மருதனார்மடம் சந்தி
மருதனார்மடம் சந்தி யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியும், மானிப்பாயில் இருந்து கைதடிக்குச் செல்லும் வீதியும் ஒன்றையொன்று வெட்டும் சந்தியாகும். இது யாழ்ப்பாண நகரில் இருந்து ஐந்தாவது மைலில் உள்ளது. இது உடுவில் பிரதேச சபைக்கு உட்பட்ட உடுவில் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும்
சேர்.பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட இராமநாதன் பெண்கள் கல்லூரி இச் சந்தியின் ஒரு மூலையில் உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைக் கல்லூரியும் இதற்கு அருகிலேயே அமைந்துள்ளது. யாழ் மக்களிடையே பெயர் போன மருதனார்மடம் வேளாண் சந்தை இதற்கு அருகிலேயே அமைந்துள்ளது. 19ம் நூற்றாண்டில் அமெரிக்க மிசனால் நிறுவப்பட்ட ஆசியாவிலேயே பெண்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது வதிவிடக் கல்லூரியாகிய உடுவில் மகளிர் கல்லூரியும் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது.