முதன்மை பட்டியைத் திறக்கவும்

விஸ்வாவா சிம்போர்ஸ்கா (போலிய: Maria Wisława Anna Szymborska, சூலை 2, 1923) போலந்து - பெப்ரவரி 1, 2012[1]) நாட்டைச் சேர்ந்த கவிஞர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். அவருடைய பெரும்பாலான கவிதைகள் போர் மற்றும் தீவிரவாதத்தை மையக் கருத்தாகக் கொண்டவை. போலந்து நாட்டில் அவருடைய புத்தகங்கள் முதன்மையான உரைநடை எழுத்தாளர்களின் புத்தகங்களை விட அதிகம் விற்பனை ஆகின்றன. அவர் தனது "சிலருக்கு கவிதை பிடிக்கும்" என்ற கவிதையில் ஓர் ஆயிரத்தில் மிஞ்சிப் போனால் இருவருக்கே கலைகளின் மீது ஆர்வம் இருக்கும் என வருணித்துள்ளார். சிம்போர்ஸ்கா 1996-ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை வென்றவர் ஆவார். நோபல் குழு, "இவரது கவிதைகள் மிகவும் நுணுக்கமாக மனித வாழ்வையும் இயற்கையையும் சித்தரிக்கின்றன" என்று புகழ்ந்தது.

விஸ்வாவா சிம்போர்ஸ்கா

விஸ்வாவா சிம்போர்ஸ்கா, கரகௌ, போலந்து,
23 அக்டோபர் 2009
தொழில் கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்
நாடு போலந்தியர்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
கோதே பரிசு (1991)
எர்டெர் பரிசு (1995)
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1996)
போலந்தின் வைட் ஈகிள் (வெள்ளை கழுகு) அங்கத்துவம் (2011)

விஸ்வாவா சிம்போர்ஸ்கா மிகவும் குறைவான கவிதைகளையே, ஏறக்குறைய 250, எழுதியுள்ளார். இவர் மிகவும் எளிமையானவர் என்றும் கூறப்படுகிறார். பன்னெடுங்காலமாக தமது கலையுலக சமகாலத்தாவர்களார்களால் கொண்டாடப்படுகிறார். மேலும் இவரது கவிதைகளுக்கு சிபிக்நியூ பிரைசுனர் இசையமைத்துள்ளார். 1996-ல் நோபெல் பரிசு பெற்ற பின்னர் உலக அளவில் அறியப்பட்ட எழுத்தாளரானார். இவரது கவிதைகள் ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் மட்டுமல்லாது, அராபிக், ஹீப்ரு, சப்பானியம், சீனம் போன்ற மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. "Dates of birth and death for Wisława Szymborska". Rmf24.pl. பார்த்த நாள் 2012-02-03.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்லவா_சிம்போர்ஸ்கா&oldid=2714764" இருந்து மீள்விக்கப்பட்டது