காங்கேசன்துறை வீதி
காங்கேசன்துறை வீதி (Kankesanthurai Road அல்லது KKS Road, கே.கே.எஸ் வீதி) என்பது, யாழ்ப்பாண நகரத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான காங்கேசன்துறை நோக்கிச் செல்லும் பாதையைக் குறிக்கும். இது கே.கே.எஸ். (காங்கேசன்துறை என்பதன் ஆங்கிலக் குறுக்கம்) வீதி எனவும் பரவலாக அறியப்படுகின்றது. இதனுடைய நீளம் அண்ணளவாக 10 மைல்களாகும். இவ் வீதி, வண்ணார்பண்ணை, கொக்குவில், கோண்டாவில், தாவடி, இணுவில், உடுவில், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, மாவிட்டபுரம் ஆகிய ஊர்களை ஊடறுத்துச் செல்கின்றது. செப்பமற்ற மண்பாதையாக இருந்த இவ் வீதி 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முறையான வீதியாகக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது.
முக்கிய சந்திகள்
தொகுகாங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாண நகரத்திலிருந்து, குடாநாட்டின் கரையோரங்களை நோக்கி விசிறி அமைப்பில் செல்லும் வீதிகளுள் ஒன்று. இந்த வீதிகளைச் செங்குத்தாக வெட்டிக்கொண்டு கிழக்கு - மேற்காகச் செல்லும் வீதிகள் பல உள்ளன. இத்தகைய வீதிகள் காங்கேசன்துறை வீதியை வெட்டிச் செல்லுவதனால் ஏற்படுகின்ற சந்திகள் அவற்றை அண்டியுள்ள ஊர்களுக்கான மையங்களாகச் செயற்படுகின்றன. இவ்வாறான சந்திகள் சில பின்வருமாறு:
யாழ் நகருக்குள் உள்ளவை
தொகு- யாழ் ஆஸ்பத்திரி வீதிச் சந்தி (சத்திரத்துச் சந்தி)
- ஸ்ரான்லி வீதிச் சந்தி (மிட்டாசுக் கடைச் சந்தி)
- சிவன் கோயிலடிச் சந்தி
- நாவலர் சந்தி
- தட்டாதெருச் சந்தி
யாழ் நகருக்கு வெளியே உள்ளவை
தொகு- கொக்குவில் சந்தி
- குளப்பிட்டி சந்தி
- தாவடிச் சந்தி
- உப்புமடம்(கோண்டாவில்)சந்தி
- இணுவில் சந்தி
- மருதனார்மடம் சந்தி
- சுன்னாகம் சந்தி
- மல்லாகம் சந்தி
- தெல்லிப்பழை சந்தி
அண்டியுள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் நகரங்கள்
தொகு- கோட்டை முனீசுவரர் கோவில்
- கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபம்
- உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர் கொடை உத்தமர் நினைவாலயம்
- யாழ்ப்பாணம் தலைமை அஞ்சல் நிலையம்
- வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில்
- வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை
- சிவதொண்டன் நிலையம், இலங்கை
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
- வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்
- கொக்குவில் இந்துக்கல்லூரி
- இணுவில் மக்லியொட் மருத்துவமனை
- மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் கோவில்
- மருதனார்மடம் உழவர் சந்தை
- இராமநாதன் மகளிர் கல்லூரி
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடம்
- சுன்னாகம் நகரம்
- சுன்னாகம் உழவர் சந்தை
- தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில்
- மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்