ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ்

சர் ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ் (Sir George Gabriel Stokes, ஆகஸ்டு 13, 1819 - பெப்ருவரி 1, 1903) என்பவர் அயர்லாந்தில் பிறந்த இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் தனது தொழில்முறை வாழ்க்கை முழுவதையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கழித்தார்; இங்கு 1849 முதல் 1903 வரை கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். பாய்ம இயக்கவியல் (குறிப்பாக நேவியர்-ஸ்டோக்சு சமன்பாடுகள்) மற்றும் இயல் ஒளியியலுக்கு (Physical Optics) இவரது பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கணிதவியலில் ஸ்டோக்ஸ் தேற்றம் என்றறியப்படும் நுண்கணிதத் தேற்றத்தின் முதல்வடிவத்தை இவரே உருவாக்கினார். இவர் இங்கிலாந்தின் அரச கழகத்தின் (Royal Society) தலைவராகவும் பங்காற்றியிருக்கிறார்.

முக்கிய பங்களிப்புகள்தொகு