1918
1918 (MCMXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1918 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1918 MCMXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1949 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2671 |
அர்மீனிய நாட்காட்டி | 1367 ԹՎ ՌՅԿԷ |
சீன நாட்காட்டி | 4614-4615 |
எபிரேய நாட்காட்டி | 5677-5678 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1973-1974 1840-1841 5019-5020 |
இரானிய நாட்காட்டி | 1296-1297 |
இசுலாமிய நாட்காட்டி | 1336 – 1337 |
சப்பானிய நாட்காட்டி | Taishō 7 (大正7年) |
வட கொரிய நாட்காட்டி | 7 |
ரூனிக் நாட்காட்டி | 2168 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4251 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 25 - உக்ரேன் மக்கள் போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.
- ஜனவரி 27 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- பெப்ரவரி 1 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
- பெப்ரவரி 15 - யாழ்ப்பாணத்தில் வீடுகள் மற்றும் காணிகளுக்கு ஆண்டுக்கு 5 வீத வரி (போலீஸ் வரி) அறிமுகப்படுத்தப்பட்டது.
- பெப்ரவரி 16 - லித்துவேனியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- பெப்ரவரி 24 - 7 நூற்றாண்டுகளின் வெளிநாட்டு ஆட்சியின் பின்னர் எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது. ஆனாலும் அடுத்த நாளே இது ஜேர்மனியினால் பிடிக்கப்பட்டது.
- மார்ச் 12 சோவியத் ரஷ்யா தனது தலைநகரை மாஸ்கோவிற்கு மாற்றியது.
- ஏப்ரல் - இலங்கையில் The Ceylon Safety Matches Manufacturing Company ஆரம்பிக்கப்பட்டது.
- ஜூலை 17 - ரஷ்யாவின் கடசி மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் மற்றும் அவரது அனைத்து குடும்பத்தினரும் போல்ஷெவிக் கட்சியின் உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 30 - விளாடிமிர் லெனின் ஃபான்யா கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
- செப்டம்பர் - யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பம்பாய்க் காய்ச்சல் எனப்படும் உயிர்க்கொல்லி நச்சுக் காய்ச்சல் பரவியதில் பலர் இறந்தனர்.
- அக்டோபர் 15 - சிர்டி சாயி பாபா மகா சமாதி அடைந்தார்.
- அக்டோபர் 25 - அலாஸ்காவில் பிரின்சஸ் சோஃபியா என்ற கப்பல் தாண்டதில் 353 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 10 - யாழ்ப்பாணம், சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.
- நவம்பர் 17 - யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகு- மார்ச் 14 - கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (இ. 2001),
- மே 13 - தஞ்சாவூர் பாலசரஸ்வதி
- ஜூலை 18 - நெல்சன் மண்டேலா
- நவம்பர் 5 - வித்துவான் க. வேந்தனார், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1966)
- டிசம்பர் 11 - அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 2008)
- டிசம்பர் 14 - பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (இ. 2014)
இறப்புகள்
தொகுநோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - மாக்ஸ் பிளாங்க் (Max Karl Ernst Ludwig Planck)
- வேதியியல் - ஃபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber)
- மருத்துவம் - வழங்கப்படவில்லை
- இலக்கியம் - வழங்கப்படவில்லை
- அமைதி - வழங்கப்படவில்லை