சுன்னாகம்
சுன்னாகம்அல்லது சுண்ணாகம் (Chunnakam), இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்று. இதன் பழைய பெயர் மயிலணி ஆகும். ஏறத்தாழக் குடாநாட்டின் மத்தியில் அமைந்துள்ள இந்த நகரம் யாழ்ப்பாண நகரிலிருந்து, காங்கேசன்துறை துறைமுகப் பட்டினத்தை இணைக்கும் காங்கேசந்துறை வீதியில், 6 ஆவது மைலில் அமைந்துள்ளது. இதன் வடக்குப் பக்கத்தில் மல்லாகமும், தெற்கே உடுவிலும், மேற்கே கந்தரோடையும், கிழக்கே புன்னாலைகட்டுவனும் அமைந்துள்ளன.
சுன்னாகம் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
அமைவிடம் | 9°44′41″N 80°01′34″E / 9.744706°N 80.026240°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
இந்த நகரம் முக்கியமான வேளாண்மைப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால், சிறப்பாக வேளாண்மைச் சேவைகளுக்கான மைய இடமாகவும் திகழ்கின்றது. இங்கு அமைந்துள்ள காய்கறி மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை இப்பகுதியில் புகழ் பெற்றது.