1329
1329 (MCCCXXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1329 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1329 MCCCXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1360 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2082 |
அர்மீனிய நாட்காட்டி | 778 ԹՎ ՉՀԸ |
சீன நாட்காட்டி | 4025-4026 |
எபிரேய நாட்காட்டி | 5088-5089 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1384-1385 1251-1252 4430-4431 |
இரானிய நாட்காட்டி | 707-708 |
இசுலாமிய நாட்காட்டி | 729 – 730 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1579 |
யூலியன் நாட்காட்டி | 1329 MCCCXXIX |
கொரிய நாட்காட்டி | 3662 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 1 – பொகீமியாவின் மன்னர் ஜான் லித்துவேனியாவின் முக்கிய கோட்டையான மெத்வேகலிசைக் கைப்பற்றினார்.
- பெப்ரவரி 18 – எத்தியோப்பியப் பேரரசர் அம்தா முதலாம் செயோன் தெற்கு முஸ்லிம் மாகாணங்கள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தார்.
- ஏப்ரல் – எதிர்-திருத்தந்தை ஐந்தாம் நிக்கொலாசு திருத்தந்தை இருபத்திரண்டாம் ஜானினால் மத நீக்கம் செய்யப்பட்டார்.
- சூன் 7 – இரண்டாம் டேவிட் இசுக்கொட்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
- சூன் 11 – பெலிக்கானன் சமரில் உதுமானியத் திருக்கியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர்.
- ஆகத்து 9 – இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானுசு என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- சூன் 7 – இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்லாந்து மன்னர் (பி. 1274)
- ஆகத்து 30 – குதுக்து கான், யுவான், மங்கோலியப் பேரரசர் (பி. 1300)