழிந்துவிட்டது

மயோனின் மிக நாசகரமான வெடிப்பு 1814 பிப்ரவரி 1 அன்று ஏற்பட்டது (VEI=4).[10] இருப்பினும் எரிமலைக்குழம்பு வெளியேற்றம் 1766 வெடிப்பை விடக் குறைவாக இருந்தது. எரிமலையிலிருந்து வெளிவந்த கருஞ்சாம்பல் மற்றும் பாறைக்குழம்புகள் கக்ஸாவா என்ற நகரத்தை மூடியது. மரங்கள் கருகின; ஆறுகள் சேதமடைந்தன. அண்மைப்பகுதிகள் 9 மீட்டர் (30 அடி) ஆழத்திற்குச் சாம்பலால் மூழ்கடிக்கப்பட்டன. அலபேயில் 2200 மக்கள் இந்த எரிமலை வெடிப்பால் இறந்த நிகழ்வு மயோன் வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாகும்.

1881–1882 வெடிப்பு தொகு

1881 ஜூலை 6 முதல் ஆகத்து 1882 வரை வலுவான வெடிப்பு (VEI=3) ஒன்றை மயோன் கண்டது. இந்த எரிமலைச் சீற்றம் தொடங்கி ஐந்து மாதங்களுக்குப் பின்னர் 1881 இல் நத்தார் நாளன்று சாமுவேல் நீலாண்ட் என்ற ஒரு இயற்கையியல் மற்றும் புவியியல் பேராசிரியர் தனிப்பட்ட முறையில் கண்டுபிடித்தார்.[11]

1897 வெடிப்பு தொகு

 
சூலை 21, 1928 ல் மயோன் சிகரத்தின் வெடிப்பு

மயோன் எரிமலையின் மிக நீண்ட தடையற்ற வெடிப்பு (Vei = 4) ஜூன் 23, 1897 அன்று ஏற்பட்டது. இவ்வெடிப்பின் போது 7 நாட்கள் தொடர்ச்சியாக நெருப்பு பிழம்புகளைக் கக்கியது மயோன். மீண்டும் எரிமலை வெடித்து பாறைக்குழம்பு கீழாக வடிந்து மக்கள் வசித்த பகுதிகளில் பாய்ந்தது. இதனால் எரிமலையின் அடியில் 11 கிலோமீட்டர்கள் (7 மைல்) தொலைவில் கிழக்கே பக்கே என்ற கிராமம் 15 மீட்டர் (49 அடி) ஆழத்தில் புதையுண்டது.[6]

 
செப்டம்பர் 23, 1984 ல் நிகழ்ந்த வெடிப்பு

1984 மற்றும் 1993 வெடிப்புகள் தொகு

எந்த இறப்புகளும் பதிவு செய்யப்படாத 1984 ஆம் ஆண்டு வெடிப்பின் போது பிலிப்பைன்சு எரிமலையியல் மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகளின் பரிந்துரையின் காரணமாக 73,000 இற்கும் மேற்பட்ட மக்கள் ஆபத்தான பகுதிகளிலிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் 1993 ஆம் ஆண்டு, பைரோகிளாஸ்டிக் வெடிப்பு போது, 75 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர்.[12]

புகைப்படத் தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 de Ferranti, Jonathan; Aaron Maizlish. "Philippine Mountains – 29 Mountain Summits with Prominence of 1,500 meters or greater". பார்க்கப்பட்ட நாள் சனவரி 31, 2011.
 2. "Encyclopedia Britanica, Vol. 18, 9th Ed.", pg. 749. Henry G. Allen & Company, New York.
 3. "Protected Areas in Region 5" பரணிடப்பட்டது 2013-12-19 at the வந்தவழி இயந்திரம். Protected Areas and Wildlife Bureau. Retrieved on 2011-10-15.
 4. England, Vaudine (2009-12-24). "Mount Mayon: a tale of love and destruction". BBC News. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8427922.stm. பார்த்த நாள்: 2015-11-29. 
 5. "Mayon Volcano, Philippines". Philippines Department of Tourism. Volcano.und.edu. Archived from the original on அக்டோபர் 12, 2007. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 29, 2015.
 6. 6.0 6.1 David, Lee (2008). "Natural Disasters", pp. 416-417. Infobase Publishing.
 7. "Chronology of Historical Eruptions of Mayon Volcano" பரணிடப்பட்டது 2012-04-18 at the வந்தவழி இயந்திரம். Philippine Institute of Volcanology and Seismology. Retrieved on 2012-01-03.
 8. Bankoff, Greg (2003). "Culture of disasters: society and natural hazards in the Philippines", pg. 39. RoutlegeCurzon, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-22189-3.
 9. Ocampo, Ambeth R. (2013-05-06). "The Mayon eruption of 1814". Inquirer Opinion. Retrieved on 2013-05-07.
 10. 10.0 10.1 "Mayon – Eruptive History". Global Volcanism Program. Retrieved on 2015-03-05.
 11. Samuel Kneeland (1888). Volcanoes and earthquakes. D. Lothrop Co. p. 116.
 12. "'Ominous quiet' at Mayon volcano". BBC. 2006-08-10. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4778883.stm. பார்த்த நாள்: 2015-11-28. 

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mayon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயோன்_எரிமலை&oldid=3575701" இலிருந்து மீள்விக்கப்பட்டது