முதன்மை பட்டியைத் திறக்கவும்
வடஇந்தியாவின் இராசசுத்தான் மாநிலத்தில் உள்ள ஒரு ஊர்
தஞ்சாவூர் வயல் வெளிகள்

ஊர் அல்லது கிராமம் என்பது மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சி நிலையில் குடிசைகள் அல்லது வீடுகள் அமைத்து வாழும் ஒரு நிலப்பரப்பை அல்லது மக்கள் குடியிருப்பைக் குறிக்கும். அவ்வாறான ஊர்களில் சிறிய ஊர்கள் சிற்றூர் என்றும் பெரிய ஊர்கள் பேரூர் என்றும் அழைக்கப்படும். ஊர்களின் வளர்ச்சி நிலையே காலவோட்டத்தில் நாடுகளாகின.

வணிகத் தொடர்பாடுகளை தொடர்ந்து ஊர்களின் நடுவே வணிக மையங்களாக வளர்ச்சி பெற்ற இடங்கள் நகரங்களாக மாற்றம் பெற்றன. ஊர்கள் பெரும்பாலும் சிற்றூர்களுக்கும், நகரங்களுக்கும் இடைப்பட்ட அளவைக் கொண்டவை. புறநடையாக சில பெரிய ஊர்கள் சிறிய நகரங்களிலும் அளவிற் பெரியவையாக இருப்பதுண்டு. ஊர்கள் பொருளாதார இயல்புகளின் அடிப்படையில் நகரங்களினின்றும் வேறுபடுகின்றன. அதாவது ஊர்கள் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. விவசாயப் பொருளாதாரம் என்னும்போது, மீன்பிடித்தல் போன்ற அடிப்படையான தொழில் முயற்சிகளையும் உள்ளடக்கும்.

இலங்கையின் வரலாற்றின் முதல் ஊர்தொகு

இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய காலத்தால் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றுக்கிணங்க விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணிக்கு (இன்றைய இலங்கையின் மன்னார் பகுதி) வந்தடைந்த பொழுது ஒரு பெண்ணை (யாக்கினி) கண்டதாகவும், அவளை பின் தொடர்ந்து விசயனின் நண்பர்கள் ஒவ்வொருவராக சென்றவிடத்தில் ஒரு கிராமமும் நாயும் இருந்ததாகவும், அங்கே ஒரு மரத்தடியில் துறவி வடிவில் குவேனி நூல் நூற்றுக்கொண்டிருந்தாள் போன்ற தகவல்கள், விசயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கை தம்பபண்ணியில் மக்கள் குடியிருப்பு இருந்தது எனும் தகவலை தருகிறது.[1]

சான்றுகோள்கள்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்&oldid=2740270" இருந்து மீள்விக்கப்பட்டது